அகஸ்திய முனிவர்
அகஸ்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. குள்ள உருவமுடைய இந்த குறு முனி மிக பெருமை உடையவர். அகஸ்தியர் சிவபெருமானுடைய திருமணம் காண வானுலகத்திலிருந்து இமாலயத்துக்கு வந்ததாகவும், சிவ பெருமான் அவரை வட நாட்டில் பாரம் அதிகமாகி சாய்ந்து போனதால் அதை சரி செய்ய தென் நாட்டிற்கு போக சொன்னதாகவும் கதைகள் சொல்கின்றன.
இன்னுமொரு கதை மேரு மலை வளர்ந்த்து கொண்டு போனதாகவும் இமாலயத்துடன் போட்டி போட தயார் ஆனதாகவும், அதனை நிறுத்த இந்திரன் அகஸ்தியரை தென்னாட்டிற்கு போக சொன்னதாகவும் சொல்கிறது. தன்னை கடந்து தாண்டி போக அகஸ்தியர் மேரு மலையை கேட்டார். அது தான் வளர்ந்து கொண்டிருப்பதால் முடியாது என்றது. அதற்கு அகஸ்தியர் " நான் தென்னாட்டிற்கு ஒரு பணிக்காக செல்கிறேன் ஆகையால் நான் போய் வரும் வறை வளராதே என்றார்.
மிக சக்தியுடைய முனிவராகையால் அவர் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்றெண்ணி மேரு மலையும் தான் வளர்வ்வதை நிறுத்தி விட்டு அவர் போக வழி விட்டு அவர் திரும்பி வரும் வறை தான் வளர்வதை விட்டு காத்திருப்பதாக சொன்னது. முனிவரும் அதை கடந்து வந்து பொதிகை மலையில் அமர்ந்து தமிழுக்கு இலக்கணம் எழுதினாராம். மேரு மலையும் அவருக்காக இன்னும் காத்திருக்கிறதாம்.
அகஸ்தியர் மிக சக்தி வாய்ந்த முனிவர். அவர் தவங்கள் பல செய்து தன் பராக்கிரமத்தையும் தவ வலிமையையும் வளர்த்துக்கொண்டார். இப்படி இருக்க ஒரு நாள் அவர் போகும் வனாந்திரத்தில் அவரின் முன்னோர்கள் எல்லோரும் தலை கீழாக தொங்கி கொண்டிருப்பதாக தெரிந்தது. அவர் அவர்கள் அருகில் சென்று அந்த சம்பவத்தின் காரணத்தைக்கேட்க. அவர்கள் "அப்பனே நீ திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் உன் வாரிசுகள் வந்து எங்களுக்கு செய்யும் தர்ப்பணம் செய்ய முடியாததாலும், பிற கர்மங்கள் போன்றவை வராததால் தான் இப்படி தலை கீழாக தொங்குகிறோம்" என்றார்கள்.
அகஸ்த்யர் இதைக்கேட்டு அஹா என்ன தவறை செய்து விட்டோம் என்றெண்ணி திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அவர் விதர்ப்பதேசத்து அரசனை சென்று அடைந்தார். அவன் தனக்கு குழந்தை இல்லயென வருத்தப்பட்டுக்கொண்டிருந்தான். அகஸ்தியரிடம் அவன் வணங்கி தன கவலையை தெரிவித்து தனக்கு குழந்தை பாக்கிய வரம் தர வேண்டினான். அகஸ்தியர் அவனிடம் " உனக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உருவாகும். அவள் பிறந்து வளர்ந்து குமரியான உடன் அவளை எனக்கு மனைவியாக மணம் முடித்துக்கொடுப்பாயாக" என்று வரம் அருளினார்.
அரசனும் அந்த வேண்டுகோளுக்கு உட்பட்டு சென்றான். சில நாட்களில் அவன் மனைவி கருவுற்றாள். ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதற்கு லோப முத்திரை என்ற் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கல்யாண பருவம் அடைந்த மகளை அந்த குறு முனிவருக்கு கொடுக்க அரசனுக்கு விருப்பமில்லை. ஆனால் கட்டளைக்கு பணியாவிடில் அவரின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று கவலையுற்றான் அரசன். ஆனால் லோப முத்திரை அவனை தேற்றினாள். "கவலை வேண்டாம் தந்தையே, வாக்கு கொடுத்தபடி என்னை அந்த முனிவருக்கே மணம் முடித்து கொடுங்கள்" என்று வேண்டினாள்.
ஒரு நல்ல சுப நாளில் அரசன் லோபமுத்திரையை அகஸ்திய முனிவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். மனைவியுடன் காட்டிற்கு புறப்பட்ட முனிவர் தன் மனையிடம் அவள் அணிந்திருந்த ஆபரணங்களை களைந்து விட்டு வர பணிந்தார். அவளும் அவற்றை கலந்து விட்டு அவருடன் சென்று அவரின் எல்ல பணிவிடைகளையும் செய்து வந்தாள். ஒரு நாள் முனிவர் அவளை ஆசைப்பட்டு கலவிக்கு அழைத்தபோது அவள் "நீங்கள் அழைக்கும்போது வர கடமைப்பட்டு உள்ளேன் ஆனால் என் விருப்பத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்" என்றாள்.
அவர் என்ன என்று கேட்க " அவள் எனக்கு ஆபரணங்கள், பட்டு பீதாம்பரம், அழகிய, படுக்கை என்று பல ஆடம்பர பொருட்கள் வேண்டும். நான் அப்போது தான் மகிழ்சியோடு உங்களுடன் உறவாட முடியும்" என்றாள்.
சரி என்று சொல்லிவிட்டு முனிவரும் யாசகம் கேட்க பல மன்னர்களை நாடி பொருள் சேர்த்து வந்தார். அவற்றை மனைவியிடம் கொடுத்து விட்டு "கங்கை கரைக்கு வா நான் காத்திருக்கிறேன்" என்று போய் விட்டார். கணவனைவிட ஆபரணங்களை மனைவி விரும்புகிறாள் என்று மனகுமைச்சலுடன் படுத்திருந்தார். அப்போது அழகிய கைகள் வாசத்துடன் தன்னை அணைப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த முனிவர் அதிர்ச்சி அடைந்தார். லோபமுத்திரை எந்த வித ஆபரணங்கலை அணியாமல் அவரிடம் வந்திருந்தாள்.
ஏன் அவற்றை அணியவில்லை என முனிவர் வினவ மனைவியை அன்புடனும் அவள் விருப்பங்களை அறிந்து கொள்ளும் கணவனாகவும் அவர் இருக்கவே அப்படி கேட்டுக்கொண்டதாக அவள் தெரிவித்தாள். பின்னர் அவர்கள் கூடி மகிழ்ந்தனர். "உனக்கு பத்து நல்ல நேர்மையான புகழுடைய மக்கள் வேண்டுமா அல்லது அறிவும், வீரமும், புகழும், நேர்மையும், அன்பும் நூறு பேரை வெல்லும் திறமையும் உடைய ஒரு மகன் வேண்டுமா" என்றார். லோபமுத்திரை ஒரு மகனே போதும் என்று சொல்ல அவ்வாரே ஒரு மகனை காலாகாலத்தில் அவள் பெற்றெடுத்தாள்.
Comments
Post a Comment