செல்லம் மாமி



எங்கள் அபார்ட்மென்ட்  பக்கத்தில் குடியிருந்த்து ஒரு கேரள குடும்பம், ஒரு சின்ன வயது தம்பதி, இரெண்டு குழந்தைகள். ஒரு பெண், ஒரு ஆண், பெண் மூத்தவள். இந்த பெண் எப்போதும் எங்கள் வீட்டு கதவைத்தட்டி ஏதாவது உதவி கேட்பாள். அந்த குழந்தைகள் எங்கள் வீட்டில் வந்து அனியாயத்திற்கும் அட்டகாசம் பண்ணும். நிறைய பொருட்களை உடைத்தல், விஷமங்கள் செய்யும். அந்த பெண் அவர்களை இங்கு விட்டு விட்டு வெளியே போவாள். அந்த பெண்ணில் அம்மா தான் செல்லம் மாமி. 

 செல்லம் மாமியை எனக்கு இப்படித்தான் பழக்கம். வாழ்க்கையில் மிகவும் அடிபட்ட மாமி அதை சட்டை செய்யாமல் தன் முயற்சியால் தன்னையும் தன் பெண்களையும் முன்னேற்றிவிட்டாள். அவர்களின் கதைதான் இது. பெயர்கள், இடங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அவர்கள் கேரள மலயாளம் கலந்த தமிழ் பாஷையிலே கதை சொல்லப் பட்டிருக்கிறது.

செல்லம் மாமிக்கு ஒரே எரிச்சல் தாங்கலே. அந்த மனுஷனே செருப்பால் அடிக்கலாமா என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனா மனுஷன் வீட்டிலே இருந்தா தானே? எங்கையோ போய் தொலஞ்சிட்டார். என்ன பண்றது புருஷனா போயிட்டரே. கெட்ட கெட்ட வார்தைகளாலே திட்டணம் போல இருந்தது.  கார்த்தாலே இருந்தே காணல்லே. இல்லாட்டா காப்பி, காப்பின்னு உயிரே எடுப்பார். இப்படி மாமி நினைசிண்டு வீட்டின் உள்ளேயும் வெளியுலுமா நடந்திண்டிருந்தா.

மாமிக்கு என்ன கோபம் தெரியுமா?

பாவம் மாமி அக்கம் பக்கத்திலே இருந்து கடன் வாங்கி, இட்லி வித்து சேத்து வைத்த பணத்தை எடுத்துண்டு மாமா ஓடிபோயிட்டார். இதே பொழப்பாய் போயிற்று என்று மாமியும் விட்டுட்டா. மாமா, செல்லம் மாமியே பாடா படுத்திண்டு இருந்தார் எப்போதும்.

ஒரு முறை மாமி அங்கே இங்கே கடன் வாங்கி   ஒரு பசுவை ஆயிரத்து ஐனூறு ரூபா கொடுத்து வாங்கினா. அந்த பசுவை கறந்து பால்  எடுத்து விற்றால் ஏதோ கொஞ்சம் பணம் வருமே. அது ஆத்துக்கு உபயோகமா இருக்குமேன்னு சந்தோஷமா இருந்தா மாமி. அந்த பசுவை கஷ்டப்பட்டு பால் கறந்து நாலு வீட்டுக்கு கொடுத்தா செல்லம் மாமி. மாமிக்கு பால் கறக்க தெரியாது. மாடு பல முறை மாமியை உதைச்சுட்டது .பசுவின் குளம்பு பட்டு  மாமிக்கு காயம் கூட பட்டது.

இப்படி இருக்கரச்சே எங்கோ கொஞ்ச நாள் காணாமல் பொயிருந்த மாமா திடீரென ஒரு நாள் கார்த்தாலே வந்தார் ஆத்துக்கு.. .  .                             

மாமி குளிச்சுட்டு வரச்சொன்னா. அவரும் குளிச்சுட்டு வந்தார்.

நன்னா டிஃபன் சாப்பிட்டுட்டு வாசல் திண்ணையிலே  படுத்திண்டிருந்தார். அப்போ பின்னாம் பக்கம் கட்டியிருந்த பசு " ம்மா" ண்ணு அதிர குரல் கொடுத்தது.  மாமா எழுந்து உக்காந்துண்டார்.

"யார் ஆத்திலே பசு கத்தறது " என்னாரே, பாக்கலாம்.

மாமி " அது பக்கத்தாத்து பசு, சும்மா காளை சேர்க்க கத்தறது" "ன்னா.

மாமா படுத்துண்டார். கொஞ்சம் கழித்து பின்னாம் புறம் போய் பார்த்தார். பசு கன்னுக்குட்டியோட நின்னுண்டிருந்தது. ஒண்ணும் சொல்லாம வந்துட்டார்.

அடுத்த நாள் காலெம்பர மாமி பாலை கரந்து மூத்த மகள் வசந்தா கைலே கொடுத்து கடைக்கு பால் ஊத்தி வர சொல்லி அனுப்பினா. மாமாக்கு சூடா இட்லியும் தேங்கா சட்னியும் பண்ணிண்டு வந்து மாமாவை தேடினா. மாமாவை காணோம்.

" எங்கே போனார் இந்த துர்வாசர் " ன்னு பாக்கரச்சே மாமா தாம்பூலம் தரிச்சு பாட்டு ஒண்ணை முனகிண்டு எங்கிருந்த்தோ வந்தார். மாமா தாம்பூலம் தரிச்சுண்டு வந்தா நிச்சயம் ஏதோ உள்ளே போயிருக்குண்ணு அர்த்தம்.


இதை உள்ளேயிருந்து பார்த்திட்டு வந்த மாமி தலைவிதியேண்ணு வெளியே வந்து " எங்கே காலம் கார்த்தாலே போனேள் . சரி வந்து இட்லி சப்பிடுங்கோ  ண்ணூ மாமி சொல்லிண்டே ஆறு இட்லியை சட்னியுடன் ஒரு தட்டிலே வச்சு மாமாவண்டே நீட்டினா.

மாமா ஒரே ஒரு தட்டு தட்டினார் பாருங்கோ, தட்டு தெருவோரம் சாக்கடையிலே போய் விழுந்தது. . மாமா எங்கயோ போய் ஏதோ தின்னுண்டு அல்லது குடிச்சுண்டு வந்திருக்கார் போல . பொங்கி வந்த அழுகையை அடக்கிண்டு மாமி பின் வாசல் பக்கம் போனா. அங்கே கட்டியிருந்த பசுவை காணல்லே.

"அய்யய்யோ பசுவை காணெல்லேயே" ண்ணு கத்திண்டே மாமி வெளியே ஓடி வந்து பெருங்குரல் எடுத்து அழுதா.

மாமா எழுந்து "சும்மா கடடி மூதேவி, நாந்தான் அதே வித்துட்டேன் என்றாரே" பார்க்கலாம்.

மாமா அதை வெரும் ஐனூரு ரூபாக்கு வித்துட்டு வந்துட்டார்.இப்படித்தான் போன மாசம் ஒரு கல்யாண வீட்டுக்காக மாமி ஆர்டெர் எடுத்து ஆயிரம் இட்லி பண்ணி மாமா கிட்ட கொடுத்து கல்யாண வீட்டிலே கொடுக்கச் சொல்லி அனுப்பினா. ஆனால் மாமா எல்லா இட்லியயும் ரோட்டிலியே போட்டுவிட்டு வந்துட்டார். பாவம் மாமி மூணு சின்ன பெண் குழந்தைகளையும் வச்சிண்டு ரொம்பத்தான் கஷ்டப்பட்டாள்.

மாமாவுக்கு மாமியை முதல்லே இருந்த பிடிக்கல்லே. மாமிக்கும் மாமாவுக்கும் ரொம்ப வயசு வித்யாசம் அதிகம். . மாமாவுக்கு முப்பத்தஞ்சு வயசு , மாமிக்கு பதினஞ்சு. ரொம்ப கஷ்ட ஜீவிதம் நடத்தீட்டு வந்த செல்லம் மாமியொட அம்மா சின்ன வயசிலியே மாமிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாமாமி அவ்வளவு நன்னா இருக்க மாட்டா. சுமாரான ஒயரம், கன்னம் ஒட்டி பல் கொஞ்சம் எடுப்பா பாக்க ரொம்ப சுமாரா இருப்பா.  நிறம் கூட கம்மி தான். ஆனா மாமா நன்னா சிவப்பா, ஒயரமா பாக்க ரொம்ப நன்னாவே இருப்பார். மாமா எந்த வேலையும் செய்ய மாட்டார் மாமாவுக்கு மாமியை அவ்வளவாக  பிடிக்காது. எப்போதும் படுத்தி எடுத்துண்டு இருப்பார். எந்த வேலைக்கும் போகாம ஆத்துலே உக்காத்துண்டு வெட்டி பேச்சு பேசிண்டு நாளே கடத்திண்டு, சீட்டு வெளையாடிண்டு , சினிமா பாத்துண்டு காலட்ஷேபம் பண்ணிண்டு சுகவாசியா திரிஞ்ச்சிட்டு இருந்தார்.

மாமா திடீர் திடீர்ன்னு அடிக்கடி காணாமல் வேறே போயிடுவார் மாமா. இப்படி வாழ்க்கை ஓட்டிபோனாலும் மாமி மூணு பென் குழந்தைகளை பெத்த் எடுத்துட்டா. பாவம்மாமி, அறியாத வயசுலயே மூணு பெண் குழந்தைகளையும் மாமாவையும் வச்சுண்டு அல்லாடினா. யாரெண்டெயும் எதுவும் கேட்காதே தைரியமா மலையாள நாட்டிலே மூணு பெண் குழந்தைகைள்யும் வெச்சுண்டு வாழ்கையை கொண்டு போனா.  


 செல்லம் மாமிக்கு சொந்த ஊர் திருனெல்வேலி பக்கம். பல வருஷங்கள் முன்னாடி மாமியோட தாத்தா ஊரிலே (திருனெல்வேலி பக்கம் ஏதோ கிராமம்), கோயிலிலே பூஜை பண்ணிண்டு இருந்தார். வரும்படி குடும்பம் நடத்த போதாததாலே திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார்.

அந்த காலத்திலே திருவனந்தபுரத்திலே பிரமணாளுக்கு "ஊட்டு பிறை " வச்சு சாப்பாடும் போட்டு வீடும் கொடுத்து திருவிதாங்கூர் மஹராஜா  காலத்திலே வச்சிருந்ததாலே ஒரு பிரச்சனையும் இல்லாமே போய்ட்டது. ரொம்ப வருஷம் இந்த "ஊட்டு பிறை இருந்தது. (இதை  நிறுத்தினது கூட ஒரு பிராமணன் தான். .C.P. ராமஸ்வாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது தான் இந்த வூட்டு பிறை நிறுத்தப்பட்டது)

அந்த காலத்திலே பிராமணாளுக்கு சாப்பாடு, தங்க இடம், இருக்க வீடு, படிப்பு இதெல்லாம் கொடுக்கறது பகவானுக்கே கொடுக்கறது போலேன்னுட்டு  புராணங்களிலே சொல்லி இருந்ததாலே திருவிதாங்கூர் மஹராஜாக்கள் இதை செஞ்சுண்டு வந்தா. முதல் முதல்லே திருவிதாங்கூர் ராஜாக்கள் இப்போதய கன்யாகுமாரி ஜில்லா பத்மனாப புரத்திலே தான் அரண்மனை கட்டிண்டு ராஜ பரிபாலனம் செஞ்சுண்டிருந்தா.

 மார்த்தாண்ட வர்மா குழந்தையா இருக்கிற்ச்சயே ராஜா ஆயீட்டார். அவருக்கு எதிரா எட்டு வீட்டு பிள்ளைமார், மாடம்பிமார் ண்ணு ரெண்டு குடும்பக்காரா சண்டை போட்டு அவரை கொல்ல பார்த்தா. பலமுறை அவாகிட்டே இருந்து தப்பிச்சு அவாளை எல்லாம் அழிச்சிட்டு திருவனந்தபுரத்திலே புது அரண்மனை, பெரிய பத்மனாபசாமி கோயில் எல்லாம் கட்டிண்டு வந்து திருவிதாங்கூர் ராஜ்யத்தே ஸ்தாபித்தார் மார்த்தாண்ட வர்மா.

 அந்த காலங்களில் தான் தமிழ் பிராமிணாள் நிறய பேர் திருவனந்தபுரத்துக்கு வந்து தங்கிட்டாள். இப்போ கூட திருவனந்த புரத்திலே பத்மனாபஸ்வாமி கோயிலை சுத்தி தமிழ் பிராமனாள் அக்ரஹாரம்கள்  இருக்கின்றன. செந்திட்டை, பழய சாலை, புத்தென் சாலை இங்கே கூட அக்ரஹாரங்கள் உள்ளன.) இந்த காரணத்தினாலேயே நிறைய பிராமணர்கள் திருவனந்தபுரத்தில் வந்து, தங்கி படித்தது (படிப்பும் இனாம் என்பதால்

ஓரு நாள் மாமா , மாமாவோட மூத்த பொண் வசந்தா பரீட்ஷைக்கு வைத்திருந்த ரூபா ஐனூரையும் எடுத்துண்டு ஒடி போய்ட்டார். மனுஷன் போனது போனது தான். வரவே இல்லே. மாமி கொஞ்ச நாள் அழுதா. எல்லாறையும் கேட்டு பாத்தா, ஆளே விட்டு தேடி பாத்தா. மாமா காணவே இல்லே. பின்னர் வரவும் இல்லே.

மாமிக்கு ரொம்ப வைராக்யம் வந்துடுத்து. இந்த குழந்தைகளே தனியா வச்சுண்டு பெரியவளா ஆக்கி கல்யாணம் பண்ணி கொடுப்பேன் என்று துணிச்சலா வாழ்க்கையை கொண்டு போனா. அவா ஊர் பிராமண சமாஜம்  மாமி படர கஷ்டத்தே பாத்துட்டு ஒரு வீடுகொடுத்திருந்தது. அதனாலே வீட்டு வாடகை கொடுக்க வேண்டாம். ஆனா மத்த செலவுகள் இருக்கே. அதனாலே மாமி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுகொண்டு செய்வா.  தோசை , இட்லி மாவு ஆட்டி கொடுப்பா, வடாம் போடுவா, அப்பளம் பண்ணுவா, கல்யாண சமயலுக்கு கூடமாட ஒத்தாசைக்கு போவா

அவா வீட்டு திண்ணையிலே ஒரு சின்ன கடை வச்சு அதிலெயும் ஏதோ வரும்படி வர மாதிரி பாத்துண்டு இருந்தா.முட்டாசு, பப்படம், சிலேட்டு குச்சி, தீப்பட்டி, பீடி. மாமி இருந்தது அக்ரஹாரம் கிடயாது. அக்கம் பக்கம் மலயாளஜனங்கள் தான், அதுதான்பீடி), கடலை, கப்பலண்டி (வேர்கடலை), பட்டாணி, சேஃப்டி பின், சாந்து பொட்டு, கண் மஷி ( மை), சமயத்தில, முறுக்கு, சீடை எல்லாம் இருக்கும். மாமி கடன் கொடுக்க மாட்டாவீட்டிலே காய்க்கிற மாங்கா, தேங்கா கூட விக்கற பொருள் தான் மாமிக்கு.

பொண்களும் நன்னா படிசசா. மூணு பேரும் டிகிரி எடுத்துட்டா. மாமி பாத்தா. பொண் பசங்களெ வச்சுண்டு தனியா இருக்க முடியாது.

அதனாலே ஒவ்வொரு பொண்ணுக்கும் ஏதோ முடிஞ்ச வரை நஹை போட்டு கல்யாணமும் செஞ்சு வச்சுட்டா

நல்ல வேளை வந்த மருமான்களெல்லாம் நல்ல மனுஷாளா இருந்தா பிக்கல் பிடுங்கல் ஏதும் இல்லே. ஒரு மகள் எரணாகுளத்திலும், ஒருத்தி அவ கூட இருக்க மூன்றாம் மகள் சென்னையில் புருஷனோட இருந்தாள். அவள் புருஷனுக்கு ஏதோ கூரியர் கம்பனியில் வேலை. இரண்டு குழந்தைகள். ஒரு ஆண் ஒரு பெண். ( இந்த குழந்தைகள் எங்கள் வீட்டில் வந்து அட்டகாசம் செய்யும். வந்த முதல் நாளிலேயே எங்கள் மிக்ஃஸி கவரை உடைத்துவிட்டது அந்த பெண்குழந்தை. சொன்னால் அந்த பெண் சிரிக்கிறாள். உடைத்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லவில்லை. அதுபோல் என்ன வேண்டுமென்றாலும் எங்கள் வீட்டு கதவைத்தான் தட்டும் அந்த பெண். அவ புருஷன்  எப்போதும் வீட்டில் இருக்க மாட்டான். பலமுறை அந்த குழந்தைகளை நாங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச பின்னாலும் செல்லம் மாமி ஓஞ்சு போகல்லே தனியா இருந்துண்டு அதே திண்ணக்கடையில் வியாபாரம் செய்தா, வடாம் போட்டா, கல்யாண சமயலுக்கு போனா. கவர்மென்டிலிருந்து இனாமாக கொடுதத வீட்டு மனையில் ஒரு வீடு கட்ட இப்போ மாமி முயற்ச்சி எடுத்துண்டு இருக்கா. மாமி மனசு வச்சா எந்த வேலையயும் பண்ணிடுவா. நல்ல தைரியமும் விடா முயற்ச்சியும் மாமிக்கு உண்டு. இப்ப கூட சென்னையிலே இருக்கும் பெண்ணுக்கு முடியாம போச்சுன்னா உடனே " ரிசெர்வேஷென்" எதுவும் பண்ணாமல் அப்படியே கூட்டத்தோடு கூட்டமா ரயிலில் ஏறி அப்பர் பெர்த்திலே உக்காந்துண்டோ, படுத்துண்டோ வந்துடுவா. மூணு பொண்களையும் கண்கள் போலே மாமி இன்னிக்கும் பாத்துக்கறா.

ஆனா ரெண்டு பொண்ணுகள் அம்மா கிட்டே இன்னமும் "அதை குடு , இத கொடு" ண்ணுன்னு கேட்டு தொந்தரவு பண்ணிண்டு தான் இருக்கா. மாமியும் முடிஞ்சவரை கொடுத்துண்டு தான் இருக்கா.

மாமி ரொம்ப சாது. ஆனா மாமா பேச்சை எடுத்தா பத்ர காளி ஆகிடுவா. "அந்த மனுஷன் நிழல் கூட என் மேலே படக்கூடாது" என்பாள்.

 "அந்த மனுஷனோட நிழல் கூட என் மேலே விழ கூடாது அப்படி நீங்க யாராவது அவர் கூட தொடர்ப்பு வச்சுண்டேள்னா என் மூஞ்சியில் முழிக்காதேள் "அப்படின்னு பொண்கள் கிட்டே சொல்லிட்டாள்.

ஆனா மாமா சென்னயிலே இருக்கிற மூணாவது பெண்ணுக்கு ' லெட்டெர் ' மேலே "லெட்டெர்" எழுதினார்.

'நேக்கு ரொமப வயசு ஆயிடுத்து, திருந்திட்டேன், பழய தப்புக்கு எல்லாம் வருத்தப்படறேன்.  உங்ககூட சேர்த்துக்குங்கோ. தனியா இருக்க,  நடமாட முடியல்லே, பணம் ஏதும் சேர்த்து வைக்கலே, பார்க்க யாரும் இல்லே " அப்படி இப்படின்னு " லெட்டெர்" எழுதினார்.

கடோசி மருமான் கொஞ்சம் இறக்க சுபாவக்காறன்.

"வாங்கோ மாமா வந்து எங்களோட இருங்கோண்ணு" லெட்டெர் எழுதினான்.

மாமாவும் வந்து ரெண்டு நாள் இருந்தார். செய்த தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்டார். கடோசி பொண்ணுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. ஆனாக்க "சின்ன வயசிலே நம்மளெயெல்லாம் விட்டுண்டு போன மனுஷன்னுட்டு" கோபம் கூட வந்தது. மூணாம் நாள் மாமாவே பொறப்பட்டு போயிட்டார்.

மாமி எல்லா பொண்கள் கிட்டயும் சொல்லியிருந்தா, "அவர் வந்தா சேத்துக்கப்படாது , என்னை அவ்வளவு கொடுமை பண்ணீயிருக்கார்.  சேர்த்தேள்னா என் மூஞ்ச்சியிலே முழிக்கப்படாது

இப்பொவும் மாமி தனியாத்தான் திருவனந்தபுரத்திலே இருக்கா.  அவளுண்டு, அவா திண்ணக்கடை உண்டு, கல்யாண வேலையுண்டுன்னு வாழ்க்கை போயிண்டுருக்கு

சின்ன பொண் சென்னைக்கு  வருந்தி வருந்தி கூப்பிடுவா. ஆனா மாமி "கடோசி காலம் வரை நான் தனியத்தான் இருப்பேன்" ன்னுட்டு தனியாத்தான் இருக்கா.

பொண்ணே பாக்கணம்ன்னு தோணித்தால் ரயில்வே ஸ்டேஷன் போய்  “ரிசெர்வேஷன் செய்யாமல்" ஜெனரல் கம்பார்ட்மென்டில் ஏறி தனியா சென்னைக்கு வந்துடுவா. ஒரு வாரம் பேரப்பிள்ளைகளை கொஞ்சிவிளையாடிட்டு, பொண்ணுக்கு கூடமாட ஒத்தாசை செய்துண்டு இருப்பா. இங்கே வந்தா கூட கடைக்கு போய் சாமங்கள், இங்கே ரேஷன்லே கிடைக்கிர அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை எல்லாம் வாங்கிண்டு ஊருக்கு போறச்சே எடுந்துண்டு போய்டுவா. ஊருக்கு போறச்சையும் தனியா தான் "ரயில்" ஏறி போய்டுவா. பொண்ணுக்கு ரேஷன் கார்ட் கிடையாததால் ரேஷன் கடையில் அதிக காசு கொடுத்து வான்ங்கிண்டு போவள்.

செல்லம் மாமிக்கு பெரிசா கடவுள் பக்தி ஏதும் கிடயாது.    சும்மா ஆத்திலே சாமி படத்தே பாத்து கும்பிடரதோட சரி. ஏதோ இத்தரே நாள் சாமி நன்னா வச்சுண்டுருக்காரே அதுவே பெரிய விஷயம்.இப்போவும் கார்த்தேலே எழுந்து யார், யார் டிஃபின் சொன்னாளோ அவா சொன்ன "டிஃபினை" ரெடி பண்ணி , திண்ணை கடையிலே உக்காந்துண்டு வரவா, போரவாக்கு சமான்கள் வித்துண்டு வாழ்க்கை போயிண்டிருக்கு.  

யாருடைய பச்சாதாபத்தையும் மாமி எதிர்பார்க்காலை. தான் உண்டு, தன் பெண்கள், திண்ணைகடை உண்டு ன்னு மாமி வாழ்ந்துண்டு இருக்கா.



Comments