தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ( கேரள )தமிழர் செண்பகராமன் பிள்ளை



செண்மகராமன் பிள்ளையை எத்தனை தமிழருக்கு தெரியும்?


தமிழனார செண்பகராமன் பிள்ளை திருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழர். இவர் தந்தையார் சின்னஸ்வாமி பிள்ளை ஒரு போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக திருவிதாங்கூர் அரசிடம் பணி செய்தவர். தாயார் நாகம்மாள். மாடல் ஸ்கூளில் படித்த செண்மகராமன் பிள்ளை சிறு வயதிலேயே சுதந்திர உணர்ச்சியும் தேசபற்றும் கொண்டிருந்தார். அந்த காலத்தில் இப்போதய கன்யாகுமாரி மாவட்டம் திருவிதாங்கூர்

அரசரின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது.



பள்ளியில் படிக்கும்போது அவர் சர் வால்டர் ஸ்டிரிக் லாண்ட் என்ற ஆங்கிலேயரின் கவனத்தை கவர்ந்தார். Biologist ஆன சர் வால்டர் ஸ்டிரிக் லாண்ட் இந்தியாவிற்கு வந்து இங்குள்ள மரம், செடி, இலை தழைகளை சேகரிக்க வந்தவர். அவருடன் செண்பகராமன் பிள்ளையும் அவரின் மச்சான் பத்மனாப பிள்ளையும் நட்பாகி அவருடன் இங்கிலாந்து போக தீர்மானித்தனர்.

கொளும்பில் பத்மனாப பிள்ளை திரும்பி வர செண்பகராமன் பிள்ளை அந்த ஆங்கிலேயருடன் மேலே பயணம் கொண்டார். ஆஸ்டிரியாவில் சர் வால்டர் ஸ்டிரிக் லாண்ட் அவரை ஒரு பள்ளியில் சேர்த்தார். பின்னர் செண்பகராமன் ஒரு டெக்கனிக்கல் காலேஜில் சேர்ந்து இஞ்சினீரிங் டிப்ளமா எடுத்தார். பின்னர் முதல் உலக யுத்தத்தில் 'பெர்லினில்' அவர் மற்ற இந்தியர்களை சேர்த்து 'இந்திய நண்பர்கள் கமிட்டீ' அமைத்தார். ஜெர்மன் அரசு, கெய்சர் தலைமையில் இவர்களுக்கு உதவி செய்தது.

செண்பகராமன் பிள்ளை அஃப்கானிஸ்தானில் அமைக்கப்பட்ட 'இந்திய அரசில்' வெளினாட்டு மந்திரியாக இருந்தார்.

பின்னர் ஜெர்மனி தோற்றுப்போனதால் இவர்கள் முயற்சிகள் வீணாகி போனது. இவர் மணிபூரை சேர்ந்த லக்ஷ்மி பாய் என்ற பெண்மணியை 'பெர்லினில்' மணந்து கொண்டார்.

பின்னர் இவர் அடால்ஃப் ஹிட்லரிடம் எதிர் கருத்து கொண்டிருந்ததால் இவரை கொல்ல ஹிடலிரின் போலீஸ் நடவடிக்கை எடுத்து இவர் உணவில் விஷம் கலந்து மே 26, 1934 இல் கொலை செய்யப்பட்டார்.

செண்பகராமன் பிள்ளையின் விருப்பப்படி அவரின் 'சாம்பல்' 33 வருடங்களுக்கு பின் அவர் மனைவி இந்தியா கொண்டு வந்தார். அது INS Delhi என்ற இந்திய கப்பல் படை கப்பல் செப்டம்பர் 16, 1966 இல் கொச்சிக்கு கொண்டு வந்தது.

வாழ்க அவர் புகழ். ( இவர் படித்த அதே ஸ்கூளில் தான் நானும் படித்தேன் என்பது எனக்கு பெருமை.) கேரள அரசு அவருக்கு சகல மரியாதையும் அளித்தது.

Comments