பத்மனாப ஸ்வாமி கோவில்- திருவனந்தபுரம்

பத்மனாப ஸ்வாமி கோவில்  கேரள தலை நகரான திரு அனந்த புரத்தில் மிக பிரசித்தம். அந்த பெயரே அனந்த பத்மனாபன் என்ற  விஷ்ணுவின் பெயர் தான். இந்த கோவிலின் பெயரில் தான் இந்த ஊர் உருவாக்கப்பட்டது. இந்த கோவில் 'திவ்ய பிரபந்தத்தில்' போற்றப்பட்டிருக்கிறது. தமிழ் ஆழ்வார்கள் இதனை பற்றி பாடி உள்ளனர். மற்ற கேரள கோவில்கள் போல் இல்லாமல் இந்த கோவிலில் தமிழ் நாட்டு கோவில்களைப்போல் பெரிய கோபுரம் அமைந்துள்ளது.






படத்தில் காண்பது கிழக்கு நோக்கி இருக்கும் கோவிலின் இடது  புரத்தில் இருக்கும் பத்ம தீர்த்தம் குளத்தின் கரையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். முன்னால் காண்பது 'பத்ம தீர்த்தம்'. முன்னாட்களில் அரசரும், அவர் குடும்பமும் ,ஸ்வாமி  பத்மனாபனும் தான் இதில் குளிக்க முடியும். முறை ஜபம், லட்ச்சார்ச்சனை போன்றவைகள் இந்த குளத்தின் த்ண்ணீரில் நின்று கொண்டு தான் செய்யப்படும்.






கோவிலின் முன் தோற்றம். கிழக்கு பார்த்த கோபுரம். இந்த கோவில் ஒரு பெரிய கோட்டைக்குள் அமைதிருக்கிறது. வானுயர்ந்த மதில் சுவர்கள் ஒரு சிறு நகரத்தையே சுற்றி கட்டப்பட்டு, கோவில், அரச மாளிகைகள், சில அக்ரஹாரங்கள் என்று இருக்கும், இப்போதும். இந்த கோவிலின் எதிரில் தாம் முக்கிய 'சாலை பஜார்' உள்ளது. (இங்கு தான் எங்கள் வீடும் இருக்கிறது).


குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட வேறொரு படம். வேரெங்கிலும் இல்லாத வேறொரு விசெஷம் இந்த கோவில், திருவிதாங்கூர் நாட்டில் உண்டு. இந்த கோவிலைக்கட்டிய மன்னர் மார்தாண்ட வர்மா இந்த கோவிலின் ஒற்றைக்கல்  மண்டபத்தில் தன் உடை வாளை வைத்து  விழுந்து வணங்கி தன் நாடான திருவிதாங்கூரை திரு அனந்த பத்மனாபனுக்கு அற்பணித்து அவரின் 'தாசனாக' அரசாள தானும் தன் சந்ததியினரும் இருப்பார்கள் என் உறுதி எடுத்துக்கொண்டார். இதனால் தான் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் தங்களை 'பத்மனாப தாசர்கள். என்று சொல்லிக்கொள்வதுண்டு.





பத்மனாப ஸ்வாமி கோவிலை காண்பவர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அதிசயம் இந்த படத்தில் காணும் 'மேத்த மணி'. இந்த கடிகாரம் கோவிலின்  வலது புரம் இருக்கும் ஒரு மாளிகையின் மேல் உள்ளது. மிக பழைய மணி. எப்போது மணி அடித்தாலும் நடுவில் இருக்கும் தலையின் வாய் திறந்து மூடும். அப்போது தலையின் இரு புறமும் இருக்கும் ஆடுகள் மேலும் கீழும் போய் வரும். நாங்கள் சிறு வயதில் இருந்தே இதை பார்க்கவே கோவிலுக்கு போவோம்.

மலயாளத்தில் முஸ்லீம்களை கொச்சையால மேத்தன் என்பார்கள். முஹமதியன் என்பதன் சிதைந்த, உருமாறொய சொல் என னினைக்கிறேன். இந்த சிலையின் முகம் ஒரு முஸ்லீம் போல் இருப்பதால் இதனை  மேத்த மணி என்றழைப்பர்.

நவராத்திரியில் இந்த கோவிலில் சிறப்பாக உற்சவம் ஒன்பது நாட்களும் நடக்கும். அப்பஒது பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி யானை மேலும், குமாரபுரத்தில் இருந்து குமாரஸ்வாமி வெள்ளிகுதிரையிலும் வந்து ஒன்பது நாட்களும் கொலு வீற்றிருப்பார்கள்

மக்கள் இதை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்த சமயத்தின் தான் கோவில் முன்பு பெரிய மரத்திலான  பெரிய மர  பொம்மைகள்  நிறுத்தப்படும். அது தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் என்றும் ஒர் சிறிய அளவில் 100 கௌரவர்களும் அமைக்கப்படுவர்.

தினமும் 101 வீர்கள் பழங்கால ஆடைகள் அணிந்து  சண்டையிடுவார்கள் அந்த பொம்மைகள் முன் வாளையும் கேடையத்தையும் ஆட்டி. பின் அவர்கள் தோற்று ஓடுவர். இதை "வேல களி" என்பர்.

எட்டவது நாள் வேட்டை நடக்கும். ராஜாவும் பத்மனாபனும் அன்பு எய்துவார்கள். இதற்காக ஒரு கருக்கு (இளனீர்) வைக்கப்பட்டிருக்கும். அதில் தான் அன்பு எய்துவார்கள்.

ஒன்பதாம் நாள் ஆராட்டு நடக்கும். ராஜா, ஸ்வாமிகள் படைகள் புடை சூட நடந்து கடற்கரைக்கு போய் நெராடுவார்கள். இதை "ஆராட்டு" என்பர்.

பின்னர் நவ ராத்திரி முடிந்து குமாரஸ்வாமியும் சரஸ்வதியும் தங்கள் ஊர்களுக்கு, பத்மனாபபுரம், குமார கோவில்களுக்குபொய் சேர்வார்கள்.

Comments