நான் முதல் முதலில் 'கள்ளு' குடித்தது
இது நடந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. நான் முதல்
முதலில் கள்ளு குடித்தது காலேஜில் நான்காவது வருடம் படிக்கும்போது. நான் ரொம்ப நல்ல பையன். வீட்டில் இருந்து 4 ஃபர்லாங் தூரம் நடந்து பஸ் பிடித்து ஏழு மைல் சன்ஜாரம் செய்து காலேஜ் போய் படித்து மாலை 5 மணிக்குள் வீட்டிற்கு வரும் நல்ல பையன். லேட் ஆனால் அண்ணன் பஸ் ஸ்டாண்டுக்கு வருவான். வீட்டில் அம்மா அர்ச்சனை தட்டுடன் நிற்பாள். சினிமா பார்க்க கூட மாதம் ஒரு தடவை போக கெஞ்சினால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா பாட்டு கேட்க கூட கஷ்டம் தான்.
நான இஞ்சினீரிங் நான்காம் வருடம் படிக்கும் போது எனக்கு இரண்டு நல்ல நண்பர்கள்.ஜோஸ்லின் என்னும் கிறிஸ்தவ நண்பன்.கொச்சியை சேர்ந்த ஜோஸ்லின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான்.இன்னொரு நண்பன் . சந்திரன்சேகரன் நாயர் .கொஞ்சம் கஷ்ட ஜீவிதம் நடத்தும் குடும்பத்தில் இருந்து வந்தவன். தந்தையார் அந்த கால பட்டாளத்தில் ஜவானாக இருந்து ஓய்வு பெற்றவர்.ஆகையால் மிலிடரி ‘ஸ்காளர்ஷிப்பில்’ தான் நாயர் படித்து வந்தான். ஆனால் அந்த ஏழ்மை நிலமையிலும் பயங்கர கம்யூனிச வெறி பிடித்தவன். நக்ஸல்பாரி இயக்க விஷயங்களில் பெரிதும் நாட்டம் கொண்டவன். ஆனால் மிக நல்ல பையன்.
ஒரு நாள் என் நண்பன் ஜோஸ்லின் என்னையும் சந்திரசேகரன் நாயரையும் 'கள்ளு' குடிக்க அழைத்தான். கள்ளு என்பது தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் சுண்ணாம்பு சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட ஒரு மது பானம். உண்மையில் ஏழைகளின் மது பானம் என்று சொல்லலாம். கொஞ்சம் மலிவானது. ஆகையால் பலரும் இதனை விரும்பி குடிப்பதுண்டு. ஏழைகளின் மயக்க பானம் என்றும் சொல்லலாம். இந்த கள்ளும் சாராயமும் லகரி பானங்கள். ( சாராயம் distil செய்யப்பட்ட மது). அதிக மயக்கம் கொடுக்கும் .
நாங்கள்( நானும் சந்திர சேகரனும்) அது வரை எந்த மது பானங்களையும்
அருந்தியதில்லை. நான் 'கள்ளு' குடிக்கமாட்டேன்
என்று
கூறி
வர
மறுத்தேன். ஆனால் ஜோஸ்லின் விடாப்பிடியாக
என்னை
இழுத்துக் கொண்டு போனான்.சந்திர சேகர நாயரும் எங்களுடன் வந்தான்.நாங்கள் மெதுவாக நடந்து ஹாஸ்டலுக்கு
பின்னால் இருந்த ஒரு குடியிருப்புக்கு
போனோம். அங்கு ஒரு சிறு குடிசை முன்னால் சாக் பீஸால் 'கள்ளு' என்று மலயாளத்தில்
பெரிசாக எழுதி இருந்தது. ( கேரள மதுபான கடைகளில் ‘கள்ளு’, சாராயம் என்று பெரிதாக மலயாளத்திலும், தமிழிலும் எழுதியிருக்கும். அந்த
காலத்தில் தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்ததால் பலர் கேரளாவிற்கு சென்று
மது அருந்துவர். இப்போதும் அந்த பழக்கம் இருக்கிறது.) அந்த கடைக்குள் போன ஜோஸ்லின் அந்த கடைக்காரனிடம்
ரொம்ப சகஜமாக பேசி மூன்று கிளாஸ் கள்ளுக்கு 'ஆர்டெர்' கொடுத்தான்.
அங்கே
மூன்று பெரிய பானை தரையில் வைத்திருந்தது.
அந்த
கடைக்காரன் ஒரு பானையை திறந்து,ஒரு அகப்பையில் ( அகப்பை என்பது தேங்காயின் சிரட்டையை இரெண்டு துளை போட்டு
அதில் ஒரு நீண்ட கம்பை சொருகி இருப்பார்கள்) அந்த பானையில் இருந்த மோர் போன்ற திரவத்தை மூன்று கிளாசில் (கண்ணாடி தம்ளரில்) ஊற்றி எங்களுக்கு
கொடுத்தான்.
அந்த திரவம் ஒரே புளிச்ச நாற்றம் அடித்தது. நான் எனக்கு வேண்டாம் என்று திருப்பி கொடுக்க எத்தனிக்கும் போது ஜோஸ்லின் என்னை அதட்டி அதை குடிக்க சொன்னான். அது ஒரே கசப்பாக நாற்றத்தோடே இருந்தது. நான் இரண்டு வாய் குடித்து விட்டு தூர ஊற்றிவிட்டேன். அவர்கள் இருவரும் என்னை திட்டினார்கள், அதை களைந்ததற்காக. அவர்கள் தன் பங்கை குடித்து விட்டனர்.
குடித்து முடித்து விட்டு ஜோஸ்லின் ஹாஸ்டலில் தன் அறைக்கு சென்று விட்டான். நானும் சந்திர சேகரனும் கல்லூரியை விட்டு வெளியில் வந்து 'பஸ்' பிடித்து அவர், அவர் வீட்டிற்கு போனோம். சந்திர சேகரன் நாயர் வீடு கோவளத்தின் அருகில் இருந்ததால் அவன் இரண்டு பஸ் மாறி வீட்டிற்கு போகவேண்டும்.
அடுத்த நாள் காலை கிளாஸிற்கு போனால் எல்லா பையன்களும் கூடி நின்று ஒரே கூச்சலாக "சாமி கள்ளு குடிச்சு, சாமி கள்ளு குடிச்ச"என்று கூச்சலிட்டார்கள்.(சாமி என்றது என்னைத்தான். நான் Non Veg எதுவும் சாப்பிடாததினால் என்னை சாமி என்று அழைப்பார்கள்). பிராமணர்களையும் சாமி என்று அழைப்பதுண்டு). இதில் பெண்களும் சேர்ந்து கொண்டார்கள். அப்போது கிளாஸ் எடுக்க வந்த ஹரிதாஸ் என்ற 'மாத்தமாட்டிக்ஸ்' லெக்சரர் கூட இந்த ஆரவாரத்தில் பங்கெடுத்துகொண்டார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நான் கள்ளு குடித்ததை தவறாகவும் குற்றமாகவும் நினைத்த நண்பர்கள் சந்திர சேகரன் நாயர் குடித்ததை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. இது தான் சந்திர சேகரனுக்கு ஒரே ஆற்றமையாக இருந்தது. தான் தப்பு செய்வதை நண்பர்கள் சகஜமாக எடுத்துக்கொண்டார்களே என்று.கிட்டதட்ட அந்த நண்பர்கள் எல்லோரும் 'தண்ணி' அடிப்பவர்கள் தான். நானும் அவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆனது எல்லோருக்கும் மகிழ்சியான செய்தி ஆகிவிட்டது. (இந்த கூட்டத்தில் நான் ஒருத்தன் தான் தமிழன் )

நண்பரே உங்களுக்கு இது மறக்க முடியாததுதான் ஆனால் இது பதிவு செய்து மற்றவர்கள் படிக்கவேண்டிய செய்தியா ? மது அருந்த கூடாது என்பதல்ல உங்கள் பதிவை படிக்கும் என்னை போன்றோருக்கு எத்தகைய அனுபவத்தைகொடுக்கும் ?
ReplyDeleteGood morning and thanks for reply and comment. Really nice of you. Please continue to read and share your comments which I would like to have and collect.என்னுடைய பதிவை படித்ததற்கு மிக்க நன்றி. நான் எழுத்தாளன் அல்ல. கொஞ்சம் எழுதிப்பார்க்கலாம் என்ற முயற்சி இது.
ReplyDeleteஇது என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நடந்தது. நன்றாக படித்துப்பாருங்கள். நான் அதில் குடிக்கவே இல்லை. குடித்ததையும் துப்பி விட்டேன். கல்லூரிகளில் படிக்கும் போது நாம் செய்யும் சிலவற்றை பகர்ந்திருக்கிறேன். இதைப்படித்துவிட்டு யாரும் குடிக்க போவதில்லை, குடிக்காமலும் இருந்ததில்லை. என்னுடைய பல வருட வாழ்க்கையில் social drinking' பலமுறை செய்யவேண்டி உள்ளது. என்ன செய்வது? ஆனால் மது பானங்கள் குடிப்பதில்லை, சிகரெட் 'வலிப்பதில்லை'.
I thank you again and please continue to read and comment. Have a nice and beautiful day.