படித்த, ரசித்த சில 'ஜோக்குகள்'
நான் படித்ததில் எனக்கு பிடித்த ஜோக்குகள் சிலவற்றை இங்கு தந்துள்ளேன்.
ஒரு டாக்டரிடம் ஒருவர் பயங்கர தலைவலி என்று போனார்.
டாக்டர் பார்த்துவிட்டு, நர்ஸை அழைத்து "இவரை பக்கத்து அறையில் டிரஸ் எல்லாம் அவிழ்த்துவிட்டு உட்கார சொல்" என்றார்.
நர்சும் அவரை பக்கத்து அறைக்கு அழைத்து சென்றாள்.
தலைவலிகாரருக்கு ஒரே எரிச்சல். பக்கத்தில் வேறோருவன் ஆடையொன்றும் இன்றி அமர்ந்திருப்பதை கண்டார்.
"என்ன இது தலைவலி என்று தானே வந்தேன், அதற்கு எதற்கு ஆடையை அவிழ்க்க வேண்டும்" என்றார்.
அவன்" யோவ், நீயாவது தலை வலி என்று வந்தாய். நான் ஒரு லெட்டர் கொடுக்க வந்தேன்" என்றான்.
****
இரெண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஓருவர் "என் வேலைக்காரன் ரொம்ப முட்டாளாக இருக்கிறான் என்ன செய்வது என்று புரியவில்லை" என்றார்.
மற்றவர் "நீங்கள் என் வேலைக்காரனை பார்க்க வேண்டுமே, அவனைப்போல முட்டாள் எங்குமே கிடைக்க மாட்டான்" என்றார்.
இருவரும் சேர்ந்து இதில் யார் அதிகம் முட்டாள் என்று பார்க்க நினைத்தார்கள்.
முதலானவர் தன் வேலைக்காரனை அழைத்து " நீ போய் நான் வீட்டில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு வா" என்றார்.
மற்றவர் அவர் வேலைக்காரனை அழைத்து ஒரு ரூபாய் கொடுத்து "போய் ஒரு மாருதி கார் வாங்கி வா" என்றார்.
இரண்டு வேலைக்காரர்களும் வெளியே சந்தித்துகொண்டனர்.
முதலாவது வேலைக்காரன் " என் முதலாளி ஒரு முட்டாள். அவர் வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்து வர சொன்னார். அவர் முன்னால் தான் போண் இருக்கிறதே வீட்டிற்கு போண் செய்து பார்க்க வேண்டியது தானே?" என்றான்.
மற்றவன் " இது பரவாயில்லை, என் முதலாளி ஒரு ரூபாய் கொடுத்து கார் வாங்கி வர சொன்னார். இன்று ஞாயிற்று கிழமை இன்று எந்த கடை திறந்திருக்கும்?" என்றான்.
****
இரண்டு குடிகாரர்கள் குடித்து விட்டு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ரயில் 'லைன்' வழியில் கண்டனர். அதன் மேல் நடக்க ஆரம்பித்தார்கள்.இருவரும் அது ஒரு மாடிப்படி என்று நினைத்து 'நடந்தனர்'.
முன்னால் போனவன் " என்னடா இது இந்த படிகள் இவ்வளவு தூரத்தில் வைத்திருக்கிறார்கள், ஏற ரொம்ப கஷ்டமாக இருக்கிறது" என்றான்.
பின்னால் போனவன் " அது பரவாயில்லைடா, இந்த கைப்பிடி தான் ரொம்ப கீழே இருக்கிறது, பிடித்து நடக்க முடியவில்லை" என்றான்.
****
ஒரு சர்தார் ரத்திரி மோட்டார் சைக்களில் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு கார் வருவதைக்கண்டார். அது இரண்டு மோட்டார் சைக்கிள் என்று நினைத்து நடுவில் வண்டியை ஓட்டினார். அடிபட்டு கீழே விழுந்தார். பயங்கர கோபத்தில் திட்டிகொண்டிருந்தார்.
வழியில் போன ஒருவன் " என்ன சர்தார்ஜி என்ன விஷயம்?" என கேட்க.
அவர் "நான் மோட்டார் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன் எதிரில் இரெண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்தன. நான் நடுவில் ஓட்டினேன். அங்கு லைட் இல்லாமல் இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்திருக்கிறது. அவன் என்னை இடித்துபோட்டுவிட்டு போனான்" என்றார்.
வழியில் போன ஒருவன் " என்ன சர்தார்ஜி என்ன விஷயம்?" என கேட்க.
அவர் "நான் மோட்டார் சைக்கிளில் போய் கொண்டிருந்தேன் எதிரில் இரெண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்தன. நான் நடுவில் ஓட்டினேன். அங்கு லைட் இல்லாமல் இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்திருக்கிறது. அவன் என்னை இடித்துபோட்டுவிட்டு போனான்" என்றார்.
****
ஜான் ஒரு நாள் சர்ச்சில் இருந்து வந்தபோது அவன் கன்னம் அடி வாங்கி சிவந்திருந்தது.
என்ன விஷயம் என்று தந்தை கேட்டார்.
ஜான் "என் முன்னால் உட்கார்ந்திருந்த மேரி ஆன்டி எழுந்தபோது அவர்கள் 'கவுண்' அவர்கள் பின் பக்கம் ஒட்டிக்கொண்டது. அதை நான் எடுத்து விட்டபோது மேரி ஆன்டி பார்த்துவிட்டு கன்னத்தில் அடித்து விட்டார்கள்" என்றான்.
தந்தை " அப்படி செய்வது தப்பு, இனி செய்யாதே" என்று சொன்னார்.
அடுத்த நாளும் ஜான் அடிபட்ட கன்னத்தோடு வந்தான். தந்தை என்னவென்று கேட்டார்.
ஜான் "இன்றும் மேரி ஆன்டி எழுந்தபோது அவர் 'கவுண்' அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது.என் பக்கம் இருந்த பீட்டர் அதை எடுத்து விட்டான். நீங்கள் அது தப்பு என்று சொன்னதால் நான் திருப்பி அதை சொருகி விட்டேன். ஆன்டி கண்டுபிடித்து அடித்து விட்டாள்" என்றான்.
****
ஜீஜோ ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனான். அங்கு ஒரு நாய் உட்கார்ந்திருந்தது. அவன் ஹோட்டல் முதலாளியிடம் "உங்கள் நாய் கடிக்குமா" என்று கேட்டான்.
அவர் கடிக்காது என்றார். அவன் அன்போடு நாயை தடவிகொடுத்தான். நாய் ஆழமாக அவனை கடித்து விட்டது.
அவன் கோபத்தோடு ஹோட்டல் முதலாளியோடு "என்ன உன் நாய் கடிக்கிறது, நீ அது கடிக்காது என்றாயே "என்று கேட்டான்.
முதலாளி 'அது என் நாய் அல்ல. என் நாய் கடிக்காது" என்றார்.
****
ஒரு நாள் இரவில் வெகு நேரம் கழித்து வந்த கணவனை மனவி உரத்த குரலில் "ஏன் லேட்டாக வந்தாய்?" என்று கேட்டாள்.
கணவன் கட்டில் அடியில் ஒருவன் படுத்திருப்பதைக்கண்டு "அவன் யார்" என கேட்டான்.
டு 'பேச்சை மாத்தாதே" என்றாள்.
****
ஒரு கணவன் திடீரென்று வீட்டிற்கு வந்தபோது அவன் மனைவி வேலைக்காரனை முத்தமிடுவதைக்கண்டான்.
கண்டுகொண்ட மனைவி மிக சாமர்த்தியமாக அவனிடம் ஓடி " பாருங்கள் இந்த வேலைக்காரன் செய்த அனியாயத்தை, உங்களுக்காக வைத்திருந்த நெய்யை தின்று விட்டான். கேட்டால் இல்லை என்கிறான். அதான் அவன் வாயை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்" என்றாள்.
****
ஒரு 'ஆப்சென்ட் மைண்டெட் ப்ரொஃபசர்' தன் மனைவியோடு இரவில் படுக்கையில் இருந்தார்.
அப்போ யாரொ கதவை தட்ட, ஆப்சென்ட் மைண்டெட் ப்ரொஃபசர்' "தன் மனைவியிடம் யார் அதுவாக இருக்கும்" என்றார்.
அவர் மனைவியும் 'ஆப்சென்ட் மைண்டெட் ' தான். அவள் "அது என் கணவராக இருக்கும்" என்றாள்.
ஆப்சென்ட் மைண்டெட் ப்ரொஃபசர், தன் துணிமணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஜன்னல் வழி கீழே குதித்து விட்டார்.
Comments
Post a Comment