உ.வெ.ஸ்வாமினாத அய்யரின் தமிழ் தொண்டும் அவர் குருவும்.
எனக்கு தமிழ் தாத்தா என்றழைக்கப்படும் உ .வெ.சசாமினாத அய்யரை மிகவும் பிடிக்கும். அவர் மட்டும் இல்லாவிடில் இன்று நமக்கு தெரிந்த, அறிந்த பல தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள் எல்லாம் தொலைந்து மறைந்து போயிருக்கும். அவரது தமிழ் பற்றாலும், அவருடைய அயராத உழைப்பாலும், தமிழ் ஓலை சுவடிகளை தேடி தேடி அடுத்து அவற்றை சீர் செய்து, திருத்தி , பொருள் எழுதி வெளியிட்டவர் திரு அய்யர் அவர்கள். தன் சொந்த பணத்தை கூட செலவு செய்து அவர் பல சுவடிகளை திரட்டினார் என்றறிகிறோம்
இன்றுள்ளவர்கள் பலர் தமிழ் தமிழ் என்று சொல்லி தங்கள் குடும்பத்தையும், தங்களையும் தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இக்கட்டுரையில் நான் பள்ளியில் படித்ததும், மற்றும் இன்டெர்னெட்டில் இருந்து சேகரித்ததும் தான் தந்துள்ளேன்.
உ.வெ.ஸ்வாமிநாத அய்யர் அவர்கள் கும்பகோணம் அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில், பிரவரி 19ஆம் தேதி, 1855 இல் பிறந்தார்.
இவர் தந்தையார் திரு.வேங்கட சுப்பையர் தாயார் திருமதி.சரசுவதி
அம்மாள் இவர்களின் மகனாக அய்யர் அவதரித்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சாமினாத அய்யர் தனது
தொடக்கத் கல்வியையும், இசை கல்வியையும்
சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூரின் பக்கம் இருந்த திருவாவடுதுரை அதீனத்தில் தமிழ் கற்க சேர்ந்தார். அங்கு ஆதீன வித்வானாக இருந்து தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்
பெற்ற, மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மஹா வித்பவான் திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்து ஆண்டு காலம் தமிழ் பயின்று தமிழறிஞர் ஆனார்.
உ.வே.சாமினாத
அய்யர் தன் குருவான மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அபரிதமான அன்பும்
மதிப்பும் வைத்திருந்தார். அவர் தன் குருவை பற்றி எழுதியதை நான் பள்ளியில்
படிக்கும்போது பாடமாக படித்திருக்கிறேன். கீழ் வருவது நான் பத்தாம் வகுப்பில் திரு. அய்யர் அவர்கள் எழுதியிருந்த புத்தகதத்தில் இருந்து எங்கள் பாடத்தில் சேர்த்ததில் படித்தது.
மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தமிழில் மிகவும் புலமை பெற்றவர். அவரின் தமிழ் அறிவால் தான் அவருக்கு மஹா வித்வான் என்ற பட்டத்தை 'திருவாவடுதுரை அதீனம்' கொடுத்திருந்தது. அவர் அதீனத்தில் பல மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கிய பாடங்கள் எடுத்து அவர்கள் தமிழ் அறிவை கூட்டினார். இவர் தன்னிடம் இருந்த பல ஓலை சுவடிகளை தன் விருப்ப மாணவனான சாமினாத அய்யரிடம் கொடுத்தாராம். பிள்ளை அவர்கள் கி.பி 1815 இல் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். அவர் 1876இல் இவ்வுலகை னெத்தார்.
மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தமிழில் மிகவும் புலமை பெற்றவர். அவரின் தமிழ் அறிவால் தான் அவருக்கு மஹா வித்வான் என்ற பட்டத்தை 'திருவாவடுதுரை அதீனம்' கொடுத்திருந்தது. அவர் அதீனத்தில் பல மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கிய பாடங்கள் எடுத்து அவர்கள் தமிழ் அறிவை கூட்டினார். இவர் தன்னிடம் இருந்த பல ஓலை சுவடிகளை தன் விருப்ப மாணவனான சாமினாத அய்யரிடம் கொடுத்தாராம். பிள்ளை அவர்கள் கி.பி 1815 இல் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். அவர் 1876இல் இவ்வுலகை னெத்தார்.
ஒருமுறை ஒரு
செல்வந்தர் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றுக்கொள்ள வந்தாராம். அவரிடம் பிள்ளை
அவர்கள் தமிழ் இலக்கணம் தெரியுமா? என வினவினாராம். அத்ற்கு அந்த செல்வந்தர் தெரியும் என தலையாட்ட பிள்ளை அவர்கள் செல்வந்தரிடம் “எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் தெரியுமா?” என்று கேட்டாராம்.
இது ஒரு வாக்கியத்தின் முதல், இடை, கடைசொற்கள்.
அதற்கு அந்த
செல்வந்தர் “தெரியும்” என்று
தலையாட்ட, பிள்ளை அவர்கள் அவரிடம் ஒரு செய்யுளை கொடுத்து அதன் “எழுவாய், பயனிலை,
செயப்படுபொருள் “ எழுதச் சொன்னாராம்.
வந்தவர் திரு
திரு என முழிக்க, பிள்ளை அவர்கள் ‘ எழுவாய், பயன் இலை, செய்யபடுபொருள் யாது?” என்று சிலேடையாக (“எழுந்து போ, எந்த
பயனும் இல்லை, செய்ய போவது யாது”) என்று
சொல்லி அனுப்பினாராம். இப்படி பல செய்திகள் அதில் அடங்கியது.
அய்யர் அவர்கள்
திண்ணை பள்ளிகூடத்தில் படித்தவராம். அப்போது அவருக்கு ‘அய்யண்ண வாத்தியார்’ என்பவர் ஆசிரியர் ஆக இருந்தாராம். மற்ற
பசங்கள் எல்லோரும் அந்த வாத்தியார் வருவதை பார்த்தால் “ஆத்தாடி அய்யோடி அய்யண்ண
வாத்தியார் வாராண்டி’ என
ஓடுவார்களாம்.
ஒருவன் தன்
கண்ணின் பீழையை எடுத்து மற்றவன் மேல் தேய்ப்பானாம். இப்படி போகும் அந்த கட்டுறை.
தன் படிப்பை
முடித்த அய்யர் முதலில் கும்பகோணத்தில் ஒரு
கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்தார்.பின்னர் மதராஸ்
மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
உ.வே.சா கும்பகோணத்தில் பணியில் இருந்த
காலத்திலே சேலம் இராமசாமி முதலியார்
என்பவருடன் நட்பு கொண்டிருந்தார்.ஒருநாள் வழக்கம் போல் இவர்கள் உரையாடிக்
கொண்டிருக்கையில் ஜீவக சிந்தாமணியை பற்றித் தெரியுமா என முதலியார் கேட்டார்.
தனது ஆசிரியரிடம் பல சிற்றிலக்கியங்கள் மட்டுமே கற்றிருந்த உ.வே.சா
சிற்றிலக்கியங்களைத் தவிர வேறு பல தமிழ் இலக்கியங்களும் இருப்பதை அன்று தான் அறிந்தார்.
இராமாசாமி முதலியார் உ.வே.சா
வுக்கு அளித்த
நூலான ஜீவக சிந்தாமணியின் ஓலை சுவடி அக்காலங்களில் அவ்வளவாக மக்களால் ஆதரிக்கபடவில்லை, படிக்கப்படவும் இல்லை. அது சமண இலக்கியத்தில் சேர்ந்தது. சமண இலக்கியங்களைப் பற்றி அறியும்
ஆவலையும், அதனை
அழிய விடாது அச்சேற்ற வேண்டும்
எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது. இலக்கியங்களோடு
பல அழிந்த, நலிந்த ஓலை சுவடிகளையும் தேடி படிக்க வேண்டும் என்ற ஆவா அய்யருக்கு வந்தது.
உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி
அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார்.
பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது அவர் தன் மரணம்
வரை இடையறாது தொடர்ந்தது தமிழ் நூல்களைகண்டு, சேகரித்து, பொருள் எழுதி,
பிரசுரித்து வந்தார்.
பல இலக்கியங்கள், காப்பியங்கள், நூல்கள் என்று ஏராளமான சுவடிகளை தேடிப்பிடித்து, பொருள் கண்டு, அழிந்து, உடைந்து, சேதப்பட்டு இருந்தவையை சரி செய்து, இல்லாத பகுதிகளை ஆராய்ந்து அவற்றை எழுதி அவற்றை புத்தகமாக பிரசுரித்தது அய்யரின் தனி தமிழ் தொண்டாகும். இவரது அயராது உழைத்ததினால் தான் நாம் இன்று பெருமையாக தமிழ், தமிழன் புகழ் பாட முடிகிறது. சில கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட தமிழுக்கு மிக அரிய தொண்டு செய்துள்ளனர். அவர்களில் வீரமா முனிவர் என்ற ஜோசஃப் பெஸ்கி, G.U.போப் போன்றோர் அருஞ்சேவை தமிழுக்கு செய்துள்ளனர்.
சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை’’ போன்ற பல உரைநடை நூல்களையும் அய்யர் எழுதி
வெளியிட்டுள்ளார்.
நிறைந்த தமிழ்ப் புலமை, எதையும் சுவையாக எடுத்து விளக்கும்
ஆற்றல் இருந்த்தால் அய்யர் அவர்களுக்கு மாணவர்களிடம் நல்ல மதிப்பும்
மரியாதையும் இருந்தது. தமிழாசிரியர்களுக்கு அக்காலத்தில் சரியான மதிப்பு இல்லை. அவர்களுக்குக் கிடைத்த சம்பளமும்
மிகக் குறைவு. கல்லூரிச் சேவகனுக்கு அடுத்தபடி
சம்பளம் வாங்கினவர் தமிழாசிரியரே.
இவ்வாறு ஐயர் அவர்கள் பழந்தமிழ் நூல்களை அச்சிடும் தொண்டை விடாது
செய்து வந்தார்கள். ஐம்பெருங்
காப்பியங்கள் என்று சேர்த்துச் சொல்லும் நூல்களில் கிடைத்த
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, என்ற மூன்றையும் அவர்கள்
வெளியிட்டார்கள். பத்துப்பாட்டு
அவர்களுடைய உழைப்பால் தமிழுலகம் காண முடிந்தது. எட்டுத்தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன மலர்ந்தன. அழிந்தி ஒழிந்து போன பல
தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் திரு.உ.வெ.சா வினால் தான் புது உயிர் பெற்றது. அவர்
பலரிடம் போய் பழந்தமிழ் நூல்கள், ஓலை சுவடிகள் என்று கேட்டு பெற்று வந்தார்.
பலரும் அவரிடம் அவற்றை கொடுக்க மறுத்தனர். அந்த காலத்தில் போகி பண்டிகை அன்று இந்த
மாதிரி பழன்சுவடிகளை தீயிட்டு எரிப்பதும், காவேரி, கொள்ளிடம் இவற்றில் எரிவதும்
பழக்க மாகி இருந்தது. திரு. அய்யர் அவர்கள் இதற்காகவே தண்ணீரில் நின்றுகொண்டு
அந்தமாதிரி எறியப்படும் ஓலை சுவடிகளை சேகரித்து வந்து அவற்றை பதிப்பித்தார் என
தெரிய வருகிறது.
பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய இலக்கணங்கள்
வெளிவந்தன. இவற்றையன்றி, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் முதலிய பல புராணங்களும், கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், இரட்டை மணி மாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப் பிரபந்தங்களும்
குறிப்புரைகளுடன் வெளிவந்தன.
தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக உ.வ.சா வெளியிட்டார்கள்.தன் சொந்த பணத்தைக்கூட இதற்காக அவர்
செலவிட்டதாக தெரிகிறது.
ஏட்டில் இருக்கிறதை அப்படியே பெயர்த்துக் காகிதத்தில்
அச்சிடும் வேலை மட்டும் அன்று, ஐயர்
அவர்கள் செய்தது இல்லை. பல
ஏடுகளில் உள்ள பாடங்கள் பிழைபட்டிருக்கும்.
பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச் ஏடு சிதைந்திருக்கும். அவற்றையெல்லாம் பல
நூல் அறிவினாலும் இயற்கையான
தன் அறிவுத் திறமையாலும் விடா முயற்சியினாலும் கடவுளின் துணையாலும் ஆராய்ந்து சரி செய்து வெளியிட்டவர்
உ.வெ.சா அவர்கள். ஐயர்
அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழியமைத்துக் காடு நாடாக்கிய பெருந் தொண்டர். அவர்களுடைய பதிப்பு என்றாலே தமிழ்ப்
புலவர்களும் ஆராய்ச்சியாளரும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஒவ்வொரு நூலிலும்
முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப்பற்றிய குறிப்புக்களும், பிற செய்திகளும் மிகமிக அற்புதமானவை. நூலில் ஒவ்வொரு
பக்கத்திலும் அடிக்குறிப்பில் பல வகையான விளக்கங்களும் பல நூல்களிலிருந்து எடுத்த
ஒப்புமைப் பகுதிகளிலும் காட்சி
தரும். அவை ஐயர் அவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச் சான்றாக
விளங்கும். இறுதியில்
நூலில் கண்ட சொற்களுக்கும் பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும்
வகையில் அமைந்தவை ஐயர் அவர்களின் பதிப்புக்கள்.
1942-ஆம்
ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயர் அவர்கள் தம் குடும்பத்துடன்
திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார்கள். அங்கே ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி இறைவன் திருவடியை அடைந்தார்கள். அவர்கள்
விட்டு சென்ற நூல்கள், அவற்றின் உரைகள், கண்டுபிடிப்புகள் இவற்றால் தான் நாமும்,
மற்றவர்களும் தமிழின் பெருமையையும், தொன்மையையும், புகழையையும் அறிந்து
கொள்கிறார்கள். இந்த காலத்தில் பலர் தமிழ் , தமிழ், தமிழ் என் உயிர் என்று கூறி
தானும், தன் குடும்பத்தாரும் பணம் சேர்க்கையில் தமிழுக்காக வாழ்ந்து, பண்ம் செலவு
செய்து, உழைத்து, பாடுபட்ட திரு ஊ.வெ. சாமினாத அய்யரை தமிழரும், தமிழும் போற்றி
புகழ வேண்டும்.
திரு.கி.வா.ஜகன்னாதன், கலைமகள் ஆசிரியர்
அய்யர் அவர்களின் சீடராவார்
உ.வெ.சா அவர் நாமம் வாழ்க . வாழ்க அவர்
தொண்டு.
Comments
Post a Comment