நான் திருவநந்தபுரம் (திரு அனந்தபுரம்- அங்கு அனந்தன் என்ற பாம்பு வசித்து வந்ததாகக் கூறப்பட்டது. அதனால் தான் அந்த பெயர்) Model High School இல் படிக்கும் போது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.
இது ரொம்ப பெரிய ஸ்கூள் (பள்ளிக்கூடம்). கிட்டதட்ட 500 ஏக்கரில் இரண்டு குன்றுகளின் மேல் கட்டப்பட்டது. இது ஐரிஷ் டீச்செர்களால் (Irish Teachers / Head Masters) ஐரிஷ் கட்டிட பாணியில் கட்டப்பட்டு திருவிதாங்கூர் மஹாராஜாவால் நடத்தபட்டது. ஏராளமான கட்டடங்கள். விளையாட்டு திடல்கள், ஏராளமான மரங்கள் என்று ஒரு காட்டுக்குள்ளே இருப்பது போல இருக்கும். கிட்டதட்ட 150 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. என் தந்தையாரும் இங்கே தான் படித்தார்.அப்போதே எங்களுக்கு manual training என்று பேப்பர் / மர வேலைப்படுகள் சொல்லி கொடுத்தார்கள்.
நான் படிக்கும் போது இந்திய வாத்தியார்கள் தான் இருந்தார்கள். அப்போது தமிழ் மீடியம் தொடங்கி இருந்தார்கள். நான் வேறோரு தமிழ் ஸ்கூளில் இருந்து ஐந்தாம் வகுப்புக்கு இங்கே போய் சேர்ந்தேன்.
விஷயம் இது அல்ல.
நான் 9 ஆம் வகுப்பில் படிக்கும் போது என்னுடன் பாலசுப்ரமணியன் என்றோரு நண்பன்
படித்தான். அவன் என்னைவிட பெரியவன். தோற்றுப்போய் என்னுடன் படித்தான்.
அந்த பள்ளியில் ஒருமுறை தோற்றால் அடுத்த வருடம் படிக்கலாம். ஆனால் அந்த
வருடமும் தொற்றுப்போனால் பள்ளியை விட்டே அனுப்பி விடுவார்கள்.
ஓரு முறை எங்களுக்கு தேர்வு நடந்தது. அப்போது அரை பரீட்ஷை எழுதும் போது அவன் காப்பி அடித்து பிடி பட்டான். அவனை பிரின்சிபலிடம் அழைத்து போனார் வாத்தியார்
(invigilator.) எங்கள் பள்ளியில் தான் டீச்சர் டிரயினிங்க் காலேஜ்
இருந்ததால் அதற்கு ஹெட் மாஸ்டரும் அவருக்கு மேல் பிரன்சிபாலும் இருந்தனர்.
பிரின்சிபல் அவனை பிரம்பால் அடித்து அவனுடைய தந்தையை அழைத்து வர சொன்னார். அவன் வீட்டுக்கு போனால் அவன் தந்தை அவனை அடித்தே கொன்று விடுவார்.
அவன் வெளியே போய் நின்று கொண்டிருந்தான். அப்போது ரோடில் போய் கொண்டிருந்த ஒருவரை அழைத்து அவர் கையில் 2 ரூபாய் வைத்து அழுத்தி அவரை பிரின்சிபாலிடம் அழைத்து வந்தான்.அவரை தன் தந்தை என்று அறிமுகம் செய்துவைத்தான் .
அவர் பிரின்சிபலிடம். "என்ற மகன் இனி இது போல காரியங்கள் செய்யுல்லா, சாரே." ( என் மகன் இது போல காரியங்கள் இனி செய்யமாட்டான் சாரே) என்று சொல்லி ஒரு பேப்பரில் அதே போல மலயாளத்தில் எழுதிகொடுத்து விட்டு போனார். நன்றாக நடித்துவிட்டுபோனார்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. இவனை நாங்கள் 'பாலசுப்பி' என்று அழைப்போம். கருப்பாக இருப்பான். அவன் அணியும் சட்டை அவன் நிக்கரை( Nicker) விட நீளமாக இருக்கும். இதனால் அவன் நிக்கர் போட்டிருப்பதே தெரியாது. நெற்றி நிறைய சந்தணம், கும்குமம் தடவி இருப்பான். ஒல்லியாக இருப்பான். 9ஆம் வகுப்புக்கு பின் இவனை பார்த்த ஞாபகம் இல்லை.
Comments
Post a Comment