நாகலிங்க பூ ( Couroupita guianensis)
நாகலிங்க பூ
இந்த அழகிய பூ நாகலிங்க பூ
என்றழைக்கப்படுவதின் காரணம் இந்த பூவின் உள்ளில் இருக்கும் சிவ பெருமானின் லிங்கம்
போன்ற உருவம், அதனை சுற்றி இருக்கும் பீடம், அதன் தலை மேல் உயர்ந்து நெடிந்து
இருக்கும் பல தலை நாகம் (பாம்பு) போன்ற அமைப்பு இவற்றால் தான் இதை நாகலிங்க பூ என்று சொல்வார்கள்.
இந்த லிங்கம், பீடம்
போன்றவை மஞ்சள் நிறத்திலும், மேலிருக்கும் நாகம் போன்ற அமைப்பு சிவப்பு
நிறத்திலும் இதன் ஐந்து இதழ்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
நல்ல மணம் வீசும்
இந்த அழகிய மலர்களை பலரும் வாங்கி சிவன் கோயில்களில் கொடுப்பார்கள். தெய்வீக தன்மை
நிறைந்ததாக கருதப்படுகிறது இந்த அழகிய மலர்.
மற்ற மரங்களை போல் தடி பகுதி இல்லாமல் சிக்குப்பிடித்த நூல் கண்டு சுற்றியதைப்போல் இருக்கும்.
பூ மொட்டுகளை இந்த படத்தில் காணலாம்.
வேடிக்கையான வேறோரு
விஷயம் என்ன வென்றால் இந்த மலர் நம் நாட்டை சேர்ந்தது அல்ல. தென் அமெரிக்காவைச்
சேர்ந்தது. இப்படிப்பட்ட மலர், நமது சிவ பெருமானை ஒத்திருக்கும் மலர், இப்படி அரிதாக
பல மைல்கள் அப்பால் இருந்து வந்திருப்பது வியப்பை ஊட்டுகிறது.
நல்ல மணம் வீசும் இம்மலர்
பல நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கபடுகிறது. இதன் பூவின் சாறு எடுத்து தடவி
வந்தால் வெள்ளை தழும்புகள்,(leucoderma) வெண்குஷ்டம், வெண் புள்ளிகள் இவை மறைந்து விடும். இதன் பூ, பட்டை இவை ரத்த கொதிப்பு,
கான்சர், வலி இவற்றிற்கு நல்ல நிவாரணி. இதைத்தவிர பல் வலி, வீக்கம்,மலேரியா, வயிற்று வலி, ஜலதோஷம் இவற்றிர்க்கும் இதை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.
என்னுடைய சகோதரியின்
சென்னை வீட்டில் இதை ஒரு சிறு செடியாக யாரோ கொடுத்தார்கள். நான் அதை குழி தோண்டி
நட்டுவைத்தேன். அது பெரிதானதும் சகோதரி அதை பிடுங்கி எரிந்து விட்டாள். வீட்டின்
ஃபௌண்டேஷனை பாழ் படுத்தி மதிலை உடைத்து விடுமாம். அதை நான் எடுத்து வெளியே நட்டு
வைத்து வலை டியூபால் ஆடுகள் தின்னாமல் இருக்க கட்டி வைத்தேன். அது இன்று பல
ஆண்டுகளுக்கு பின் வளர்ந்து, கொழித்து தினமும் ஏராளம் பூகளை தந்து அந்த இடமே
பரிமளிக்க செய்கிறது.
பல தலைகள் உள்ள நாகம் போன்ற மஞ்சள் சிகப்பு உருவங்கள்.
மஞ்சள் லிங்கம் உள்ளே தெரிகிறது.
Comments
Post a Comment