கொல்லங்கோடு - ஒரு அழகிய சிறு கிராமம்
கொல்லங்கோடு , கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு அழகிய கிராமம். பாலக்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் இருக்கிறது. அழகான குளங்கள், ஒரு சிற்றாரு, ஒரு அழகிய பழைய விஷ்ணு கோவில், வயல்கள், கொல்லலொங்கோடு அரச மாளிகை என்று இயற்கை கொஞ்சும் கிராமம். இதன் வழி செல்லும் ரயில் தடம் பழனி, திண்டுக்கல் என்று செல்லும்.
இந்த கிராமத்தில் இருந்து பார்த்தால் மூன்று நீர்வீழ்ச்சிகளை காணலாம். இங்கிருந்து 'நெல்லியம்பதி' என்ற மலை வாச ஸ்தலம் மிக அருகில் உள்ளது.
மேல் காண்பது கொல்லொங்கோடு அரண்மனை. மிக பழையது. இங்கு தான் 'அமைதிப்படை' என்ற சினிமா படம் , படமாக்கப்பட்டது. அழகிய குளங்களுடன் இப்போதும் உள்ளது.சினிமா நடிகர் ரகுவரன் இந்த ஊர்க்காரர் தான்.
இங்கிருந்து பொள்ளாச்சி மிக அருகில் உள்ளது.
இங்கிருக்கும் தமிழ் பிராமணர்களுக்கு என்று தனி அக்ரஹாரம் உள்ளது. அவர்களில் பலர் கும்பகோணத்தில் இருந்து இங்கு வந்து குடியேரினவர்கள்.
Comments
Post a Comment