ராவணன்
ராவணனை பலரும் நிந்திக்கிறார்கள். அவன் அசுரன் என்றும் கெட்டவன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவன் சீதையை கடத்தியதை தவிர வேறு தவறுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை. சீதையை கடத்தினாலும் அவன் சீதையை ஏதும் செய்யவில்லை.
ராவணன் ஏன் சீதையை கடத்தினான்?
ராமனை சூர்பனகை என்ற பெயருடைய அரக்கியான
ராவணனின் தங்கை மணம் புரிய வேண்டினாள். அவள் தொந்தரவு பொறுக்காமல் ராமனின் தம்பியான
லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுத்து விட்டான். இதைபொறுக்க முடியாமல் சூர்ப்பனகை
தன் அண்ணன் ராவணனிடம் முறையிட அவன் அதற்கு பழி தீர்க்க சீதையை கடத்தி சென்றான்.
ராவணனின் தந்தை பெயர் புலஸ்திய மாமுனிவர். புலஸ்திய மாமுனிவர் ஒரு பிறாமணர், பிரம்மாவின் மகன். மிகுந்த கல்வி, கேள்விகளில் சிறந்தவர். ராவணனின் தாயார் பெயர் கைகேசி. இந்த பெண் அரக்க பெண்ணாக சித்தரிக்கப்படுபவள். அரக்கர்கள் தனியான ஒரு (race) வகுப்பானவர்கள் ஆக இருக்க முடியாது. ஏனெனில் பல தேவர்கள் அரக்கப்பெண்களை மணம் புரிந்திருக்கின்றனர். இவ்வளவு ஏன் அரக்கர்களின் குல குரு சுக்கராச்சார்யா என்ற பிராமணர் தான்.விஷ்ணு, சிவன் இவர்களை எதிர்த்து சண்டை செய்த பல அரக்கர்களின் குல குரு. மஹாபாரதம் எழுதிய வியாச ரிஷியின் தந்தை பராசுர மாமுனிவர் ஒரு மீனவப்பெண்ணான சத்தியவதியை மணம் புரிந்து வியாச ரிஷியை பெற்றெடுத்தார். இதனாலேயே சத்தியவதியின் உடலில் ஒரு அற்புதமான மணம் வீசுமாம்.
ரிஷிகளின், தேவர்களின் பிள்ளைகள் தான். அரக்கர்கள் என்பவர்கள் மிகுந்த கொடூரமான, கெட்ட குணங்களை
கொண்டு இருந்ததால் இவர்களை அர்க்கர்கள் என்று கூறி இருக்க வேண்டும். இவர்கள் மக்களை துன்புறுத்துவர்களாக இருந்திருக்க வேண்டும். இதனால் தான் இவர்கள் மிகவும் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
புலஸ்திய மாமுனிவர் பிரம்மாவின் மகன்களில் ஒருவர். பிரம்மா விஷ்ணுவின் மகன். ஆகையால் ராவணன் விஷ்ணுவின் பேரன். நாரதரும் பிரம்மாவின் மகன் தான். ஏன் பரம சிவனும் பிரம்மாவின் மகன் தான் . இவற்றை எல்லாம் ‘பாகவதம்’ படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
ராவணன் அற்புதமான மனிதன். எல்லா வேதங்களையும், உபனிஷத்துக்களையும் படித்து அறிந்தவன். அற்புதமான பாடகன், வீணை வாசிப்பதில் வித்தகன்.பெரிய வீரன். பரமசிவனிடம் மிகுந்த பக்தி கொண்டவன். அவன் விரும்பிய எல்லா வரங்களையும் பரம சிவன் அவனுக்கு கொடுத்திருந்ததால் அவனை நேராக போரிட்டு கொல்ல முடியாது.
ராவணனது வீணை வாசிப்பதை கேட்டு இசையால் மயங்கிய சிவபெருமான்
அவனுக்கு ஏராளமான வரங்களை வழங்கினார். ராமனால் ராவணனை நேராக கொல்ல முடியாது. ராவணனை கொல்ல ராமனுக்கு விபீஷணனின் உதவி தேவைப்பட்டது. அவன் ராவணனின் எல்லா வரங்களையும் அவற்றை எப்படி முறியடிக்க வேண்டும் என்று கூறி (weakness)
ராமனுக்கு உதவி செய்தான். கடைசியில் பல சூழ்சியால் ராவணன் யாருமின்றி
கொல்லப்பட்டான்.
ஷத்திரியனான ராமனுக்கு பிராமணனான ராவணனை கொல்ல பலரும் உதவினார்கள்.
ராமனை எல்லோரும் கடவுளாக வணங்குகிறார்கள். பாவம் பிராமணனான ராவணனைத்தான் யாரும் வணங்குவதில்லை.
நமது முன்னாள் பிரதம மந்திரி ஜவர்ஹலால் நேரு ராமாயணம் என்பது ஒரு ஆரிய - திராவிட போர் பற்றிய வரலாறு என்று தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் எழுதி உள்ளார்.
இப்போதைய சரித்திர ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் ஆராச்சிசெய் து விட்டு ஆரியர்கள் இந்தியாவிற்கு வரவே இல்லை என்றும் இந்தியர்களின் DNA சாம்பிள்கள் எடுத்து ஆராச்சிசெய்து எல்லா இந்தியர்களும் ஒரே இனம் என்று கூறுகிறார்கள்.இதே தான் BBC இப்போது கண்டு பிடித்திருக்கிறது. இதைத்தான் ஸ்வாமி விவேகானந்தர் நூறு வருடங்களுக்கு முன் சென்னையில் சொல்லி இருந்தார்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நமது கடவுள்கள் சிவன் என்பவர் சுடலைஆண்டி . சுடுகாட்டில் வசிப்பவர். அதாவது இன்றைய அரசு ஜாதிகளில் ஷெடியுல்ட் காஸ்ட் (scheduled caste ) இல் வருவார் என நினைக்கிறேன்.
இதுபோல ராமன் ஷத்திரியன். கிருஷ்ணன் இடையன்.
ஆகையால் எல்லோரும் உண்மையில் இவர்களை வணங்கினாலும் ஜாதியை விடாது பிடித்துகொண்டிருக்கின்றனர்.
கீதையில் கிருஷ்ணன் 4வது அத்தியாயத்தில் 13ஆம் சுலோகத்தில் சொல்கிறார். ஒருவன் பிறப்பால் எந்த வர்ணத்தையும் சேர்ந்தவன் அல்ல. அவன் செய்யும் கர்மங்கள் ( வேலைகள்), அவனின் குணங்கள் இவற்றால் தான் அவன் வர்ணத்தால் மற்றவரிடம் இருந்து வேறுபடுகிறான்.
("சாதுர் வர்ணம் மய சிர்ஷ்டம் குண கர்ம விபாகச, த்ஸ்ய கர்த்தார் அபிமான் வித்தய கர்த்தார் அவ்வய்யம்.) கீதை 4 வது அத்தியாயம். 13 சுலோகம்.")
இதன் பொருள்.
"குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்கு என்று என்னை அறிவாய்."
Comments
Post a Comment