வாதாபி (வில்லோலன்) அகஸ்தியரால் அழிவுற்ற கதை.

அகஸ்திய முனிவர் ஒரு முறை தன் குடில் நோக்கி போய் கொண்டிருந்தார். அவரை வாதாபி, வில்லோலன் என்ற அசுர சகோதரர்கள் விருந்துண்ண அழைத்தார்கள்.

இந்த சகோதரர்கள். மிக கொடியவர்கள். மந்திர தந்திரத்தில் சிறந்தவர்கள். பிராமணர்களை மிகவும் வெறுப்பவர்கள். வில்லோலன் பிராமணர்களை விருந்துக்கு அழைப்பான். (அக்காலத்தில் பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள்.) விருந்துக்கு வரும் பிராமணர்களுக்கு தன் தம்பி வாதாபியை கொன்று அவன் கறியை விருந்தாக படைப்பான். விருந்துக்கு வந்த பிராமணர்கள் மகிழ்ச்சியுடன் விருந்து உண்டு சிரம பரிகாரம் செய்யும் போது வில்லோலன் "வாதாபி வெளியே வா" என்றழைப்பான்.

வயிற்றினுள் இருக்கும் வாதாபி தன் சுய உருவம்  எடுத்து பிராமணரின் வயிற்றைக்கிழித்துக்கொண்டு வெளியே வருவான். இரெண்டு அசுரர்களும் சேர்ந்து அந்த பிராமணனை தின்று தீர்ப்பார்கள். இப்படி பல ஏழை பிராமணர்களை இவர்கள் தின்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அகஸ்தியரை இவர்கள் விருந்துண்ண அழைத்தனர். இவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் மகிழ்ச்சியுடன் விருந்து உண்ண வந்தார். பழையபடி வில்லோலன் தன் தம்பி வாதாபியை கொன்று சமைத்து அகஸ்தியருக்கு விருந்து பறிமாறினான். முனிவர் மகிழ்ச்சியுடன் நன்று அனுபவித்து விருந்தை உண்டார்.

உண்டு முடிந்த உடன் வில்லோலன் "வாதாபி வெளியே வா" என்றழைத்தான். முனிவர் கையை வயிற்றில் வைத்து "வாதாபி ஜீர்ணம்" என்றார். வயிற்றில் இருந்த வாதாபி ஜீரணம் ஆகி இறந்து விட்டான்.

வில்லோலன் கூப்பிட்டு கூப்பபிட்டு ப்பார்த்து சோர்ந்து போனான். தன் தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கோறினான். முனிவர் அவனிடம் இனி இது போல் பிராமணர்களை கொன்று பாவம் தேடாதே என்று அறிவுறை வழங்கி சென்றார்.

Comments