மத மாற்றங்கள்

 மதம் ஏதாயாலும் மனுஷ்யன் நன்னாகணம்" இது நாராயண குரு சொன்னது. மதம் மாறுபவன் சுத்த முட்டாள். மதம் ஏன் மாறுகிறார்கள்? எல்லா மதமும் ஒன்றைத் தான் சொல்கிறது. கடவுளை நம்பு. நல்லவனாய் இரு. யாருக்கும் தீங்கு செய்யாதே. Etc etc. ஆனால் எல்லா மத த்தினரும்கொலை, கொள்ளை, ஏமாற்றி வாழ்கிறார்கள் ஆனால் நமது மதத்தில் தான் "நான் உயர்ந்த ஜாதி, நீ தாழ்ந்தவன், நீ தொடாதே, நீ தீட்டு, நீ இந்த வேலை தான் செய்யணம்" இப்படி கட்டுப் பாடுகள். வேடிக்கை என்னெவென்றால் இந்த ஜாதிகளுக்கு உள்ளேயே "நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்" என்று சண்டை வேறு. ஆனால் பெண்கள் விஷயத்தில் எவனும் ஜாதி பார்ப்பதில்லை. ஓர் படத்தில் நடிகை மனோரமா சொன்னது " கூத்தியா வைக்கிறதிலே எவனும் ஜாதி பார்ப்பதில்லை". பள்ளியில் படிக்கையில் " ஜாதி இரெண்டொழியவேறில்லை" என்று படித்து விட்டு வெளியே வந்து "ஏ நீ என்ன ஜாதி" என்று தான் கேட்கிறோம். எங்கள் தந்தையார் வக்கீல், வேதங்கள் படித்தவர் ஆனால் பயங்கர ஜாதி வெறியர். எங்கள் தோட்ட காவலாளி " கீழ் ஜாதியை" சேர்ந்தவர். அவர் வீட்டின் பின் வாசல் வழி தான் வரவேண்டும். தூர நிற்க வேண்டும். நாங்கள் தொடக் கூடாது. அவர் கொண்டு வரும் காய் கறிகள் கழுவின பின் தான் எடுப்பார்கள். காசும் அப்படியே. ஆனால் ரூபாய் நோட்டு மாத்திரம் கழுவ மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் " அவன் சுத்தமில்லை" என்பார்கள். குளித்து விட்டு வந்தால் எப்படி என்று கேட்டால், அதிக பிரசங்கி என்று திட்டு விழும். எல்லா மதங்களையும் மனிதன் தா படைத்தான். வேறு பாடுகள் இல்லை. ஒழுங்காக, உண்மையாக, குற்றங்கள் செய்யாமல், லஞ்சம் வாங்காமல், யாரையும் ஏமாற்றாமல் இருந்தாலே அதுவே நல்ல மதம். எவனாவது கிறிஸ்தவன், ஹிந்து, முஸ்லீம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் வாங்குதல் இப்படி செய்யாமல் இருக்கிறானா? அப்போது மதம் எங்கு போனது? சில மதங்கள் மக்களுக்கு மதம் மாறினால் உதவிகள் செய்கின்றன. But then it is for selfish motive to increase their population and not for improving the people or society. Hope people understand. I was employed in Saudi government as an engineer. I was given so much pressure to convert to Islam. Finally I resigned and returned. It all depends on individuals.

Comments