சபரி மலைக்கு போகும்போது கடைபிடிக்கும் பழக்கங்களுக்கு காரணங்கள்.



நான் பிறந்தது மதுரை ( அப்போதய திருப்பரங்குன்றம்) ஆனாலும் படித்து வளர்ந்தது திரு அனந்தபுரத்தில் தான். ஆகையால் அங்குள்ள பழக்க வழக்கங்கள் நன்கு தெரியும். ஒரு காலத்தில் தமிழர்கள் அங்கு ஏராளமாக  வசித்து வந்தனர். அவர்களுக்காக தமிழ் வகுப்புகள் பல பள்ளிகூடங்களில் நடத்தப்பட்டன. கல்லூரிகளிலும் தமிழ் வகுப்புகள் இருந்தது.இப்போதும் உள்ளது. கேரளா சர்வ கலாசாலையின் தமிழ் துறை பல ஆராச்சி கட்டுறைகளை வெலளியிட்டிருக்கின்றனர்.

நான் குழந்தையாக இருக்கும்போது திருவனந்தபுரத்தில் வயசான முதியோர்கள் தான் 'மலைக்கு' ( ஸபரிமலைக்கு) போவார்கள். அப்போது எல்லாம் இப்போது போல்  சாலை, கார், பஸ் வசதி கிடையாது. ஆகையால் மக்கள் நடந்தே மலைக்கு போவார்கள். இல்லாவிடில் ரயிலில் தென் மலை / ஆரியங்காவு ஸ்டேஷங்களில் இறங்கி அங்கிருந்து நடந்து மலை ஏறுவார்கள். மிக கடினமான செயல். நல்ல காடும், மலையும் என இருந்ததால் வழியில் எதுவும் கிடைக்காது. கடைகள் இப்போது போல் கிடையாது. தண்ணீர் கூட மலை அருவிகள், ஆறுகளில் இருந்து தான் குடிக்க / குளிக்க வேண்டும். கடும் குளிரில் பலர்க்கும் மலம்பனி, மலேரியா வந்து கஷ்யப்பட்டு இருக்கிறார்கள். பலரும் இறந்து போய் இருக்கிறார்கள். ஆண்டுக்கு இருமுறை தான் சாஸ்தாவின் கோவில் திறக்கப்படும். கோவில் தந்திரிகள் கூட அங்கு தங்குவதில்லை.

அந்த காலத்தில் யாரும் செருப்பும் போடுவது கிடையாது. ஆகையால் மலைக்கு போகும் போதும் செருப்பு போடாமல் தான் போவார்கள்.தவிரவும் மலை ஏறுவதர்க்கு செருப்பு அங்கு சரிப்படாது.

தலையில் 'இருமுடி' சுமந்து கொண்டு நடந்து மலை ஏறவேண்டும்..இரண்டு முடிச்சுகளில் ஒன்றில் தங்களுக்கு தேவையான பொருட்களும் மற்றதில் சாமிக்கு பூஜை பொருட்களும் எடுத்து செல்வார்கள்.அதையும் தலையில் வைத்து கொண்டு போவார்கள். ஏனென்றால் கை, கால்கள் மலை ஏற தேவைப்படும்.

அப்போது காட்டில் ஏராளமான புலி, கடுவா (Leopard) , யானைகள், மலம்பாம்புகள் இருந்ததால் பலரும் இவற்றின் இன்னல்களுக்கு ஆளானார்கள். பலரையும் இவைகள் கொன்றிருக்கின்றன., மலம்பனி நோய் ( Maleria) இவர்கள் பலரையும் வாட்டி வதைத்து இருக்கின்றது. இவைகளால் மலைக்கு போகும் பலரும் அங்கேயே இறந்து விடுவார்கள். சிலரே திரும்பி வருவார்கள். அதனால் தான் மலைக்கு போகிறவர்களை ரொம்ப பயபக்தியாக 'சாமி' என்று அழைப்பாகள்.இதனால் மலைக்கு போகிரவரை அவரது உற்றார், உறவினர்கள் எல்லாம் போய் ஒரு கோவிலில் பூஜை செய்து வழி அனுப்புவார்கள். ஏனென்றால் திரும்பி வருபவர்கள் பாதிப்பேர் தான். இதனால் தான் மலைக்கு போகிரவர்களை புனிதமாக நினைத்து அவர்களை 'சாமி' என்று அழைப்பார்கள்.

மலைக்கு போகும் முன் அங்கு போக ஒரு மண்டலம்( 45 நாட்கள்)  training எடுக்கத்தான் 'கட்டு கட்டிய பின்' 45 நாள் விரதம். இது ஒர் பயிற்சி போல. அவர்கள் எந்தவித சுகங்களையும் அனுபவிக்காமல் மலை / காட்டு வாழ்கைக்கு பழக்கப்பட பயிற்சி. இதனால் தான் பெண்கள் சகவாசம், மற்ற எந்த சுகங்கலையும் துறந்து துறவி போல் பயில  வேண்டிய கட்டாயம். ( training period to make one to the conditions and  the rigours of the trip.)

மலையில் குளிராக இருப்பதாலும் ஷேவ் (shave)  பண்ணும் வசதி இல்லாததாலும் தாடி வளர்ப்பார்கள்.தவிர குளிருக்கு தாடி மீசை கொஞ்சம் வசதியாக இருக்கும். குளிர் காற்று முகத்தில் அடிப்பதை தடுக்கும்.

கருப்பு அல்லது சிகப்பு துணிகள் அணிவார்கள். ஏனென்றால் துஷ்ட விலங்குகள் இந்த நிறங்களைக்கண்டு அஞ்சும்.ஓடிவிடும்.

கூட்டமாக போவார்கள். பாதுகாப்புக்காக. போகும் போது சப்தமாக கத்திக்கொண்டும் போவார்கள்.( " அய்யப்பா, சாமியே, கட்டும் கட்டி சபரிமலைக்கு , கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை etc). இப்படி  கூட்டம், கூட்டமாக மக்கள் போவதினாலும் அவர்கள் போடும்  சத்தத்தினாலும் விலங்குகள் அஞ்சி விலகி போய் விடும்.

இது போல் தான் பெண்கள் அங்கு போகாததும். இந்த மேல் கூறிய காரணங்களுக்ககத்தான். பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. மற்றவர்கள் அவர்களின் பாதுகாப்பை கவனிக்க வேண்டும். தவிர அவர்கள் காலைக்கடன்கள்,  மாத விடாய் (மென்சஸ் பிரச்சனைகள்) , வெளிப்படையாக குளித்தல்  இந்தக்காரணங்களும் ஒரு தடையாக இருந்தது. ஆகையால் தான் வயது முதிர்ந்த பெண்கள் தான் அங்கு செல்ல அனுமதிக்க பட்டனர்.

இந்த மேல் கூறியவை அந்த காலத்தில் 'practical' காரணங்களுக்காக வைக்கப்பட்ட விதிகள். ஆனால் இன்றும் அதனை பற்றி அறிந்து கொள்ளாமல் அப்படியே அதே வழக்கங்களை பின் பற்றி மலைப்பயணம் செய்கிறார்கள். ஏன் எதற்கு என்று யாரும் சிந்திப்பதில்லை.

 ஒரு 'குருசாமி ' அவர்களுக்கு சில கட்டளைகளை போதிக்கிறார்.( இவர் பலமுறை மலைக்கு போனபின் தான் குருசாமி ஆகிறார் ). அவர் சொன்னவற்றை அப்படியே பின் பற்றி 'மலைக்கு ' போகிறார்கள்.போய்விட்டு வந்து "ஆஹா அற்புதம், ஆனந்தம், புளக்கங்கிதம் அடைந்தேன்" என்றெல்லாம் சொல்லி மற்றவர்களை  உசுப்பி விட்டு 'மலைக்கு' போகும் கூட்டத்தை அதிகரிக்கிறார்கள். முதலில் கேரளாவில் 'திருவிதாங்கூர் காரகள் மட்டும் தான் 'மலைக்கு' போவார்கள்.

கேரளா என்பது திருவிதாங்கூர், கொச்சி, மலபார் என்று மூன்று பிரதேசங்களை 1956 இல் இணத்து உருவானது தான்.இப்போது கூட மலயாளிகள் இந்த ‘சாஸ்தா கோவிலுக்கு போவது மிக குறைவு தான். இப்போது அங்கு போகிறவர்களில் பெரும்பான்மை தமிழர்களும், தெலுங்கர்களும் தான். மலயாளிகள் புத்திசாலிகள் இந்த மாதிரி பணம் செல்வு செய்து கஷ்டப்பட மாட்டார்கள்.

M.N.நம்பியார் என்ற நடிகர் தான் இங்குள்ள சினிமாக்காரகளை ‘மலைக்கு அழைத்து போனார். இதை பார்த்த நமது ‘தமிழர்கள் கடவுள் ‘சபரி மலையில் தான் இருக்கிறார் என்று கூட்டம்கூட்டமாக அங்கு போக தொடங்கி விட்டார்கள். பலருக்கும் ஏன் அங்கு போகிறோம், ஏன் இந்த சடங்குகள் என்றெல்லாம் தெரியாது. மற்றவன் போனால் நானும் போவேன் என்று போகிறார்கள்.

They believe in Ritual than in realism, unfortunately. This is practiced in almost all religions and they forget the reality.

இந்த தமிழர்களை அங்குள்ள மலயாளிகள் "இந்த தமிழன்மார் இவடே வன்னு நம்மட நாட்டை தூரி நாற்றிக்கின்னு"  திட்டுகிறார்கள். அதாவது இந்த தமிழர்கள் அவர்கள் காடுகள், ஆறுகள், மலைகளை 'மலம் கழித்து' கெடுக்கின்றனர் என்று. இந்த பக்தர்களால் பம்பை ஆறு, காடு எல்லாமே கெட்டு அங்குள்ள சுற்று சூழல் பாயதிக்கபடுகிறது என்கிறார்கள். அதுவும் உண்மை தான்.


ஒரு குருவாயூரை சேந்த ஒரு மலயாளி நண்பர், சென்னையில் வசிக்கிறார். அவர் சொன்னது " மலைக்கு வரும் தமிழ் மக்கள் குருவாயூர் தெருக்களில் மூத்திரம், மலம் கழித்து அசிங்கம் பண்ணுகிறார்கள்".



கடவுள் எங்கும் இருக்கிறா. அதைதான் கீதை சொல்கிறது. மற்றும் பல வேதங்கள், உபனிஷத்துக்கள் சொல்கின்றன. அப்படியும் இது போல் போகும் மக்களை என்ன சொல்வது?

  
நாம் சொல்லப்போனால் நம்மை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்கள். கடவுள் விஷயத்தில் அறிவு பின்னால் போய்விடுகிறது.என்ன செய்வது? யாரும் சிந்திப்பதில்லை. 

பகவத் கீதையில் கண்னன் "  உடலை வருத்தும் எந்த செயலும் எனக்காக செய்யாதே, ஏனென்றால் நான் உன் உடலில் இருக்கிறேன். நீ உன் உடலை வருத்தும்போது என்னையும் சேர்த்து வருத்துகிறாய் "என்கிறார்.

யார் கேட்பது?

Comments