மறைந்த பல தமிழ் பத்திரிகைகள்.
நான் என் சிறு வயதில் இருந்தே ஏராளம் பத்திரிகைகள், கதைகள் படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். என் வயது பையன்கள் விளையாடவும், சினிமா பார்ர்ப்பதும், ஊர் சுற்றுவதுமாக இருந்த போது நான் கதைகள், பத்திரிகைகள் படிப்பதையே ஆனந்தமாக கருதினேன். அப்போது வந்த பல பத்திரிககள் காலப்போக்கில் நின்று பின் மறந்து விட்டன.
ஜில்ஜில் :
இப்படி ஒரு பத்திரிகை நான் ரொம்ப சிறு பையனாக இருந்தபோது வந்ததாம். என் அக்கா சொல்வாள்.

அணில் :
இது ஒரு அணா பத்திரிகை. ரொம்ப சின்னதாக கை அளவே இருக்கும். குட்டிகதைகள், சிரிப்பு படங்கள் இருக்கும். இதை தமிழ் வாணன் தான் தொடங்கி நடத்தி வந்தாராம்.

கண்ணன் :
இதுவும் குழந்தை பத்திரிகை தான். இது குமுதம், ஆனந்த விகடன் அளவில் இருக்கும். இதன் ஆசிரியர் பெயர் "ஆர்வீ"" ( ஆர். வெங்கிடராமன்). இவர் பல நாவல்கள், சரித்திர கதைகள் எழுதி உள்ளார். இதுவும் சில வருடங்களில் நின்று போனது. இவரின் "ஆதித்தன் காதல்" என்ற சரித்திர நாவல் நன்றாக இருக்கும். நீண்ட நாவல். கண்ணன் "கலை மகள்" பத்திரிகை குழுமத்தில் இருந்து வந்தது.
கல்கண்டு :
இது ரொம்ப ஸ்வாரஸ்யமான பத்திரிகை. 32 பக்கங்களோ என்னவோ தான் இருக்கும். கண்ணன் போல் அதே அளவில் இருக்கும். இதில் ஒரே ஒரு தொடர் கதையும் மற்ற பக்கங்களில் கேள்வி பதில்கள் தான் இருக்கும். தமிழ் வாணன் தான் இதன் ஆசிரியர். தமிழ் வாணன் எதைபற்றி வேண்டுமானாலும் கேள்விகளுக்கும் பதில் தருவார். அவர் MGR, பிரேம் நசீர் என்று பல நடிகர்களுடன் எடுத்த படங்களை அடிக்கடி பத்திரிகையில் பிரசுரிப்பார். கருப்பு கண்ணாடி தான் இவர் அடையாளம். இவர் இரு தமிழ் படத்தைக்கூட எடுத்தார். அதன் பெயர் காதலிக்க வாங்க. இதில் ஒருபுலி கூட நடித்திருந்தது. ஒரு காலத்தில் இவரது கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போது இந்த பத்திரிகை வருவதில்லை என நினைக்கிறேன். அவர் மறைவுக்குப்பின் அவர் மகன் லேனா தமிழ்வாணன் நடத்தியதாக நினைவு. இந்த பத்திரிகை குமுதம் குழுமத்தில் இருந்த வந்ததாக நினைவு.

தினமணி
கதிர் :
கதிர் என்றழைக்கபபடும் இந்த பத்திரிகை தினமணி பத்திரிகையின் வெளியீடு. ரொம்ப வருடங்களுக்கு முன் வந்து கொண்டிருந்தது. பின்னால் நின்று போனது. திரும்பவும் சாவி அவர்களின் தலைமையில் வந்தது. இதில் தான் வேணுகோபாலன் என்பவர் நல்ல பல தெய்வீக கதைகள், சரித்திர கதைகள் எழுதினார். இவரே “புஷ்பா தங்க துரை” என்ற பெயரில் சிவப்பு விளக்கு கதைகள், கவர்ச்சி கதைகள் எழுதினார். சில வருடங்கள் முன் தான் இவர் மறைந்தார். கதிர் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சாவி அதி பல புதுமைகள் செய்தார். நல்ல கதைகள், கட்டுரைகள் எழுதினார். அவர் MGR எதிர்ப்பு கோஷ்டியை சேர்ந்தவர். கருணா நிதி ஆதரவாளர். அந்த சமயம் MGR தான் முதல் அமைச்சர். ஆனால் என்ன காரணமோ சாவியை அதிலிருந்து அனுப்பி விட்டார்கள். அதன் பின் அது பொலிவிழந்து மெல்ல நின்றே போய் விட்டது.

அமுத சுரபி.
இது விக்ரமன்
என்பவரை ஆசிரியராகக்கொண்டது. நல்ல சரித்திர, சமூக் கதைகள், கட்டுரைகள் கொண்டது.
விக்ரமன் நல்ல சரித்திர கதைகள் எழுதுவார். நான் இதை அதிக படித்ததில்லை. இதுவும்
நின்றுபோனது
இன்னம் பல பத்திரிகைகள் வந்திருக்கலாம் நின்றும் போயிருக்கலாம். ஆனால் இவை தான் என் நினைவில் இருந்தவை.
மஞ்சரி.
இது ஒரு நல்ல
அறிவுபூர்வமான பத்திரிகை. பல நல்ல கட்டுரைகள், செய்திகள், படங்கள் இதில் வரும்.
ஆங்கில “Reader’s
Digest” போல தமிழில் வந்த ஒரே
பத்திரிகை. கலைமகள் பத்திரிகை குழுமத்தில் இருந்து வந்தது. இதும் காலப்போக்கில்
நின்று போனது.
கலைமகள்
கலைமகள் திரு.
கி.வா.ஜெகன்னாதன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிகை. நல்ல இலக்கிய,
இலக்கண கட்டுரைகள், கதைகள், பேட்டிகள் என்று நல்ல பல செய்திகளையும் கொண்டு வரும்.
கி.வா.ஜெ திரு Dr.உ.வெ.சாமினாத அய்யரின் சீடர் என்பது இன்னும் பெருமை சேர்க்கும்
விஷயம். அவரது மறவுக்கு பின் இது நின்று போனதா இல்லயா என தெரியவில்லை.
காதல்.
இது கொஞ்சம் கவர்ச்சியான பத்திரிகை. பல உடர் கூறு, கலவிகள், காதல் கதைகள், உடல் உறவு, சூலுற்றல், ஆண் பெண் குறிகள் என்று ரொம்ப அறிவு பூர்வமான விஷயங்கலை தரும் பத்திரிகை. இதை நான் 7ஆம் வகுப்பில் படிக்கும்போதே படித்தேன். இதை என் அண்ணன் பல காதல் பத்திரிகைகளை BIND பண்ணி வைத்திருந்தான். நான் திருட்டுத்தனமாக படித்தேன். வேறு பத்திரிகைகள் கிடைக்காதலால்.
இன்னம் பல பத்திரிகைகள் வந்திருக்கலாம் நின்றும் போயிருக்கலாம். ஆனால் இவை தான் என் நினைவில் இருந்தவை.
Comments
Post a Comment