சென்னையில் ஒரு 'பஸ்' பயணம், வெகு நாட்களுக்கு பின்.


ரொம்ப நாட்களுக்கு பின் நேற்று பஸ்சில் போக நேர்ந்தது. வீட்டுப்பக்கத்தில் இருக்கும் மருந்து கடைக்காரர் தன் மகன் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். ரொம்ப தூரம். எங்கோ காட்டுப்பாக்கத்தில் கல்யாணம். பஸ் தான் சால சிறந்தது என்று அதில் போனபோது பல விஷயங்கள் புரிந்தன.கல்யாண மண்டபம் கிட்டதட்ட பங்களூர் பக்கம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டியது ஆகிவிட்டது. இரெண்டு பஸ் ஸ்டாண்டுகளின் நடுவில் இருந்தது கல்யாண மண்டபம்.

ஆர்காட் ரோட்டில் பயணம் செய்யும்போது வடபழனியில் இருந்து போரூர் போக 30 நிமிடங்கள். தூரம் 5 கிலொமீட்டர்.அதாவது ஒரு கிலோமீட்டர் போக 6 நிமிடங்கள்.

ரோடு பல இடங்களில் அகலம் குறைந்து பயணம் தாமதப்படுகிறது.Too many encroachments. ஒரே டிராஃபிக் கியோஸ் (Traffic chaos).விருகம்பாக்கத்தில், வல்சரவாக்கத்தில் ரோடு ரொம்ப குறுகி உள்ளது.

போரூர் ஜுங்க்ஷனில் 25 நிமிடங்கள் நின்றால் தான் நேராக அல்லது வலது பக்கம் திரும்ப முடியும். இதன் வழி தான் எல்லா அரசு பஸ்களும் போகின்றன. பாங்களூர் போகும் நாஷனல் ஹைவே இது என்பதை நினைவு கூறுங்கள்.  முன்பிருந்த தி.மு.க அரசு ஒரு மேம்பாலம் அங்கு கட்ட நினைத்து  வேலை நடந்தது. அந்த அரசுபோனபின் அதை யாரும் கவனிக்கவில்லை என தோன்றுகிறது. அது இன்னமும் கட்டாமல் அப்படியே இருக்கிறது அந்த அரசு போன பின். பாதி கட்டிய பில்லர்கள் தான் இருக்கின்றன. (ஒரு நகரம் முன்னேர வேண்டுமென்றால் ரோடு வசதிகள் வேண்டும். ஹைதிராபாத், பாங்களூரு எல்லாம் மிகவும் முன்னேற்றம் அடைந்து விட்டன. இங்கோ? சொன்னால் அடிக்க வருவார்கள்.)

இந்த கதியில் போனால் சென்னையில் பல ரோடுகளில் பயணம் செய்ய முடியாது.

முதியோர் , ஊனமற்றவர்கள் என்ற சீட்டில் அவர்களை தவிர எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள்.

பெண்களை சார்ந்து / சேர்ந்தே பல ஆண்கள் நிற்கிறார்கள். அதாவது மூன்று லைன்களாக  இரெண்டு பக்க இருக்கைகளின் நடுவில் நிற்கிறார்கள். முன்னால் போக யாரும் முற்படுவதில்லை.பல ஆண்கள் ஒட்டி நிற்கிறார்கள். இதனால் முன்னால், பின்னால் போகமுடியவில்லை. ஏறும், இறங்கும் இடத்தில் கூட்டமாக நிற்கிறார்கள்.

இரண்டு கதவுகள் வழியும் ஏறி இறங்குகிறார்கள். இது சென்னையின் 'பண்பாடு'. ஹைதிராபாத், டெல்லி, மும்பை இங்கெல்லாம் இது நடக்காது.

பெண்களுக்கு என்று சீட் இருக்கிறது அப்படியும் ஆண்கள் சீட்டில் பெண்கள் அமர்ந்து பயணம் செய்கிறார்கள்.அவர்கள் சீட் காலியானாலும் எழுவதில்லை. டெல்லி, மும்பையில் NO RESERVATION for women.
பலருக்கும் குளிக்கும் பழக்கம் உள்ளதோ என சந்தேகம் எழுகிறது.பலரும் ஒரு பெரிய பையை முதுகில் சுமந்து வருகிறார்கள். அந்த பையால் எல்லாரையும் இடித்துக்கொண்டு நடக்கிறார்கள், நிற்கிறார்கள்.

நிற்பவர்கள் பலர் பக்கத்தில் இருக்கும் சீட்டில் தங்கள் பின்பக்கத்தை வைத்து இடிக்கிறார்கள், அமுக்குகிறார்கள், சில பேர் இருப்பவர்களின் தோளில் அமர்ந்து கொள்கிறார்கள். ( அதாவது அப்படி சாய்ந்து நிற்கிறார்கள்.)

பஸ்ஸில் ஏறினவுடன் அங்கேயே நின்றுவிடுகிறார்கள். ஏறுபவர்கள் இறங்குபவர்கள் ரொம்ப சிரமத்துடன் தான் ஏறி இறங்க வேண்டியுள்ளது.

அந்த வழியில் பயணிக்கும் பலருக்கும் நான் போய் சேரவேண்டிய  'காட்டுப்பாக்கம்' எங்குள்ளது என்று தெரியவில்லை. கடேசியில் ஒரு மலயாளம் பேசும் பையன் உதவினான்.

பலரும் முன்னால் ஏறிக்கொண்டு கண்டக்டர் கேட்டால் மட்டும் டிக்கட் வாங்குகிறார்கள். சிலர் பணத்தை அப்படியே 'பாஸ் ஆன்' செய்து டிக்கட் வாங்குகிறார்கள்.

எந்தவித உடல் பயிற்சியும் செய்யாதவர்கள் இந்த பஸ்களில் நின்று கொண்டு பயணித்தால் இது ஒரு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும். இரண்டு கையாலும் உயரமான கம்பியை பிடித்துக்கொண்டு பஸ் போகும் வேகத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டு, நிறுத்துபோதும் புறப்படும்போதும் ஏற்படும் ‘ஜெர்க்’ களை (Jerks and shocks) சமாளித்து நிற்பது எந்த ஜிம்னாஸியத்தையும் விட நல்ல எஃக்ஸர்ஸைஸ் தான். எந்த காசும் கொடுக்காமல் 6 பாக், 12 பாக் எல்லாம் கிடைக்கும்.

இதை தவிர நமது பாதத்தை ஒவ்வொருவரும் மிதித்து மிதித்து உரம் ஏற்றி விடுகிறார்கள். அந்த காலால் யாரையாவது உதை விட்டால் தமிழ் பட கதாநாயர்கள் உதைப்பது போல் உதை கொண்டவன் 10 கிலோமீட்டெர் அப்பால் போய் விழுவான்.

கண்டக்டர் டிக்கட் கொடுக்கும்போது தன் நாவில் தொட்டு தொட்டு பலருக்கும் தன் எச்சில் தானம் செய்கிறார். இதனால் வரும் நோய்களுக்கு டிபார்ட்மென்ட் பொருப்பாளி இல்லை.

பஸ்ஸில் ஏறியவுடன் பின்பாக்கட்டில் கையை விட்டு பர்ஸ் எடுக்கிறேன் என்று உட்கார்ந்திருப்போரின் முகம், தலையை இடிப்பவர்கள் ஏராளம்.

பலரும் ரொம்ப சத்தமாக ‘மொபைல்’ போணில் தங்கள் வீட்டு 'விஷயங்களை’ பேசி எல்லோருக்கும் தொந்தரவும், பொழுதுபோக்கும் 'டைம் பாசும்' கொடுக்கிறார்கள். ஒருவர் யாரையோ மிகுந்த கெட்ட வார்த்தைகளால் திட்டிகொண்டிருந்தார். அது ஒர் பெண்ணாக இருக்க வேண்டும். ( அவர் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகள் அப்படிப்பட்டவை).

ஆகையால் ரொம்ப 'போர்' அடித்தால் ஒரு பஸ் பயணம் ஒரு புதிய 'அனுபவத்தை' கொடுக்கும். ஆனால் பாவம் தினந்தோரும் இப்படி பயணிப்பவர்களின் கதி தான் பரிதாபம். இந்த வண்டிகளை ஓட்டும் 'ஓட்டுனர்கள்' பாடு இன்னும் பரிதாபம்.

Comments

Popular Posts