சோழர்கள் புகழ்




நம் தமிழ் நட்டின், ஏன் இந்திய சரித்திரத்தில்  மிக மிக உன்னத நிலையை அடைந்தவர்கள.சுமார் 300 வருடங்கள் நிலையாக ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். சோழர்கள் முதல், இடை, கடை சங்க காலங்களிலும் இருந்திருக்கிறார்கள் என தெரிகிறது.ஆனால் முதல், இடை சங்க சோழர்களை பற்றி சங்க பாடல்களை தவிர வேறு எங்கும் அவர்களை பற்றிய செய்திகள் இல்லை. கரிகால சோழன் கல்லனை கட்டியதாக கூறப்படுகிறது. இவரைப்பற்றிய ஆதாரமான சான்றுகள் கூட கிட்டவில்லை. தமிழ் நாட்டின் பல சரித்திர சான்றுகள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் இலக்கிய பாடகள்கள் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது. இதில் இலக்கிய பாடல்கல் அதிகமாக நம்ப தகுந்தவைகள் அல்ல. அது தற்புகழ்ச்சிக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம்.

 சோழர்கள் தென் இந்தியாவின் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்து ஆண்டு வந்தனர். சோழர்கள் சாளுக்கியர்களோடும் திருமண உறவு வைத்திருந்தனர். தெலுங்கு சோழர்கள் என்ற ஒரு பிரிவும் அவர்களில் உள்லது. இவர்கள் நெல்லூர் பக்கம் ஆண்டதாக தெரிகிறது.

கடை சங்க சோழர்களில் முதன்மையானவர், சரித்திரத்திற்கு தெரிந்தவர் விஜயாலய சோழன். சிற்றரசரான இவர் தஞ்சையை தலை நகராக கொண்டு ஆண்டுவந்தார். இவர் திருபயம்புரம் போரில் 96 விழும்புண்கள் பட்டதாக செய்திகள் கூறுகின்றன. விஜயாலய சோழனுக்கு முற்பட்ட காலத்தை பிரபல சரித்திர பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் ‘வரலாற்றின் இருண்ட காலம் என்கிறார். விஜயாலாயனுக்கு முன்னால் 44 சோழர்கள் ஆண்டதாக  திருவாலங்காட்டு செப்பேடுகளும், 52 அரசர்கள் ஆண்டதாக கன்னியகுமாரி செப்பேடுகளும் சொல்கின்றன. இதைத்தவிர  வரலாற்று இலக்கியங்களான கலிங்கத்துபரணி, மூவருலா இவையும் சோழர்களின் பழம் பெரும் தொன்மையை பறை சாற்றுகின்றன.
விஜயாலயனின் பின்னர் வந்த சோழ மன்னர்களை பற்றிய செய்திகள் கொஞ்சம் ஒழுங்காக கிடைத்திருக்கின்றன.

குடமூக்கு (இப்போதய கும்பகோணம்) போரில் சிற்றரசாக இருந்த விஜயாலயன் பல்லவன் நிருதுபங்க வர்ம பல்லவனுடன் சேர்ந்து போரிட்டான். பிறகு திருப்புறம்பயம் போரில் விஜயாலயனின் மகன் ஆதித்த சோழன் பல்லவருடன் சேர்ந்து பாண்டியன் வரகுண பாண்டியனை எதிர்த்து சண்டை செய்தான்.அதில் அற்புதமாக வெற்றி சேர்த்த்தால் பல்லவ மன்ன்ன் அபராஜிதன் தன் வசம் இருந்த சோழ பிரதேசங்களை ஆதித்தனுக்கே கொடுத்து விட்டான். இதனால் சோழ நாடு  முழுமை பெற்று பேரரசாக மாறியது. ஏதோ சில காரணங்களால் ஆதித்த சோழன் பல்லவன் அபராஜிதனை கி.பி 991 வாக்கில் போரில் வென்று பல்லவ நாட்டையும் தன் சோழனாட்டினோடு இணைத்து மிக பெரிய சோழ நாட்டை உருவாக்கினான். இந்த சோழ நாடு கிட்ட தட்ட 400 ஆண்டு காலம் புகழ் விட்டு பிரகாசித்தது.

யானை மேல் இருந்த அபராஜித்தனை குதிரை மேல் இருந்த ஆதித்தன் யானை மேல் பாய்ந்து ஏறிக் கொன்றான் என கன்யாகுமாரி கல்வெட்டுகள் சொல்கின்றன. நம்பியாண்டார் நம்பி தன்  திருதொண்டர் திருவந்தாதியில் ‘சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பலமுக்கு கொங்கிற்கனகம் அணிந்த ஆதித்தன் என புகழ்கிறார். 

கொங்கு நாட்டில் இருந்து பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பலத்துக்கு பொன் கூரை வெய்தான் என்ற செய்தி இதன் மூலம் தெரிகிறது. பல்லவ இளவரசி காடு வெட்டிகள் திரிபுவனதேவி வயிரியக்கன் என்பவளை ஆதித்த சோழன் மணந்த்திருந்தான். இது தான் சோழர்களிம் புகழ் பரவ ஆரம்பித்த காலம்.

சோழர்கள் மிக பெரிய கடல் படை வைத்திருந்தார்கள். அவர்களிடம் 100000 யானைகள் உள்ள காலாட்படை இருந்ததாம். கங்கைக்கு நீர் கொண்டுவரப்போனபோது கங்கை பிரவாகமாக ஓடக்கண்டு யானைகளை வரிசையாக நிறுத்தி அவற்றின் மேல் படை நகர்ந்து கங்கையை கடந்ததாம். அவர்கள் (ராஜ ராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன்) சென்றவிடம் எல்லாம் வெற்றி தான். ஈழ மன்னர்களை பல இடங்களில் தோற்கடித்து பலமுறை சிறை செய்து வைத்துள்ளனர். பல முறை ஈழ மன்ன்ன் மகிந்தன் தோற்றோடி இலங்கை ரோஹண காட்டு குகைகளில் தஞ்சம் புகுந்திருந்தான்.ஒரு முறை ராஜேந்திர சோழன் அவணை தமிழ் நாட்டிற்கு கொண்டு வைத்து சிறை வைத்திருந்தான்.. தமிழக சரித்திரத்தில் இப்படி புகழ் வாய்ந்த வம்சம் முன்னும் பின்னும் வந்ததில்லை. அவர்கள் கிட்டதட்ட முழு தென் இந்தியாவையும் தங்கள் வசம் வைத்திருந்தனர். இப்போதய இந்தோனேசிய வரை தங்கள் கடல் படையை அனுப்பினர். இன்றும் அங்கு இருக்கும் தமிழ் கோவில்கள், பாலி இந்துக்கள் இதற்கு சாட்சி. 

சோழர்கள் அற்புதமான கோவிlல்களை கட்டினர். தஞ்சை பேருடையார் கோவில் விமானம் 40 டன் எடை உள்ளது. அதனை அத்தனை உயரத்தில் எப்படி கொண்டு போனார்கள் என்ற வியப்பு இப்போதும் உள்ளது. பல மைல் தூரம் சாரம் கட்டி யானைகளின் உதவியுடன், உருளை தடிகளால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி உள்ளனர்.

ராஜேந்திர சோழன் தனது கங்கை வெற்றிக்கு அடையாளமாக நிறுவப்பட்டது ‘கங்கை கொண்ட சோழபுரம். அவனுடைய வட நாட்டு வெற்றிக்கு பின் ஏற்பட்டதால் இந்த பெயர்.இந்த நகரம் சுமார் 4 மைல்கள் சதுர அமைப்புடையதாய் இருந்தது.  தந்தை ராஜராஜன் தோற்றுவித்த பேருடையார் கோவில் போல அவன் மகனான ராஜேந்திரன் தோற்றுவித்த கோவில் இங்கு உள்ளது. இது தஞ்சை கோவிலை விட சற்று சிறியது  ஆனால் கட்டட கலையில் மிக சிறந்தது. தாராசுரம் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது.அற்புதமான சிற்பங்களை உள்ளடக்கிய கோவில் இது.

தகுவாபா, பகான் (பர்மா), லபோடவோ போன்ற் நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகளில் இருந்து தமிழ் வணிகர்கள் நானதேசி, திசை ஆயிரத்து அஞ்சூற்றுவர், மணி கிராமம் ஆகிய இடங்களில் தங்கி வணிகம் செய்ததாக தெரிகிறது. ராஜராஜன் ஸ்ரீவிஜய சைலெந்திரன் என்ற கடார அரசரின் நண்பிற்கிணங்க நாகபட்டினத்தில் ஒரு புத்த விகாரம் நிறுவினான். அவன் மகனான ராஜேந்திரன் கிழக்கு நாடுகளான மலேயா, சுமத்திரா ஆகிய இடங்களில் உள்ல மாப்பாலம், தலைத்தகோலம் (தகுவாபா), மாயிருடிங்கம், இலங்ககோசம், கடாரம் (கெட்டா), பண்னை மலையூர், ஸ்ரீவிஜயம் கப்பல் படை கொண்டு சென்று வெற்ரி பெற்று வாணிபத்தை பெருக்கிணான். ஸ்ரீவிஜயம், கம்போச நாட்டு அரசர்களும் ராஹஜேந்திரனின் நட்பை நாடினர்.

 டிஸ்கவரி சானலில் ராஜ ராஜ சோழனை பற்றி ஒரு எபிசோட் வந்தது. தமிழ் நாட்டு பதிப்பான 'சோழ பேருடையார் காலம்' புத்தகம், 'பொன்னியின் செல்வன்' இவற்றை படித்தால் இன்னும் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளலாம். பொன்னியின் செல்வன் கற்பனை கலந்த புத்தகம் ஆனால் சரித்திர சம்பவங்கள் நிறய இதில் உண்டு.

கட்டிட கலையில், இலக்கியங்களில் சோழர்கள் சிறந்து விளங்கினர். இப்போதும் அவர்கள் கட்டிய கோவில்கள் சாட்சிகளாக நிற்கின்றன. சோழர்கள் பல படை எடுப்பின் காரணமாக பல மொழி பேசுபவர்களை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இது மட்டுமா? தமிழர்களின் கட்டிட கலை மிக தொன்மை வாய்ந்தது. பல்லவர்கள், சோழர்கள் பல வியக்கதக்க சிற்ப அதிசயங்களை செய்தனர்.மிக பிரம்மாண்டமான சிற்பங்கள் உடைய கோவில்களை கட்டினர். இன்று பல அழியும் நிலையில் உள்ளன.

Comments