கடை சங்க சோழர்களின் பொற்காலம்

எனக்கு சோழர்களை மிகவும் பிடிக்கும். அப்படி பிடிக்க காரணமானவர் மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளரான கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான். இவர் 'கல்கி' என்ற புகழ் பெற்ற தமிழ் பத்திரிகையில் 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பில் அற்புதமான ஒரு தொடர் கதையை 'கல்கி' என்ற புனைபெயரில்  எழுதி வந்தார். அது ராஜ ராஜ சோழனைப்பற்றியது. இதைப்படித்த பின் தான் ராஜ ராஜ சோழனையும் அவன் மகன்  ராஜேந்திர சோழனையும் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. இங்கு தந்துள்ளது நான் படித்து தெரிந்து கொண்டது. அதற்கு உதவியது பல நூல்கள். அவற்றில் தமிழ் நாட்டு அரசு பதிப்பான "தமிழ் நாட்டு வரலாறு , சோழ பெருவேந்தர் காலம்." மிக அழகிய நூல். நல்ல சரித்திர சான்றுகளுடன் அழகாக எழுதப்பட்டது. மிக மலிவு விலையில் நல்ல பதிப்பாக கிடைகிறது. கல்கி பார்தீபன் கனவு என்ற ஒரு சரித்திர நாவலையும் எழுதிஉள்ளார். ஆனால் அதில் சரித்திர சம்பவங்கள் எதுவும் இல்லை.

கடை சங்க சோழர் காலம் ராஜ ராஜன் வரை.

விஜயாலய சோழன் (கி.பி.848-881)

இவன் தான் கடை சங்க சோழ  சாம்ராஜியத்தை நிறுவ உதவினான். இவன் மகன் ஆதித்த சோழன் முதலில் பல்லவ மன்னன் அபராஜிதனுடன் சேர்ந்து கொண்டு பாண்டியர்களை தோற்கடிக்க உதவினான். பின்னர் அவன் பல்லவர்களையும் எதிர்த்து போர் செய்து அவர்களை தோற்கடித்து சோழ சாம்ராஜியத்தை நிறுவினான். கிட்ட தட்ட 200 வருடங்களுக்க் இந்த கடை சங்க சோழ சாம்ராஜியம் புகழ் பெற்று விளங்கியது. ஆதித்த சோழன் ஒரு பல்லவ இளவரசியை மணந்து கொண்டான். அவள் பெயர் நிருபமா என்பதாகும்.

பிற்கால சோழ மரபின் முதல் அரசன்விஜயாலய சோழன்   .அன்பில் செப்பேடுகளும் ஆனை மங்கல செப்பேடுகளும் கன்யாகுமாரி  கல்வெட்டுகளும் விஜயாலய சோழனை கடைசங்க சோழர் மரபில் உதிதவன் என உறுதி கூறுகின்றன.இவனின் காலம் முதலே தஞ்சாவூர் சோழர்களின் தலை நகர் ஆயிற்று.விஜயாலய சோழன் உடம்பில் 64 விழுபுண்கள் இருந்தனவாம்.விஜயாலய சோழன் காலத்தில் நிகழ்ந்த,வரலாற்று திருப்புமுனையாக நடந்த போர் 'திருப்புறம்பயம்' போர் ஆகும். 

(ஆர்.வி என்ற எழுத்தாளர் இந்த ஆதித்த சோழன்- அபராஜிதன்- அனுபமா ப்ற்றி ஒரு அழகான கதை எழுதி இருந்தார். அதன் பெயர் 'ஆதித்தன் காதல்' என்று நினைக்கிறேன். இதில் நிறைய சரித்திர நாயயகர்களின் பெயர்கள் வந்துள்ளன. சரித்திர சான்றுகள் உள்ளனவா என்று தெரியாது.)

பல்லவருக்கு துணையாகவும் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கு எதிராகவும் விஜயாலய சோழன் மகன் ஆதித்த சோழன் பங்கேற்று மிக அருமையாக போர் செய்து பல்லவன் அபராஜித வர்மனின் படைக்கு வெற்றி தேடி தந்தான். இந்த போரில் வரகுண பாண்டியன் தோற்று ஓடினான்.

இதன் பின்னர் வெற்றி பெற்ற பல்லவன் அபராஜித வர்மன் தன் ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டு பகுதியை சோழருக்கு கொடுத்தான்.சோழர் முடிமன்னராக சோழ மண்டலம் முழுமையும் ஆளும் உரிமை பெற்றனர்.

விஜயாலய சோழன் கி.பி.881 ல் இறந்தான்.இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன் கி.பி.771 இல் அவன் தன் மகன் ஆதித்ய சோழனுக்கு இளவரசு பட்டம் சூட்டி இருந்தான்.விரைவில் பல்லவருக்கும் சோழருக்கும் பகை மூண்டது.ஆதித்த சோழன் பல்லவர்களை வென்று தொண்டை மண்டலத்தையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான்.கன்யாகுமரி கல்வெட்டு "ஆனை மேல் இருந்த அபராஜிதனை ஆதித்தன் பாய்ந்து கொன்றான்" என்று கூறுகிரது.ஆதித்தன் கொங்கு நாட்டின் மேல் படை எடுத்து கொங்கு மண்டலத்தையும் தன் நாட்டுடன் இணைத்தான்.பல்லவ அரசி 'காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்' என்பவள் ஆதித்தனை மணந்திருந்தாள்.

கி.பி. 907 இல் திருகாளஹஸ்த்திக்கு (Sri Kalahasthi) அருகிலுள்ள தொண்டைமான் பேறாறுரில் ஆதித்தன் இறந்தான்.இவன் மகன் பரகேசரி முதலாம் பாராந்தக சோழன் கி.பி. 907 இல் அரசு கட்டிலேரினான். பாராந்தகனின் மூத்த மகன் ராஜாதித்தன் 'தக்கோல' போரில் இறந்து போனதால் இரண்டாம் மகன் கண்டராதித்தன் பட்டம் சூட்டப்பட்டான்.கி.பி.957 இல் கண்டராதித்தன் இறந்தான். இவன் மனைவி தான் செம்பியன் மாதேவி

முதல் பாராந்தகனின் மூன்றாம் புதல்வனும் பழுவேட்டரையர் மகள் வயிற்றில் பிறந்தவனாகிய அரிஞ்சய சோழன் கண்டராதித்தனுக்கு பின் ஆட்சிக்கு வந்தான்.இவனுக்கு நான்கு மனைவிகள்.இதில் கல்யாணி பூதி விக்கிரம கேசரியாகிய தென்னவன் இளங்கோ மகள்.கலயாணிக்கு மட்டும் ஒரு மகன் உதித்தான். அவனே பராந்தகன் என பெயரிடப்பட்ட 'சுந்தர சோழன்'.இவன் பேரழகன் ஆகையால் சுந்தர சோழன் என்று அழைக்க பட்டான்.

இந்த சுந்தர சோழன் மகன்  தான் பின் ராஜ ராஜ சோழனான். மிக அழகாகவும், மிகுந்த வீரத்துடன் போர் புரிந்து  பாண்டிய, சேர மன்னர்களையும், ஈழத்து மகுந்தனையும் வெற்றி பெற்றான்.

பாராந்தகன் தேவியம்மன், வானவன்மாதேவி ஆகிய இருவர் சுந்தர சோழனின் மனைவியர்.வானவன்மாதேவி திருகோவிலூர் மலையமானாட்டு சிற்றரசன் மகள் ஆவாள்.இவளுக்கு ஆதித்த கரிகாலன்,அருள்மொழிதேவன் என்ற மகன்களும் குந்தவை என்ற மகளும் இருந்தனர். குந்தவையை கீழ் சாளுக்கியர் மரபை சேர்ந்த (கருதப்படும்) வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மணம் முடித்து கொடுத்தார்.

சுந்தர சோழனின் ஆட்சி காலத்தில் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். அவனை கொன்றவர்கள் சோமன், இரவிதாசனாகிய பஞ்ஜவன், பிரமாதிராசன், பரமேசுரனாகிய இருமுடிச்சோழ பிரமாதி ராசன், மலையனூரான தேவதாசக் கிராமவித்தன் என அறியப்படுகிறது. இவர்கள் நால்வரும் பார்ப்பன குலத்தவர். உடன் பிறந்தவர். அரசின் மிக உயர்ந்த பட்டம் பெற்றவர். இக்கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.இந்த கொலைக்கு பின் சுந்தர சோழன் இரண்டொரு ஆண்டுகளில் இறந்தான். இவன் காஞ்சி பொன் மாளிகையில் உயிர் துறந்ததாக கல் வெட்டுகள் கூறுகின்றன. இவன் மனைவி வானவன்மாதேவி உடன் கட்டை ஏறினாள்.

கண்டராதித்தனின் மகனான மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், சுந்தர சோழனின் மரணத்துக்கு பின் அரியணை ஏறினான்.

முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி.985-1012)

சோழ மன்னர்களிலேயே தனி சிறப்பு பெற்றவன் ராஜ ராஜன் ஆவான். இவனை பற்றி 'விக்கிரம சோழ உலா, குலோதுங்க சோழ உலாஅ, ராஜ ராஜன் உலா, கலிங்கத்து பரணி ஆகிய இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ராஜ ராஜனுக்கு பல மனைவியர் இருந்தனர். ராஜ ராஜனுக்கு இரண்டு புதல்வர்களும் இரண்டு புதல்விகளும் இருந்தனர்.மூத்தவன் ராஜேந்திரன், இரண்டாவன் பெயர் தெரியவில்லை. பெண் மக்களில் மூத்தவள் மாதேவடிகள்.இளய பெண் குந்தவை.ராஜ ராஜன் என்ற அருள்மொழி வர்மன் கி.பி.985 இல் ஜூன் மாதம் 25 ஆம் தியதி அரியணை ஏறினான்.சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த அருள்மொழி வர்மன் தன் பாட்டி செம்பியன் மாதேவி யாலும் தமக்கை குந்தவியாலும் வளர்க்கப்பட்டான்.

ராஜ ராஜன் செய்த போர்களையும் அவன் வெற்றிகளையும் எழுத நிறைய பக்கங்கள் வேண்டும்.ராஜ ராஜன் தஞ்சையில் மாபெருங்கோவிலை கட்டி அதற்கு ராஜ ராஜெஸ்வரம் என பெயரிட்டான். இவன் சிவ பக்தனாயினும் திருமாலுக்கும் கோயில்கள் கட்டி கொடுத்தான். தஞ்சை பெரிய கோயில் ராஜ ராஜனின் அரசியல், சமுதாய, சமய, கலைப் பணிகளுக்கு எடுத்து காட்டாய் விளங்குகிறது. நுண்ணிய செய்திகள் முதல் பெரிய செய்திகள் வரை அக்கோயிலில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கலை படைப்புகள் மட்டும் இல்லாது கரண்டி செப்பு வரை எடை குறித்துள்ளான். இறைவனுக்கு பொன் மலரிட்டு தொழுது அவற்றின் எடையயும் குறித்துள்ளான்.

கி.பி 1001 இல் குரவன் உலகளந்தான் ராஜராஜமாராயன் என்பவனை கொண்டு நாட்டின் நிலம் முழுதையும் அளக்க செய்தான். நிலமளந்த கோல் 16 சாண் நீளமுடையது. அது உலகளந்த கோல் என்ற பெயர் பெற்றது. கி.பி. 1002 இல் தன் சோழ நாட்டை பல மண்டலங்களையும் பல வள நாடுகளாக பிரித்தான். சோழ மண்டலம் ஒன்பது வளனாடுகளாக பிரிக்கப்பெற்றது.

கருவூர்தேவர் இவனது குல குருவாக இருந்தார். ராஜராஜன் தான் எடுப்பித்த கோயிலில் இடைவிடாது தேவாராத் திருப்பதிகங்களை ஓதிக் கொண்டே இருக்க 48 ஓதுவார்களை நியமித்தான்.சோழ மன்னர்களிலேயே, ஏன் இந்திய மன்னர்களிலேயே மிகவும் புகழ் வாய்ந்தவன் ராஜ ராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் தான். இவன் செய்த செயல்களை விவரிக்க இந்த ஒரு சின்ன பக்கம் போதாது.

Ref: தமிழ் நாட்டு வரலாறு , சோழ பெருவேந்தர் காலம்.

Comments