பெரும்பான்மையான தமிழர்களின் தவறான தமிழ் உச்சரிப்பு.
ரொம்ப நாட்களாகவே என் மனதுக்குள் ஒரு வருத்தம் . தமிழை தமிழர்கள் சரியாக பேசுவதில்லை என்று. கவனித்து பார்த்தால் பாண்டிய நாட்டிலும் கொங்கு நாட்டிலிலும் உள்ளவர்கள் 'ழ' வெ சரியாக உச்சரிப்பதில்லை. தமிழில் மட்டும் தான் ' ழ'
உள்ளது. மலையாளம் 'ழ' வை கடன் வாங்கி உள்ளது. வேடிக்கை என்னவென்றல் எல்லா மலையாளியும் 'ழ' வை அழகாக சொல்லுவார்கள். சென்னையில் இருந்து திருச்சி வரை கிட்ட்தட்ட எல்லா மக்களும் 'ழ' வெ நன்றாக உச்சரிப்பார்கள்.
மதுரையில் இருந்து அது 'ள' ஆகி விடும். கேட்கவே ரொம்ப கேவலமாக உள்ளது.
இதை போல பெரும்பான்மையான தமிழர்களுக்கு 'ன', ண’ இவை இரெண்டும் 'ண’ தான் இவர்களுக்கு. 'ல ' என்ற எழுத்து 'ள' ஆகி விட்டது. இது தமிழ் நாட்டில் பலருக்கும் பிரச்சனை உள்ளது. தமிழ் நாட்டில் பலரும் பல எழுத்துக்களை ஒரே போல பேசுகிறார்கள்.

பெரும்பான்மையான தமிழர்களுக்கு தமிழை மதிக்கவும் தெரியாது. பிழையின்றி பேசவும் தெரியாது. தாய் மொழி பற்று இல்லாதவர்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளார்கள்.
ழ,ள,ல,ந,ண,ங,ஞ இவற்றை பெரும்பான்மையான தமிழர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள். இதைச்சொல்ல போனால் "நான் அப்படி தான் பேசுவேன். நீ யார் சொல்வது" என்று கேட்கும் அறிவிலிகள் நிறைந்த நாடு நம் நாடு.
எழுத்துக்கள் மாறினால் பொருள் மாறும். தவிர ஒரு மொழி இப்படி தான் பேசப்பட வேண்டும் என்ற இலக்கண விதி உண்டு. பல தமிழ் வாத்தியார்கள், பேராசிரியர்கள் கூட தமிழை தவறாக தான் உச்சரிக்கிறார்கள் .

விழி =
கண் விளி = அழை
அழி = அழித்தல் (destroy) அழி = கொடு
கழி
=கம்பு களி =
மகிழ்ச்சி
வழி = way வளி = காற்று
குழி = pit குளி = குளித்தல்
இழி = இழிவான இளி =
அசட்டுத்தனமாக சிரிப்பது
ஒழி =ஒழிந்து
போ ஒளி = ஒளிந்து கொள்ளுதல், வெளிச்சம்
கிழி = பை கிளி = பறவை
இப்படி எழுத்து
மாறும்போது பொருள் மாறி அர்த்தம் அனர்த்தமாகி விடுகிறது.
இதற்கு காரணம் 1. பெரும்பான்பையான
தமிழர்க்கு தமிழ் உச்சாரணம் தெரியாது. 2. தமிழ் மேல்
பற்று இல்லை. 3. சுமார் 800
வருடங்களுக்கு முன் களப்பிரர் என்ற திருட்டு கூட்டம்
பாண்டிய நாட்டில் படை எடுத்து இங்குள்ளவரை அடிமைப்படுத்தி தமிழ் மொழியை தங்கள் மொழியால் அடக்கி ஆண்டனர்.
அதன் பின் விஜய நகர சாம்ராஜியத்தின் பிரதிநிதிகள் அங்கு வந்து கோலோச்சினார்கள். இப்போது தெலுங்கு பேசும் மக்கள்
மிகுந்த பூமி தென் பாண்டி நாடு. இதன் பின் திப்பு சுல்தான் தன் படைகளுடன் வந்து ஆக்கிரமித்தான். பின்
ஏராளம் குஜராத்திகள் சௌரஷ்ரா என்ற மாகாணத்தில் இருந்து இங்கு வந்தனர். இவர்கள்
மதுரை, காஞ்சீபுரம் இவ்விடங்களில் குடியேறினர். மஹாராஷ்டிராவில் இருந்து
சிவாஜியின் படை தளபதிகளில் ஒருவர், சரபோஜி என்று பெயர், வந்து தஞ்சாவூரை பிடித்து
ஆட்சி நடத்தினார். இப்போதும் ஏராளம் மரட்டியர்கள் தஞ்சாவூரில் இருக்கிறார்கள்.
கன்னடம் பேசுபவர்களும் விஜய நகர ஆட்சியில் இருந்தனர். இப்படி தமிழ் நாட்டில் பல பல
மொழி பேசுபவர்கள் வந்து தங்கி தமிழ் பற்றை அழித்து விட்டனர். இப்படித்தான் 3
தமிழ் சங்கங்களை தோற்றுவித்த மதுரை தன் மொழியை இழந்து
இப்போது 'மகா கேவலமாக தமிழ் பேசும்' பூமி ஆகி விட்டது. அதை தமிழ் படங்கள் இன்னும்
கேவலப்படுத்தி 'தமிழ் slang'
என்று பெருமை பேசுகின்றனர். உலகில்
எல்லோரும் அம்மா என்பதை அம்மா, மா
என்றே சொல்லும்போது இந்த மக்கள் மட்டும் "ஆத்தா' என்கின்றனர். வழி என்பதை கேரளாவில் வந்து 'வளி' என்று சொல்ல மலயாளிகள் சிரிக்கின்றனர். வளி என்றால் குசு என்று மலயாளத்திலும், காற்று என்று சுத்த தமிழிலும் சொல்வார்கள்.
தமிழ் அழகான மொழி. பழமையான மொழி. அதை நாம் போற்றி பாது காக்க வேண்டும். இப்போழுது எல்லோரும் ஆங்கிலம் (இங்கிலீஷ்) படிப்பதால் தமிழ் படிக்க விருப்பம் இல்லாது போய் விட்டது. என் பெண்கள் கேந்திரீய வித்யாலயா வில் படித்ததால் வீட்டில் வைத்து தமிழ் சொல்லி கொடுத்தோம். நாயன் மார்களும் ஆழ்வார்களும் சேர்ந்து தமிழை வளர்த்து வந்தார்கள். ஆனால் இப்போதைய வாத்தியர்கள் பலர்க்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. ஜெயா டிவி யில் வரும் ஒரு தமிழ் புரஃபஸர் இவருக்கு 'ழ'
எப்போதுமே ‘ள’ தான்.வாளைப்பளம்,
கிளவன், குளந்தை, மளை, பொளிந்தது,
வளங்கியது' என்று பேசுவார்.ஒரு தமிழ் புரொஃபெசர் இப்படி
தமிழ் கொஞ்சம் கூட வெட்க்கப்படாமல் தமிழை தவறாக பேசினால்
அவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி நல்ல தமிழ் பேசுவார்கள். இவர் பெரிய பட்டி மன்ற
பேச்சாளர், சினிமாவிலும்
நடித்துள்ளார். கமல ஹாசனின் நண்பராம். கமல ஹாசன் தமிழில் இவரிடம் தான் சந்தேகம் (?)
கேட்பாராம். தலையை ஆட்டி ஆட்டி பேசும் இந்த மதுரைக்காரர் திந்த வேண்டும். யார் முயன்றாலும் நன்றாக உச்சரிக்க பழகலாம். நாக்கை நன்றாக வழிக்க வேண்டும். அப்போது தான் சொற்கள் திருத்தமாக வரும்.
இவர் மட்டுமில்லை பல தமிழ் ஆசிரியர்கள், புரஃபசர்கள் இப்படித்தான் தமிழை கொலை பண்ணுகிற்றர்கள். மூன்று சங்கங்களை வளர்த்த மதுரையில் கூட கிட்ட தட்ட எல்லோருமே 'ழ' வை 'ள' என்று தான் சொல்லுகிறார்கள். நான் கூட மதுரையின் பக்கமுள்ள திருபரங்குன்றத்தில் தான் பிறந்தேன். ஆனால் படித்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் (கேரளா) தான்.

தமிழில் எழுத்துக்கள் மிக
குறைவு. ஒரு க, த, ட, ப, ச என்று இருக்கும். மற்ற மொழிகளில் அது நான்கு, நான்கு க, ட,ப,ச,த
என்று இருக்கும். க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ என்று பார்க்கும்போது இந்த மொழிகளில் எழுத்துக்களின் எண்ணிக்கை எங்கோ போய் விடும்.
நான் சின்ன வயதில்,
படிக்கும் போது தமிழின் பெருமையை பேசும் போது
தமிழில் 216 (ஞாபகம் இல்லை) எழுத்து என்று
சொல்ல ஒரு மலையாளி அப்போது என்னை திருத்தினார். அப்படி பார்த்தால் மலயாளத்தில் எவ்வளவு
எழுத்துக்கள் என காட்டினார்.
அப்படி அவ்வளவு எழுத்துக்கள் இருந்தாலும் மலயாளிகள் அழகாக அந்த எழுத்துக்களை உச்சாரணம் செய்கிறார்கள்.அவர்களுக்கு மொழி பற்று அதிகம். அதே போல் தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், ஹிந்திகாரர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மொழியை, தாய் மொழியை, தான் பேசுகிறார்கள். இங்குள்ள தமிழர்கள் போல் முக்கால்வாசி ஆங்கிலமும் கால் வாசி தமிழும் தான் பேசுகிறார்கள். நல்ல தமிழ் பேசுவதில்லை.

எல்லோரும் தமிழன் அல்ல என்று
திட்டும் 'பிராமணர்கள்' நல்ல தமிழ் பேசுகிறார்கள். சரியான உச்சரிப்புடன்
பேசுகிறார்கள். அவர்கள் தமிழ், நன்கு
பார்த்தால் நல்ல தமிழ். ஆம் ( ஆத்துக்கு) என்றால் அகம், அகத்துக்கு என்று பொருள்.அம்பி, அங்கச்சி என்பது தம்பி, தங்கச்சி. அவா, இவா= அவர்கள், இவர்கள்
சுருக்கம். மாட்டுப்பெண்=
மறு வீட்டு பெண், கோந்தை =
குழந்தை சுருக்கம். இப்படி போகிறது)
விஜயகாந்த்,
வடிவேலு , சரத் குமார், சிவகுமார்,
சூர்யா, கார்த்திக் (சிவகுமார் பையன்கள்) , சத்யராஜ்
, ரஜனி காந்த என்று பல சினிமா நடிகர்கள் எல்லோருமே 'ழ' சொல்லாமல் 'ள' சொல்கிறார்கள். பழைய காலத்தில் தெலுங்கு நடிகர்கள் தமிழில் அழகாக தமிழ் பேசி நடித்தார்கள்.நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ்,
N.T.ராம ராவ், சாவித்திரி,அஞ்சலி தேவி, கண்ணாம்பா,
SBB, ப.சுசீலா, ஜானகி எல்லோரும் தமிழ் கற்று கொண்டு அழகாக பாடினார்கள். குஷ்பு நன்றாக தமிழ் பேசி நடிக்கிறார். குஷ்புவின் கணவன் சுந்தர். C, பளம், குளந்தை
என்று ‘அளகு’
தமிழ் பேசுகிறார். ஆனால் பலர் தங்களை தமிழன்,
பச்சை தமிழன், கொங்கு தமிழன், என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழை கேவலமாக பேசுவதை பார்த்தால் அசிங்கமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது.
இந்த மாதிரி மோசமான தமிழ்
சினிமாக்களில் பேசுவது ரஜனிகாந்த் தமிழில் நடிக்க ஆரம்பித்த பின் தான். இவர் என்ன பேசுகிறார்
என்று பலருக்கும் தெரியாது. அதுவே ஒரு ஃபாஷன் என்றாகிவிட்டதால் எல்லா நடிகர்,
நடிகைகள் தமிழை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ
அப்படி பேசுகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை. மக்களை சிரிக்க வைக்க வேண்டு
என்பதற்காகவே சிலர் இப்படி பேசுகிறார்கள்.
'ழ' உச்சரிக்கும் போது நாக்கு வாயின் மேல் பக்கத்தை தொடவேண்டும் கீழே வரக்கூடாது 'ள' போல. என்னிடம் இஞ்சினியராக இருந்த ஒரு கோயம்பத்தூர் பெண் 'பளம்' என்று சொன்னதை கேலி செய்ததால் அன்று மதியமே அவள் திருத்திக்கொண்டு 'அழகாக 'ழ' என்று சொல்லிவிட்டாள். . இதே போலத்தான் 'ல' வை எல்லோரும் 'ள' என்று உச்சரிக்கிறார்கள். புலி=புளி, கால்=காள். இது பற்றி கவுண்டமணி-செந்தில் ஜோக் கூட உள்ளது.

டிவி கள் அவர்கள் பங்கிற்கு தமிழை கொலை செய்கிறார்கள். தெலுங்கு ,மற்ற பிற மொழி பெண்களும் ஆண்களும் இதற்கு ‘நல்ல பங்கு’ ஆற்றி தமிழை கொல்கிறார்கள் இதில் மலையாள ஆட்கள் இந்த கொலையை செய்வதில்லை
ஆனால் அவர்களை இந்த 'தமிளர்கள்'
சொல்லிகொடுத்து அவர்களையும் கேவலமாக்
தமிழ் பேச வைத்து விடுகிறார்கள்.
இதில் பிரச்சனை என்ன வென்றால்
இவர்கள் பலருக்கும் தாங்கள் தவறாக பேசுகிறோம் என்று தெரியாது, தெரிந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை. ஒரு முறை என்னுடன்
வேலை (DRDL,Hydrabad) செய்த
கோவிந்தசாமி என்பவர் 'ழ' வை 'ள' என்று சொல்வதை சுட்டி காட்டியபோது அவர்
என்னை குற்றம் சொல்லி “நீ தான் தவறாக பேசுகிறாய் “ என்றார். இத்தனைக்கும் M.Tech படித்த 'தமிளர்' அவர்.
இதில்
வேறொரு பிரச்சனை என்னவென்றால் வேடிக்கையாக பேசுகிறோம் என்று.கொச்சையாக மதுரை ‘ஸ்லாங்’ (Slang), கொங்கு ‘ஸ்லாங்’, நெல்லை ‘ஸ்லாங்’ என்று தமிழை இன்னமும் கெடுக்கிறார்கள்.
எனக்கு
தெரிந்து ஈழ தமிழர்கள், வெளி மானிலங்களில் வசிக்கும் தமிழர்கள் என்று இவர்கள் தான்
தமிழை விரும்பி படிக்கிறார்கள்.ஆனால் பல ஈழ தமிழர்கள் 'ழ' வை 'ள' என்றே சொல்கிறார்கள்.
என்ன செய்வது ? இங்கிலீஷ் யில் பேசினால் தான் மரியாதை என்று நினைத்து கொள்கிறார்கள் , பாவம் தமிழ். தமிழர்களுக்கு தமிழ் மேல் பற்று இல்லை. கடவுள் தான் தமிழை காப்பாற்ற வேண்டும்.
யாரிடம் போய் சொல்வது?
Comments
Post a Comment