தமிழ் சினிமா பாடகர் C.S.ஜெயராமன்
திரு.C.S. ஜெயராமன் ஒரு அற்புதமான பாடகர். இவர் கர்னாடக சங்கீதம் தெரிந்த பாடகர். பல நல்ல பாடல்களை இவர் தமிழ் படங்களில் பாடியுள்ளார். நடிகர் சிவாஜி கனேசனுக்கு இவர் பாடிய அத்தனை பாடல்களும் அமரத்துவம் பெற்றவை. நல்ல கர்னாடக மெட்டு
பாடல்களில் இவரது புலமை தெரியும்.
இவர் ஒரு அற்புதமான பாடகர். இவர்
பாடல்கள் கேட்க கேட்க அவ்வளவு சுகமாக இருக்கும். யாரோ வெத்திலை பாக்கு போட்டுகொண்டு
பாடுவதை போல் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் இவர். அப்போதெல்லாம் ரேடியோவில் தான் எப்போதாவது சினிமா பாட்டு ஒலி பரப்புவார்கள். இதனால் 'ரேடியோ சிலோன்' இல் தான் சினிமா பாடல்களை கேட்க முடியும். அதுவும் எங்கள் அப்பாவிற்கு சினிமா என்றாலே பிடிக்காது. அதுவும் சினிமா பாடல்கள் கட்டோடு பிடிக்காது. அவர் இல்லாத சமயம் தான் பாட்டு கேட்க முடியும்.
இவர் பாடிய பாடல்கள் அமரத்துவம்
நிறைந்தவை. அவற்றில் சில
"அன்பாலே உண்டாகும் இன்ப நிலை-
அதை
அணைத்திடாத தீபமாகும் பாச வலை -
" படம் பாசவலை.
"அன்பாலே தேடிய என் அறிவு
செல்வம் தங்கம - படம் தெய்வபிறவி
"ஆயிரம் கண் போதாது
வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்க்கு
வண்ணக்கிளியே" - படம் பாவை விளக்கு
"காவியமா நெஞ்சின் ஓவியமா அதன்
ஜீவுயமா தெய்வீக காதல் சின்னமா" -
படம் பாவை விளக்கு
"இன்று போய் நாளை வா" -
படம் சம்பூர்ண ராமாயணம்.
"கா கா கா ஆகாரம் உண்ண
எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க"- படம் பராசக்தி
"குற்றம் புரிந்தவன் வாழ்கையில்
நிம்மதி" - படம் ரத்த
கண்ணீர்
"சரச ராணி கல்யாணி-சுக சங்கீத ஞான ராணி " - படம் ராஜ தேசிங்கு
"நீ சொல்லாவிடில் யார்
சொல்லுவார் நிலவே " - படம் குறவஞ்சி
"விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே" - படம் புதையல்.
சிவாஜி கணேசனுக்கு இவர் பல பாடல்கள் பாடி உள்ளார். அவை அனைத்தும்
அற்புதமான பாடல்கள்.
ஒரு முக்கியமான செய்தி. இவர்
மு.கருணாநிதியின் மைத்துனர். அவரின் முதல் மனைவியின் சகோதரர். மு.க.முத்துவின் தாய்
மாமன். பழைய மு.க வின் எல்லா படங்களிலும் இவரது ஒரு பாடலாவது கண்டிப்பாக இருக்கும்.
கடைசி காலங்களில் இவர் பாட மறித்ததாக சொல்வார்கள்.
Comments
Post a Comment