சென்னையில் ஒரு பார்ட்டி.




இது  நடந்து ரொம்ப வருடங்கள் ஆகி விட்டன. நான் கல்பாக்கம் வேலையை விட்டுவிட்டு சவுதி அரசின் மிகபெரிய டிசாலினேஷன்-பவர் பிளான்ட் கம்பனியில் (SWCC’s Biggest Desalination and Power Plant complex at Al Jubail) Instrument engineer  ஆக போய் சேர்ந்துவிட்டேன். ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் லீவ் கிடைததில் ஊருக்கு வருவது வழக்கம்.

அப்படி  ஒரு வருடம் கழிந்து வந்தபோது நண்பர்கள் ‘பார்டி கேட்க நான் ஒரு பெரிய பாட்டிலுடன் கல்பாக்கம் போய் ‘பார்டி நடத்தினோம்.  அப்போதெல்லாம் கல்பாக்கம் போக பஸ் மூன்று மணி நேரம் எடுக்கும். மூன்று வழிகளில் போகும். ஒன்று செங்கல்பேட்-திருகழுகுன்றம் வழி, மற்ற இரு வழிகளும் மஹாபலிபுரம் வழியாக. ஒன்று திருபோரூர் வழி பழைய மஹாபலிபுரம் ரோடில், மற்றொன்று கோவளம் வழி. எல்லாமே மூன்று மணி நேரம் எடுத்து விடும்.

நண்பர்கள் ‘ரிட்டர்ன் பார்டிகொடுக்க என்னை விளித்தர்கள். (விளி= அழை. சுத்தமான தமிழ் வார்த்தை. மலயாளத்தில் உபயோகிக்கிறார்கள்) அன்று எனக்கு வேறு வேலை இருந்ததால் அவர்களை ( இளங்கோ, நடராஜன், ரவிஷங்கர்) சாயங்காலம் தேவி தியேட்டர் முன் சந்திப்பதாக தீர்மானித்தோம். சுமார் ஏழு மணிவாக்கில் அவர்களை தியேட்டர் முன் சந்தித்தேன். அங்கிருந்து மெதுவாக மௌன்ட் ரோட் புஹாரி ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். புஹாரி ஹோட்டலில் ‘நான் வெஜிடேரியன் உணவு கிடைக்கும் என்று தெரியும், ‘தண்ணி கிடைக்குமா என்று தெரியாது. அப்போதெல்லாம் எப்போதாவது நான், ‘நான் வெஜ் சாப்பிடுவது வழக்கம். பணம் கொடுத்த்தும் ‘பெயரர் சந்தோஷமாக அவனே போய் ‘பாட்டில் வாங்கி வந்தான். பாக்கி பணம் தரவில்லை. அங்கேயே ஏதோ சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். நண்பர்கள் தான் பணம் கொடுத்தார்கள். ரவிஷங்கர் “ஏதாவது படம் போகலாம் என்றான். அவன் தான் வயதில் ரொம்ப சின்னவன். தெலுங்கு பையன். தமிழை கொலை செய்து பேசுவான். மணி ஒன்பது தான் ஆயிருந்ததால் தேவி தியேட்டர் போய் ‘நட்வர்லால் என்ற ஹிந்தி படம் செகண்ட் ஷோ பார்த்தோம்.அமிதா பச்சன், ரேகா, அம்ஜத் கான் நடித்தது. பாதிப்படம் புரியவில்லை. தூக்கமா, தண்ணியா தெரியவில்லை. ரெகுலராக குடிப்பவனுக்கு பழக்கம். ஆனால்  நாங்கள் எப்போதாவது குடிக்கும் நல்ல ‘குடியர்கள்.

எனக்கு சென்னையில் வீடு இருந்தது. படம் முடிந்து வீட்டுக்கு போகலாம் என்றால் நண்பர்கள் “நாளை ராமனாதனுக்கு கல்யாணம் அங்கே போகணம் வா என்றழைக்க ஏதாவது ஹோட்டலில் ரூம் எடுக்கலாம் என்று யோசித்தோம். அந்த ராத்திரியில் அவர்கள் என் வீட்டிற்கு வர இணங்கவில்லை. (ராமனாதனை எனக்கு அவ்வளவாக பரிசயம் இல்லை.கண்டிருக்கிறேன். அவ்வளவு தான்.) அப்போது நடராஜன் “என் தம்பி வள்ளுவர் கோட்டம் பக்கம் ரூமில் தங்கி இருக்கிறான், அவன் ரூமில் தங்கி நாளை காலை கல்யாணத்திற்கு போக்லாம் என்றார். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. ஆனல் மனுஷன் விடவில்லை. சரி அங்கு தான் போகலாம் என்று முடிவாயிற்று.

மௌன்ட் ரோடில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்தோம், வள்ளுவர் கோட்டம் போக. நான்கு பேரும் ஆட்டோவில் ஏறி பயணம் செய்ய, ஆட்டோ மிக வேகமாக போனது. கொஞ்சம் நேரம் கழிந்து எங்கேயோ போய் நின்றது. நடராஜன் “என்ன என்றார்?

“வள்ளுவர் கோட்டம் வந்து விட்டது என்றான் டிரைவர்.

நடராஜன் வலது பக்கமாக இறங்கி இருட்டில் எங்கேயோ பார்த்துகொண்டு “எங்கே வள்ளுவர் கோட்டம்? என்றார்?

ஆட்டொக்காரன் ரொம்ப குறும்புக்காரன் போல தெரிந்தது. அவன் “சார் பக்கத்தில் போய் பாருங்கள் “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகம் என்று கட்டடதித்தின் மேலே  எழுதி இருக்கும் என்றான்.

எனக்கும் இளங்கோவனுக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

இப்படி நடராஜன் நின்று இருட்டில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ‘சர்ரென்று ஒரு ஆட்டொ வந்து எங்கள் ஆட்டோ பக்கம் நின்றது. அதிலிருந்த டிரைவர் (நல்ல தண்ணியில் இருந்தான்) “டேய் தலையில்லா முண்டம், என் காசை கொடுக்காமல் வண்டியில் இருந்தி இறங்கி ஓடிட்டேயே டா என்று இன்னமும் என்னென்னவோ கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு நடராஜனை, சட்டையைப்பிடித்து  அடிக்க வந்தான்.

(அப்பொது சென்னையில் ஒரு தலையில்லா முண்டம் சுற்றுவதாகவும், பல கடைகளை டீ குடிக்க அணுகினதாகவும், மக்களை பயமுருத்தியதாகவும்  ஒரு பீதி நிலவியது)

நாங்கள், எங்கள் டிரைவர் எல்லோரும்சேர்ந்து அந்த ஆட்டோ டிரைவரை சமாதானபடுத்தி திரும்பி அனுப்பினோம். ஒரு வழியாக நடராஜன் அவர் வள்ளுவர்கோட்ட்த்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் பொடி நடையாக அவர் தம்பியின் லாட்ஜ் நோக்கி  நடந்து போய் கதவைத்தட்டி அவரின் தூக்கத்தை கெடுத்து அந்த சிறு ரூமில் நால்வரும் தங்கினோம். யாரும் தூங்கினதாக  தெரியவில்லை. காலையில் எழுந்து குளிக்காமலே ‘டிரஸ் பண்ணிக்கொண்டு கல்யாண வீடு இருந்த  ‘பழைய மாம்பலதிற்கு போனோம். கல்யாணம் ஷேமமாக நடந்தது. பையனும் பெண்ணும் அவர், அவர் அப்பா மடியில் இருந்து கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள்.( பழைய காலங்களில் சிறு வயது குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு தந்தையர் கல்யாணம் செய்தனர். அவர்கள் சார்பில் இவர்கள் எல்லாவற்றையும் செய்து கல்யாணத்தை முடித்து வைத்தனர். ஆனால் இந்த வயதான ஆண், பெண்களையும் அப்படி மடியில் வைத்துக்கொண்டு கல்யாணம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அதில் சிலர் பயங்கர குண்டாக கூட இருப்பார்கள், அவர்களின் அப்பாக்களின் கதியை நினைத்துப்பாருங்கள்).

(People follow rituals without thinking it over why it is done. Even the so called Intelligent and educated do this. Once I was asked to keep my nephew on my lap as the girl was an ayyankaar, I refused to do it. My brother in law did not talk to me for some months because of this.)

கல்யாண தாலி கட்டியதும் நான் அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் பிச்சிக்கொண்டு போக எண்ணி யாரும் பார்ர்காதபோது வெளியில் வந்தேன்.  பின்னர் நான் அங்கிருந்து ‘பிச்சிக்கொண்டு வீட்டுக்கு போனேன்.குளித்து சப்பிட்டபின் தான் கொஞ்ச ஃப்ரெஷ் ஆனது


 படத்தில் நான், இளங்கோவன், ரவிஷங்கர். நான் சென்னையில் வசிக்கும்போது வீட்டிற்கு வந்தபோது எடுத்தது.

Comments