தமிழர்களின் மூடத்தனமான கடவுள் நம்பிக்கை, மற்ற பழக்கங்கள்



நமக்கு கடவுள் நம்பிக்கை என்பது சிறு வயதில் இருந்தே ஊட்டி விடப்படுகிறது. "சாமி கும்பிடு, தப்பு செய்தால் சாமி கண்ணைக்குத்திவிடுவார், பரிகாரம் செய்யணம், வேண்டுதல்" இப்படி நம்புவர்கள் இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும். தப்பு செய்தால் கடவுள் தண்டிப்பார் இல்லாவிடில் அதற்கு பரிகாரம் செய்து விடு என்பார்கள். பலரும் கடவுளை கும்பிடுவது பயத்தால் தான். கும்பிடாவிட்டால் தண்டித்துவிடுவார் என்ற பயம். அதே போல் கடவுளுக்கு நேர்ந்து விடுதல். எனக்கு இப்படி செய்தால் அல்லது நடந்தால் நான் பால் அபிஷேகம் செய்வேன்,மொட்டை அடிப்பேன், உண்டியலில் பணம் போடுவேன் என்று லஞ்சம் இங்கேயே ஆரம்பித்துவிடுகிறது.

எல்லா தப்பும் பண்ணிவிட்டு கோயிலில் போய் உண்டியலில் பணம் போடுவான், அபிஷேகம் செய்வான், உருளுவான், மொட்டை அடிப்பான். காசிக்கு போய் கங்கையில் குளித்தால் எல்லா பாவமும் போய்விடும், என்று காசிக்கு போவான். (இப்படி குளித்து, குளித்து கங்கை அழுக்காக தான் போய் விட்டது. பல ஊரிலுள்ள கழிவு தண்ணீர் எல்லாம் அங்கு தான் சங்கமிக்கிறது.) இப்படி பழைய பாவங்கள் கரைத்ததும் திரும்பி புது பாவங்கள் செய்யலாம். எல்லா பெரிய கூட்டம் கூடும் கோவில்களை சுற்றியும் என்ன என்ன பிசினெஸ் நடக்கிறது தெரியுமா? கடைகள், ஓட்டல்கள் கட்டி அனியாயமான விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன.சில சமயங்களில் விபச்சாரமும் இதில் ஒன்று. கடவுளை பார்த்து விட்டு 'தேவியையும்' பார்த்து விட்டு தான் சிலர் போகிறார்கள்.(ஒரு காலத்தில் திருப்பதியில் விபச்சாரம கொடி கட்டி பறந்தது. பின்னர் அது  குறைந்தது என கேள்வி.) 

கோவில்களையும் சுற்றி இருக்கும் கடைகளில் எல்லா பொருட்களும் அதிக விலைகளில் விற்கபடுகின்றன அதையும் தேவை இல்லாமல் பக்தர்கள் தலையில் கட்டி விடுகிறர்கள். வேறு வழியின்றி மக்களும் அதை வாங்குகிறார்கள். ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு போயிருந்தேன். வலுகட்டாயமாக ஒரு தாமரை பூவை என் கையில் கொடுத்தி இது இல்லாவிடில் 'நாக தோஷம் பூஜை' செய்யமுடியாது என்று கொடுத்து விட்டனர். கடைசியில் அதை யாரும் கேட்கவில்லை. (ஒரு காலத்தில் எனக்கும் இந்த மாதிரி நம்பிக்கை இருந்தது.பின்னர் தான் நான் சிந்தித்து இதை எல்லாம் மாற்றிக்கொண்டேன்)'

தமிழ் நாட்டில் தான் எல்லாவித முட்டாள்தனமான் செயல்களும் நடக்கின்றன. கடவுளுக்காக எச்சில் இலையில் உருளுதல், மண் சோறு சாப்பிடுதல், சாடையடி வாங்குதல், குழந்தைகளை குழி தோண்டி புதைத்தல், குழந்தைகளை உயரத்தில் இருந்து தூக்கி எறிதல், தலையில் தேங்காய் உடைத்தல்,  இலைகளை கட்டிக்கொண்டு சாமி கும்பிடுதல், குழந்தைகள் பெறுவதற்காக சாமியாரின் வாயில் இருந்து எச்சில் வாங்குவது, தண்ணி அடிக்கும் சாமியார், உதை கொடுக்கும் சாமியார், சாராயம் குடிக்கும் சாமியார், விரதத்துக்காக கோவில் வாசலில் பிச்சை எடுத்தல் இப்படி எண்ணில் அடங்காத விஷயங்கள் இங்கு தான் நடக்கும்.

என்ன சொன்னாலும் நம்பும் மக்கள் இங்குள்ளனர்.தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள். இறந்தால் மாரில் அடித்துக்கொண்டு ரோட்டில் எல்லாம் உருளும் பெண்கள் இருக்கின்றனர். இங்கு தான் செத்த பிணத்திற்கு முன் தண்ணி அடித்து விட்டு ரோடில் டிராஃபிக் போகாமல் பிணத்தில் இருக்கும் பூவை போறவன், வர்ரவன்  மேல் எல்லாம் எறிந்து நோய்களை உண்டு பண்ணுவார்கள். சக்தி வாய்ந்த கடவுள் இங்கு உள்ளனர். அது எப்படி ஒரு கடவுள் சக்தி வாய்ந்தவர், இன்னொருவர் சக்தி இல்லாதவர் என்று யாரும் யோசிப்பது இல்லை

சக்தி வாய்ந்த கடவுளை சபரிமலை, குருவாயூர், திருப்பதி இன்னும் பல கோவில்களை தேடி போகின்றனர். ஹிந்து தர்மத்தின் படி "கடவுள் உன்னுள் இருக்கிறார், எங்கும் இருக்கிறார். நல்லது செய், தர்மம் செய், மற்றவர்களுக்கு உதவி செய், துன்பம் செய்யாதே" என்று தான் சொல்கிறது. இதையே தான் கிட்டதட்ட எல்லா மதங்களும் சொல்கின்றன. அப்படியும் ஆயிரக்கணக்கான கடவுள்கள், மனித கடவுள்கள் இங்குள்ளனர். ஏராளமான சாமியார்களை நம்பி பணத்தையும் சில சமயங்களில் கற்பை இழந்தவர்கள் கூட உண்டு.

அதைப்போல் தமிழ் நாட்டில் தான் பணத்தை எல்லா வித ஏமாற்று திட்டங்களிலும் இட்டு ஏமாறும் மக்கள் உள்ளனர். சிட் ஃபண்ட், "இமு"(Emu) கோழி வளர்த்தல், சீட்டு கட்டுதல், பணம் இரட்டிப்பு, மரம் வளர்த்தல், ஃபினான்ஸ் கம்பனி முதலீடு, நகை கடன், வேலை கிடைக்க லஞ்சம் கொடுத்து ஏமாந்து நிற்பது,  இன்னும் பல பல திட்டங்களில் பணம் முதலீடு செய்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்பவர்கள் இங்கு தான் அதிகம். இவர்கள் ஏமாந்து பணம் கட்டினால் போலீஸ் என்ன செய்யும்?

ஜாதிகட்சிகள் அதிகமாக உள்ளதும் இங்கு தான். கட்சி தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் இவர்களை கடவுள் போல் கொண்டாடுவதும் இங்கு தான்.

 யார் இவர்களை திருத்த முடியும்?

பெரியார் இவர்களை சிந்திக்க சொன்னார். யார் சிந்திக்கிறார்கள்?  நான் பெரியார் கட்சி இல்லை.  ஆனால் நல்லது யார் சொன்னாலும் எடுத்துகொளளவேண்டும். MGR ஒரு பாட்டில் மக்களை சிந்திக்க சொன்னார். ஆனால் யார் சிந்திக்கிறார்கள்?

Comments