சுளூர்பேட்டையில் நான், இரண்டு ராவ்கள், ஒரு இரவு



வாழ்க்கையில் பல விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவின் பல பாகங்களிலும், வெளி நாடுகளிலும் வேலை செய்த்ததால் பல வித மான மனிதர்களை நான் பார்த்து விட்டேன்.

நான் 'DRDL,Hydrabad' ல் பணி செய்யும்போது 'மிஸ்ஸைல்டெஸ்ட் (Missile Test) செய்வதற்காக ஸ்ரீஹரி கோட்டா வரவேண்டும். திடீரென்று மாலை எங்களை கூப்பிட்டு நாளை நீங்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்க வேண்டும் என்பார் விங்க் கமாண்டர் காந்தா ராவ், எங்கள் தலைவர். 4 மணிக்கு ஹைதிராபாத் எக்ஸ்பிரெஸ் கிளம்பும். ரிசர்வேஷன் ஒன்றும் கிடையாது / கிடைக்காது. ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கி கொண்டு ரயில் ஏறிவிடுவோம்.

ஃபர்ஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மென்ட்களில் ரிசர்வஷன் இல்லாவிடில் 9 மணி வரை உள்ளே உட்காரலாம். அதன் பின் வெளியேற்றிவிடுவார்கள்.அதற்கு பின் ரிஸர்வேஷன் இல்லாத காரணத்தால் வெளியே 'காரிடரில்உட்கார்ந்து கொண்டும், தூங்கிகொண்டும் அதிகாலையில் 'சுளூர்பேட்டா' ஸ்டேஷனில் இறங்கி, போர்டர்கிடைக்காத காரணத்தால் சாமான்களையும் நாங்களே இறக்கி சுமந்து வெளியில் கொண்டு வர வேண்டும். அப்போதெல்லாம் சூளூர்பெட்டா ஒரு சின்ன கிராமம். ரயில் இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும். தமிழ் நாட்டில் இருந்து 'தண்ணி' அடிக்கவும் வேறு சில விஷயங்களுக்கும் மக்கள் அங்கே வருவார்கள்.சென்னை சென்டிரலில் இருந்து கிளம்பும் பல எக்ஃஸ்பிரஸ் ரயில்கள் ஆந்திராக்குள் நுழைந்து நிற்கும் முதல் ஸ்டேஷன் சூளுர்பேட்டை. அடுத்த ஸ்டேஷன் நாயுடு பேட்டை. பஸ்ஸில் வந்தால் 'தடா' தான் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் 'border' கிராமம்.

ஸ்ரீஹரிகோட்டா சுளூர்பெட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டெர் உள்ளே போகவேண்டும். அது சிறு அழகிய தீவு. மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம் பக்கிம்ஹாம் கனாலும் என்று அழகான தீவு. போகும் வழியில் ரோட்டின் இரண்டு பக்கமும் கடல் தண்ணீர் சூழ்ந்து ரம்யமாக இருக்கும். ஒரு சின்ன பாலம் அந்த தீவை சுளூர் பெட்டவில் இருந்து வரும் ரோட்டுடன் இணைக்கும். ஸ்ரீஹரிகோட்டா Indian Space Research Organisation (ISRO)க்கு சொந்தமானது . ஆகையால் அது அவர்கள் 'கண்டிரோலில்' இருந்தது(இருக்கிறது).

எங்களுக்கு (Defence lab) ஒரு சின்ன செல் (CELL)  அங்கு இருந்தது.இங்கிருந்து எங்களின் சில 'மிஸ்ஸைல்களை' (MISSILES)  டெஸ்ட் செய்வோம். ஒரு 'மிஸ்ஸைலில்' ஏராளமான விஷயங்கள் உள்ளன. முக்கியமான சாலிட் புரபல்ஷன் இஞ்சின் ( Solid propulsion engine), லிக்விட் புரொபுல்ஷன் (Liquid Propulsion engine) இஞ்சின்,எலெக்டிரானிக் சிஸ்டம்ஸ், ஷெல் (SHELL) ,மெக்கானிகல் அசெம்ப்ளி, என்று ஏராளமான விஷயங்கள்.இதெல்லாம் டெஸ்ட் பண்ணி, அஸெம்பில் செய்து பின்னால் அதை ஃப்யர் ( FIRE) செய்யவேண்டும். இதற்காக நிறய பேர் இங்கு வரவேண்டும். பாட்ச், பாட்சாக வருவோம். இங்கு வந்தால் காலையில் இருந்து இரவு வரை கடினமான வேலை செய்யவேண்டும். விடுமுறைகள் கிடையாது. ஆஃபீசர், பியூன் என்ற வேறுபாடு கிடையாது. ஒரே வேலை, வேலை தான். வேலை முடிந்து வந்து படுத்தால் அடித்து போட்டது போல் ஒரே தூக்கம் தான். காலையில் எழுந்த பின்னர் இதே வேலை தான்.

எங்களுக்கு 'ஆஃபீசர் குவார்டர்ஸ், மெஸ்ஸுடன் ' இருந்ததால்  தங்குவதற்கோ, சாப்பிடவோ பிரச்சனை இல்லை. வந்தவர்கள் எல்லோருக்கும் அங்கு இடம் இருந்தது. அங்கேயே  ஒரு பெரிய காலனி, அங்கு வேலை செய்பவர்களுக்கு இருந்தது. எந்த வித பிரச்சனையும் இல்லை.

நான் சொல்ல வந்தது இது அல்ல.

அப்படி ஒரு முறை 'மிஸ்ஸைல் டெஸ்ட்' செய்ய வந்த போது நடந்த சம்பவம் தான் இது. ஒரு வாரம் ஸ்ரீஹரிபேட்டாவில் தங்கி ஒருவழியாக 'மிஸ்ஸைலை ஃபயர்' பண்ணிவிட்டோம். ஆனால் எதிர்பார்த மாதிரி அது போக வில்லை. பாதி தூரம் தான் எழும்பியது.

அடுத்த நாள் ஹைதிிராபாத் போக வேண்டும். அப்போது என்னிடம் வேலை செய்த இரண்டு ஃபோர்மன்கள் என்னிடம் வந்தார்கள். ஒருவர் பெயர் ராம ராவ். இவர் ஹைதிரபாதில் சரியாக வேலை செய்யவில்லை என்று ஸ்ரீஹரிகோட்டா  'செல்லுக்கு'  மாற்றப்பட்டவர். அங்கேயே மனைவி மக்களுடன் தங்கி இருந்தார். இன்னொருவர் பெயர் ஈஸ்வர ராவ். இவர் என்னுடன் ஹைதிராபாதில் இருந்து வந்தவர். இரண்டு பேரும் என்னை விட 10 வயதுக்கும் மேல் பெரியவர்கள்.

இவர்கள் சூளூர்பேட்டா போய் 'ட்ரிங்க்ஸ்' குடிக்கலாமா என்று கேட்டார்கள். நான் 'டிரிங்க்ஸ்' குடிப்பது இல்லை. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் சும்மா உட்கார்ந்து என்ன செய்வது என்று எண்ணி சரி என்று அவர்களுடன் கிளம்பினேன். எனக்கு ஆஃபீசர், டெக்னீஷியன் என்ற வேறுபாடு கிடையாது. எல்லோரிடமும் நண்பனாக பழகுவேன். சரி போகலாம் என்று சொல்லி பஸ் ஏறி சுளூர்பேட்டா போனோம். கவர்மென்ட் பஸ் ஸ்ரீஹரிகோட்டா டவுண்ஷிப்பில் இருந்து சுளூர்பேட்டைக்கு ஒரு மணி இடைவேளைக்கு ஒரு முறை போய் வரும். நான் சொல்வது ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.

 சுளூர்பேட்டா அப்போது மிக சிறிய குக்கிராமம். ஒரு வசதியும் கிடையாது. ISRO க்கு வருபவர்கள் தான் அங்கு புதியவர்கள் .இவர்களுக்காக சில கடைகளும் வசதிகளும் கிடைக்கும்.நாங்கள் போய் பார்த்ததில் ஒரு சின்ன ஓலை கட்டடம் தான் இருந்தது. அந்த கட்டதிற்கு எங்களை ராம ராவ் அழைத்து சென்றார். அப்போது ‘பார் எல்லாம் கிடையாது. ஒரு பெரிய ஓலை கொட்டகையில் சில மர பெஞ்சுகள், மேசைகள் போடப்பட்டு இருந்தன. ராம ராவ் என்னிடம் என்ன குடிக்கிரீங்க என்று கேட்டார். என்ன வேணுமென்றாலும் சொல்லு, ஆனால் ஸ்டிராங்காக ஏதும் வேண்டாம், எனக்கு பழக்கமில்லை என்றேன்.

ஒரு சின்ன பையன் வந்து 'ஏமி காவல' ( என்ன வேணும்?) என்று தெலுங்கில் கேட்டான்.  ராம ராவ் ஏதோ டிரிங்க்ஸ் ஆர்டெர் செய்தார்.மூன்று பேரும் ஏதோ டிரிங்க்ஸ் சாப்பிட்டோம். ரெண்டு ராவுகளும் அதிகமாகவே குடித்தனர். பழக்கம் போல.  ராம ராவ் அந்த கிராமத்தில் தான் மிக்க நேரமும் கழித்ததை போல் இருந்தது.அங்கு எல்லோரிடமும் நன்கு பேசி நட்புடன் இருந்தார். குடித்தற்கு காசு  கொடுத்தது நான் தான். இது எதிர்பார்த்தது தான்.

ஈஸ்வர ராவ் குடித்து முடித்ததும் 'ஒரு மாதிரி' ஆகி விட்டார். அவருக்கு மூடு வந்து விட்டது. மேசையை ஓங்கி குத்தி தெலுங்கில் 'நாக்கு அம்மாயி காவாலே' ( எனக்கு பெண்ணு வேணும்) என்று கத்த ஆரம்பித்தார்.

ராம ராவ் அவரிடம் 'இப்புடு ஒத்து ரா, அரவாடு உன்னாரு கதா?, கூர்ச்சு ரா". என்றார். [ இப்போ வேண்டாம், இந்த அரவாடு (தமிழன்) இருக்கிறார். உட்கார்)] என்றார். தெலுங்கர்கள் தமிழர்களை அரவாடு என்றும் தமிழை அரவம் என்று நம் முன் கூட அழைப்பார்கள். அரவம் என்றால் பாம்பு. அரவாடு என்றால் பாம்பை போல உள்ள மனிதன். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி நம் முகத்திற்கு நேராக சொல்வார்கள்.

எனக்கு சுமாரான தெலுங்கு தெரியும் என்பது இவர்களுக்கு தெரியாது.

ஈஸ்வர ராவை அடக்க முடியவில்லை. ராம ராவ் என்னை பார்த்து கண்னை சிமிட்டி என்ன செய்யலாம்' என்று கேட்டார். எனக்கு பயம். இந்த மாதிரி பழக்கம் இல்லை. தவிர நான் கையில் வைர மோதிரம், கழுத்தில் தங்க சங்கிலி அணிந்திருந்தேன். வேண்டாம் என்றேன். ஆனால் ஈஸ்வராவ்  பயங்கர மூடில் இருந்தார். அவர் அடங்குவதாக தெரியவில்லை. எனக்கு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரிய ஆர்வம் அதிகமாயி சரி போனா போகிறது என்று தலையை ஆட்டினேன்.

ராம ராவ் எங்களுக்கு டிரிங்க்ஸ் சப்பளை செய்த பையனை அழைத்தார். அவனுக்கு 12 வயது இருக்கும். அவனிடம் தெலுங்கில் ஏதோ கேட்க அவன் போய் இன்னொரு பையனை கூட்டி வந்தான். இந்த பையனுக்கும் அதே 12 வயது தான் இருக்கும்.

அவனிடம் ராம ராவ் ஏதோ கேட்க அவன் அவர்களை எங்கேயோ அழைத்தான். இவர்கள் இருவரும் அவன் பின்னால் போக புறப்பட்டார்கள்.
எனக்கு பயம், கூச்சம். "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் போய் வாருங்கள். என்றேன்."

ராம ராவ், "வேண்டாம் நீங்கள் இங்கே தனியாக இருக்க வேண்டாம், நீங்கள் செயின், மோதிரம் எல்லாம் போட்டிருக்கிறீர்கள் ஆகையால் எங்களுடன் வாருங்கள். இந்த இடம் அவ்வளவு பாது காப்பு அல்ல" என்றார். அந்த கொட்டகையில் எங்களை தவிர வேறு யரும் இல்லை. ஒரே ஒரு ஆள் கல்லாவில் இருந்து ரேடியோவில் தெலுங்கு பாட்டு கேட்டு கொண்டிருந்தான்.

நானும் அவர்கள் பின்னால் சேர்ந்து, இருட்டான ஒரு ஒற்றை அடி பாதையில் போனோம். அந்த பையன் வழி காட்ட முன்னால் போக, கொட்டீஸ்வர ராவ், ராம ராவ், அவர் பின் சிறிது தூரத்தில் நான் என்று ஊர்வலமாக நாங்கள் கொஞ்ச தூரம் போனோம். எனக்கு ஒரு இழவும் தெரியவில்லை. கும்மிருட்டு. வழியில் பாம்பு, கீம்பு இருக்குமோ என்று பயம் வேறு. நகைகள் உள்ளதால் அந்த பயம் வேறு. தவிர இந்த மாதிரி 'மாட்டரில்' மாட்டிக்கொண்டால் விஷயம் சந்தி சிரிக்கும், வேலைகூட போய்விடும், அகப்பட்டு கொண்டால் என்று சிந்தனை பலமாக ஓடியது.

முன்னால் போய்கொண்டிருந்த ஈஸ்வர ராவ் திடீரென்று நின்று அங்கிருந்த யாரையோ கட்டிபிடித்து அணைத்து கொண்டார். அந்த சிணுங்கல் சத்தம் கேட்ட பின் தான் அது ஒரு பெண் என்று எனக்கு புரிந்தது. அந்த 'கும்' இருட்டில் எப்படித்தான் அந்த மனிதன் அந்த பெண்ணை இனம் கண்டு கொண்டாரோ தெரியவில்லை. அந்த பெண் தெலுங்கில் 'இங்கு வேண்டாம் உள்ளே போய் வைத்து கொள்ளு' என்றாள். எல்லோரும் உள்ளே போக நானும் பின் தொடர்ந்தேன்.அங்கு ஒரு ஓலை குடிசை போல் வேலி கட்டிய ஒரு கட்டடம் இருந்தது. அந்த குட்டி பையன் முதலில் போக, ஈஸ்வர ராவ் அந்த பெண்னை அணைத்துக்கொண்டு பின்னால் போக , அதன் பின்னால் ராம ராவ் போக, கடைசியில் நான் பயந்து பயந்து போனேன்.

உள்ளே போனபின் கப கப என்று பத்து, பதினைந்து பெண்கள் உள்ளிருந்து வந்து இரண்டு ராவுகளையும் சூழ்ந்து கொண்டனர். நான் தூர இருட்டில் நின்றதால் யாருக்கும் தெரியவில்லை.

ராம ராவ் அந்த பெண்களுடன் பேசி அவர்கள் உடலில் கை வைத்து என்னென்னவோ செய்த பின் ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்து ஈஸ்வர ராவுடன் அனுப்பி வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஈஸ்வர ராவ் வழியில் கட்டியணைத்த பெண் இல்லை. அந்த பெண் பணம் கேட்டாள். ராம ராவ், ஈஸ்வர ராவின் பர்ஸை எடுத்து 50 ரூபாயை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு அந்த பர்ஸை தன்னிடமே வைத்து கொண்டார்.

இது ஏன் என்று நான் கேட்டேன். அந்த பெண் அதிக பணம் வைத்திருந்தால் எடுத்து கொள்வாளாம் என்று ராம ராவ் சொன்னார். பின்னர் என்னிடம் 'நீங்கள் போறீங்களா?' என்று கேட்டார்.

'அய்யா ஆளை விடுங்க சாமி, நான் ரொம்ப பயந்த ஆளு, நீ வேணுமென்றால் போ நான் பணம் தருகிறேன்' என்றேன்.

ராவ் "இங்கே 50 ரூபாயிக்கு கிடைக்கும் பெண் போல் கிடைக்க ஹைதிரபாதில் 500 ரூபாய் கொடுக்கணம் என்றார்"

நான் இல்லை நான் திரும்பி போகிறேன் என்றேன். எனக்கு பயமாக வேறு இருந்தது. போலீஸ்காரன் வந்தால் என்னையும் சேர்த்து பிடித்துகொண்டல்லவா போவான் என்று பயம்.ராம ராவ் என்னுடைய பயத்தை களைந்து ஆபத்பாந்தவானாக 'எனக்கு இங்குள்ள SI யை தெரியும் அதனால் பயப்பட வேண்டம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ஆளிடம் தெலுங்கில் 'மாட்டலாட' ஆரம்பித்துவிட்டார்.

நான் ஒரு ஓரத்தில் கழுத்து செயினை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

ஐந்து நிமிடங்களில் ஈஸ்வர ராவ் விஷயங்களை முடித்து கொண்டு வெளியே வர நாங்கள் அங்கிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.

ஈஸ்வர ராவ் 'நான் விஜயவாடா போகிறேன் என்றதால் அவரை பஸ் ஏத்திவிட்டோம். அவருக்கு என்னை பார்க்க ஒரே கூச்சம். அவர் 'இந்த ராம ராவ் என்னை பெண்ணிடம் அனுப்பிவிட்டான் இப்போ எனக்கு சீக்கு வரபோகுது, என் பர்ஸில் இருந்து பணத்தை திருடி விட்டான்' என்று கத்திக்கொண்டே பஸ் ஏறி போனார்.

பாவம் ராம ராவ். அவர் மற்ற ராவ் கேட்டுகொண்டபடி தான் 'உதவிதான் செய்தார்.

இதன் பின் நாங்கள் எங்கள் வழிக்கு போகலாம் என்று பார்த்தால் மணி 11. இனி எப்படி ஸ்ரீஹரிகோட்டா போவது என்று ராம ராவிடம் கேட்டேன்.

அவர் இங்கேயே ரூம் எடுத்து படுத்து விட்டு காலையில் போகலாம் என்றார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. அப்போது ஒரு லாரி வந்தது. அந்த லாரி ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சாமான் கொண்டு போவதால் எங்களையும் ஏற்றிகொண்டு போக சம்மதித்தார் டிரைவர். அவர் நல்ல குடி போதையில் இருந்தார். அவர் வண்டி ஓட்டியதை பார்த்தால் இரெண்டு பக்கம் இருக்கும் கடல் தண்ணியில் எப்போது வ்ழுவோம் என்ற பயன் வந்து விட்டது. அவருக்கு வெளியிலும் தண்ணி உள்ளையம் தண்ணி.

நாங்கள் அரை மணி நேரத்தில் லாரியில் பயணம் செய்து ஸ்ரீஹரிகோட்டா கேட் வந்து சேர்ந்தோம். ராவ் ஐந்து ரூபாய் டிரைவர் கையில் கொடுத்து விட்டு வர நாங்கள் பொடி நடையாக எங்கள் ரூமுக்கு நடக்க ஆரம்பித்தோம். அப்போது பின்னால் திடு திடு என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் அந்த டிரைவர். யாரோ லாரியில் வந்தவர் பணம் கொடுக்காமல் போய் விட்டாராம். அவரை தேடி வந்தாராம். உணமையில் அப்படி யாரும் வந்தார்களா இல்லை குடி மயக்கத்தில் அந்த லாரி டிரைவர் அப்படி ஓடி வந்தாரா என்று தெரியாது.ராவ் அப்படி யாரும் அங்கு வர முடியாது என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பினார். அதன் பின் ராம ராவ் அவர் வீட்டிற்கும் நான் என் ரூமுக்கும் போனோம்.

ராம ராவிற்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவி ஹைதிராபாதில் நர்ஸாக பணி புரிந்து வந்தாள். இந்த விவரம் ஈஸ்வர ராவ் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

Comments