தமிழ் புலவர் கம்பர்




கமபர் மிக சிறந்த புலவர், புலமை பெற்றவர். அவருக்கு தேய்வீகத் தன்மை உள்ளதாக கருத்தப்படுகிறது. 

கம்ப ராமாயணம் கம்பர் எழுதியது. வட மொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் அவர் ராமாயணத்தை அழகு தமிழில் எழுதினார்.

ராமனை எல்லோரும் கடவுளாக நினைத்து வழி படுகிறார்கள். ஆனால் கம்பர் 'கம்பராமாயணம்' எழுதும்போது கடவுள் வாழ்த்து பாடலாக எழுதியது பின் வருவது.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நீக்கலும், நிலைபெறுத்தலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் யாரவர்
அன்னவருக்கு சரண் நாங்களே."

என்று எழுதினார். இதிலிருந்து ஒன்று புலனாகிறது. அவர் ராமனை கடவுளாக நினைக்கவில்லை. இந்த செய்யுள்ளின் பொருள் என்னவென்றால் " இந்த உலகத்தை உளவாக்கி (உருவாக்கி),அதிலிருந்து சிலரை நீக்கி (இறப்பது),சிலரை நிலைபெறுத்தி (வாழ வைத்து) நீங்காமல் இந்த விளையாட்டை நடத்தும் தலைவருக்கு நாங்கள் சரணடைகிறோம்,' என்கிறார். அதாவது உலகில் பிறப்பு, வழ்தல், இறப்பு இவற்றை விடாமல் செய்து கொண்டிருக்கும் தலைவரை நான் சரண் அடைகிறேன் என்கிறார். இந்த செயல்களை செய்கின்ற தலைவரை நான் கடவுளாக நினைக்கிறேன் என்கிறார்.

கம்பரை பற்றி ஒரு கர்ண பரம்பரை கதை  உண்டு. கம்பரின் எதிரிகள் சிலர்  அவரின் புகழை கண்டு பொறாமைப்பட்டு அவரை அவமானப்படுத்த நினைத்து அரசவை நடன மாது பொன்னியை (தாசி பொன்னி) அவரிடம் அனுப்பினார்கள். கம்பருக்கு அரசரிடம் இருந்த புகழ், மரியாதை இதெல்லாம் தெரிந்த பொன்னி முதலில் மறுக்க எதிரிகள் ஏராகம் பொன் பொருள் தருவதாக சொல்ல, அவளும் ஒப்புக்கொண்டு கம்பரிடம் சென்றாள்.

கம்பரிடம் சென்ற பொன்னி "அய்யனே எனக்கு நீங்கள் ஒரு அடிமை சாசனம் எழுதி தரவேண்டும்" என்றாள்.

என்னவேண்டும் என்று கம்பர் கேட்க, பொன்னி "அய்யனே தாங்கள் தாசியான எனக்கு அடிமை என எழுதித்தர வேண்டும்" என்றாள்.

கம்பரோ  "அதெற்கென்ன எழுதி தந்துவிடுகிறேன்" என்று சொல்லி ஒரு ஓலையில் "கம்பனாகிய நான் தாசி பொன்னிக்கு அடிமை" என்று எழுதி கொடுத்தார்.

இதை தாசி பொன்னி அவரின் எதிரிகளிடம் கொடுத்தாள். எதிரிகள் அரசவையில் இதை அரசர் முன் வாசித்து காட்டி ஏளனம் செய்தார்கள்.அப்போது கம்பர் அங்கில்லை.

அவர் வந்ததும் எல்லோரும் சிரித்து அவரை அவமானப்படுத்தினர்.

கம்பர் என்ன அரசே 'என்ன சேதி? ஏன் நீங்கள் எல்லோரும் சிரிக்கிரீர்கள்? என்றார்.

அரசர் "கம்பரே நீர் தாசி பொன்னிக்கு அடிமையா"? என்று கேட்டார்.

"ஆமாம் அரசே" என்றார் கம்பர்.

"இதை சொல்ல உமக்கு வெட்கமாக இல்லையா?" என்று அரசர் சினத்துடன் கேட்டார்.

"இதை சொல்ல எனக்கு எதற்கு வெட்கம். நான் எழுதியதை படியுங்கள். கம்பனாகிய நான் தாய் ஸ்ரீ சரஸ்வதிக்கு (தா= தயாகிய, சி= ஸ்ரீ, பொன்னி =சரஸ்வதி) அடிமை என்று எழுதி இருக்கிறேன் "என்றார்.

அங்கிருந்த அவர் எதிரிகள் பொருள் மாறி விட்டதை அறிந்து  நாணி போயினர்.

கம்பர் தறி நெய்து வந்ததாகவும், பொழுது போகாதபோது கவிதைகள் எழுதியதாகவும் கதைகள் சொல்கின்றன.

Comments

  1. உங்களுடைய தளம் வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது .
    http://blogintamil.blogspot.in/2014/08/3.html இணைப்பில் சென்று படிக்கவும்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அம்மா. தங்களின் பராட்டுக்கள் எனக்கு மிக்க ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகிறது. தங்களின் அதரவு எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.னிச்சயமாக அந்த வலை தளத்தை பார்க்கிறேன்.

    ReplyDelete

Post a Comment