கொஞ்ச நாட்கள் முன் யாஹூ news இல் படித்த ஒரு செய்தி. இதனை படித்தால் பணடைகால தமிழனின் பொறி இயல் எவ்வளவு உயர்ந்து மேம்பட்டிருந்தது என தெரியும். கீழ்கண்ட செய்தி யாஹூ நியூஸ் இல் படித்தது. ரொம்ப பெருமையாக இருக்கிறது.
//"Nevada
(US), Jan 9 (ANI): Prestigious Rijksmuseum in Amsterdam recently
conducted an X-ray of its thousand-year-old monumental Shiva-Nataraja
statue as a part of research and was surprised to know that it was cast
in solid bronze.
This Dancing Shiva statue was X-rayed using high-energy digital radiation, along with the lorry transporting it, in the most pow erful
X-ray tunnel for containers of the Rotterdam customs authority,
normally used to scan sea containers for suspicious contents. It is said
to be the first research of its kind on a museological masterpiece.
At
153 cm x 114.5 cm, this 300 kilograms Shiva statue is claimed to be the
largest known bronze statue from the Chola Dynasty kept in a
museological collection outside of India. "This solid bronze Shiva is
evidence of a high level of mastery of bronze casting", a Museum release
says. (Yahoo News) "//
படிக்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது முன்னோர்கள் engineering technology யில் எவ்வளவு முன்னேறி இருந்திருக்கிறார்கள். சோழர்கள் கட்டிட கலை, சிற்ப கலை, சிலை வார்ப்பு, இரும்பு தளவாடங்கள் என்று பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தார்கள்.
தஞ்சாவூர் பேருடையார் கோவிலின் விமானம் 40 டன் எடை உடையது. அதனை அவ்வளவு உயரத்தில் தூக்கி வைக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? crane இல்லாத அந்த நாட்களில் ரொம்ப தூரத்தில் இருந்து சாரம் கட்டி யானைகளால் கற்கள்/ மர தடிகளின் மேல் உருட்டி கொண்டு வர பட்டன. இதப்பற்றி Discovery Channel"இல் ஒரு டாக்குமென்டரி பார்த்தேன். யானைகளை வைத்து இருளைகள் மேல் மிக பெரிய கற்களை வைத்து , சாரம் கட்டி அவற்றின் மேல் உருட்டி ஏற்றி கொண்டு வந்திருக்கிறார்கள்.
கீழே தந்திருப்பது விகிபீடியாவில் இருந்து. அது தஞ்சை பேருடையார் கோவிலைப்பற்றி சொல்கிறது. ராஜ ராஜ சோழனால் மிக பிரமாண்டவமாக கட்டப்பட்டது இந்த கோவில். தன் பல் வேறு போர்களின் வெற்றியை கொண்டாட கூட இதை கட்டினான் என்று வைத்துக்கொள்ளலாம்.
//This
temple is one of India's most prized architectural sites. The temple
stands amidst fortified walls that were probably added in the 16th
century. The vimana — or the temple tower — is 216 ft (66 m) high [5][6]
and is among the tallest of its kind in the world. The Kumbam (or
Kalash or Chikharam) (apex or the bulbous structure on the top) of the
temple is not carved out of a single stone as widely believed.[citation
needed] There is a big statue of Nandi (sacred bull), carved out of a
single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet
high.[7] The entire temple structure is made out of hard granite stones,
a material sparsely available in Thanjavur area where the temple is.
Built in 1010 AD by Raja Raja Chola in Thanjavur, Brihadishwara Temple
also popularly known as the ‘Big Temple' turned 1000 years old in 2010.
(Wikipedia) //
Marvelous and wonderful people and Technology. உங்களுக்கு வேரொரு விஷயம் தெரியுமா? இவ்வளவு பெரிய கோவிலுக்கு மிக சிறிய அவ்வளவு ஆழம் இல்லாத foundation தான் கட்டினார்களாம். அந்த கோவில் 1000 வருடங்களாக நிற்கிறது.
இன்றைய தமிழனுக்கு தமிழே சரியாக பேச தெரியவில்லை.
ஆனால் எத்தனை தமிழர்களுக்கு இதன் புகழ் தெரிகிறது? எத்தனை பேர் இந்த கோவில்களுக்கு போகிறார்கள்? காஞ்சீபுரத்தில் தடுக்கி விழுந்தால் ஒரு பழங்கால கோவிலின் முன்னால் தான் விழ முடியும். ஆனால் அங்கு போவோர் யாரும் இல்லை. இதைப்போல் தான் பல்லவர் கால கோவில் ஒன்று காஞ்சீபுரத்தில் கேட்பார் கேள்வி இல்லாமல் இருக்கிறது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கைலாஸனாதர் கோவில் அது. அற்புதமான சிற்பங்களுடன் காட்சி தருகிறது.
இனாள் தமிழர்கள் இவற்றைப்பற்றி அறியாமல் சபரி மலைக்கும், திருப்பதிக்கும் போய் 'Q' நின்று 'சாமி' கும்பிடுகிறார்கள். அங்கே தான் சாமி குடிகொண்டிருக்கிறது.
முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை.
Comments
Post a Comment