சில சிக்கன உத்திகள்
குளிக்க உபயோகிக்கும் சோப் விலை அனேகமாக ₹40 இல் இருந்து ₹100 வரை உள்ளது. இன்னும் மேலே கூட போகலாம்.
பல நேரங்களில் சோப் தேய்ந்து சின்னதாகி விடும் கையில் பிடித்து தேய்க்க முடியாது. அதே சமயம் அதை களையவும் மனசு வராது.
இப்படி இருக்கும் நேரத்தில் ஒரு புது சோப்பை எடுத்து இந்த தேய்ந்த சோப்பை சிறிது தண்ணீர் ஊற்றி அழுத்திப் பிடித்து அமுக்கினால் அது ஒட்டிக் கொள்ளும். குளிக்க குளிக்க அது புது சோப்புடன் நன்றாக சேர்ந்து ஒரே சோப்பாக மாறி விடும். Amalgamated new soap. எந்த சோப்பையும் எந்த சோப்புடனும் சேர்க்கலாம். அதற்கு ஜாதி வித்தியாசம் கிடையாது.
இதே போல் டூத் பேஸ்ட் காலியானால் அந்த டியூபுக்குள் இன்னமும் பேஸ்ட் இருக்கும் ஆனால் என்ன அமுக்கினாலும் வெளியே வராது. அந்த டியூபுக்குள் வாய் வைத்து ஊதினால் நன்றாக உப்பும். இப்போது அதனுள் தண்ணீரை நிறப்பி, நன்கு குலுக்கி மூடி வைத்தால் மௌத் வாஷ் ஆக உபயோகிக்கலாம்.
இதே போல் பவுடர் டப்பாவில் பவுடர் தீர்ந்து போனால் அதன் உள்ளில் இருக்கும் பவுடர் என்ன தட்டினாலும் வராது. அந்த டப்பா மூடியை நெம்பி திறந்து பார்த்தால் உள்ளே இன்னும் இரெண்டு நாட்களுக்கான பவுடர் இருக்கும். உபயோகிக்கலாம்.
அப்படியே அந்த டப்பாவை நன்கு கழுவி, வேறு பவுடர்கள், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, பிளீசிங்க் பவுடர் இப்படி ஐட்டங்களை போட்டு அதன் மூடியால் மூடி வைத்தால் இந்த பொடிகளை தூவ ஈசியாக இருக்கும்.
இந்த வேலைகளை நீண்ட நாட்களாக நான் செய்கிறேன். Quite useful.
Comments
Post a Comment