கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை



கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை ஒரு குழந்தை பாடல்கள் எழுதிய கவிஞ்சர். அதிகம் மக்கலௌக்கு அவரைப்பற்றி தெரியாது. காரணம் அவர் கன்யாகுமாரிக்காரர். தவிர அவர் காலத்தில் கன்யாகுமாரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. அவர் ஒரு தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தவர். பல பாடல்களை எழுதியுள்ளார். அவர் குழந்தைகள் பாடல்கள் பிரபலம். நான் பள்ளியில் படிக்கும்போது அவர் பாடகள் பலவற்றை பாடமாக படித்திருக்கிரறேன். அவர் கன்யாகுமாரிக்காரர். அவன் மனைவி பெயர் மாடத்தி அம்மையார்.

குழந்தைகளுக்காக அவர் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பழைய திருவிதாங்கூரை சேர்ந்தவர் ஆகையால் பல தமிழர்களுக்கு அவரை பற்றி அதிகம் தெரியாது.

அவர்  பாடல்கள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்கும். பின் வரும் பாடல்கள் நான் பள்ளியில் படிக்கும் போது படித்தவை.

அவர் இன்னொரு தமிழ் புலவரான பாரதியைப்பற்றி சிலாகித்து பாடியுள்ளார்.

“பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா
அவன் பாட்டை கேட்டு கிறுகிறுத்து போனேடா
என்று பாடியுள்ளார்.

அவருடைய சில பாடல்களில் நினைவுககு வந்தவை இவை.முழுமஒயாக ஞாபகம் இல்லை.

சூரியன் பாடல்.

அருணன் உதித்தனன்
அம்புஜம் விண்டது
அளிகளும் மொய்த்தன பாராய்
அம்மா  நீ எழுந்தோடி வாராய்.

பாட்டி பாடல்

பாட்டியில் வீட்டின் பழம் பானை
பானையின் ஒருபுறம் ஓட்டையடா
ஓட்டையின் உட்புறம் சுண்டலியும்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா.

புலி     
                         
பந்தம் எரியுதடி கண்களை பார்க்க நடுங்குதடி
குந்தவாள் ஈட்டியெல்லாம் கூடவே கொண்டு திரியுதடி
வாயை பிளக்குதடி கையுறை வாளை உறுவுதடி
பேயை படைத்தபின் பிரம்மனும் புலியை படைத்தாண்டி.

அப்பம் தருவேன் அவல் தருவேன்
அவல் இல்லாமல் பொரி தருவேன்
இப்பொது என்னோடு இசந்தாட , என்னோடு
இணந்து வருவாய் வெண்ணிலவே.

ஆகாய விமானம்

கப்பல் என்றுமே மெள்ள கடலில் மிதப்பதாம்
தப்பி தப்பியே ரயிலும் தரையில் ஊர்வதாம்.
வானமீது எழுவேன் அங்கு வட்டம் சுற்றிடுவேன்
கான மயில் எல்லாம் நானோர் கணக்கில் தாண்டிடுவேன்
இடைவிடாது தபால் உலகில் எங்கும் கொண்டு செல்வேன்
தடை இல்லாமலே மலையையும் தாண்டி சென்றிடுவேன்.
நன்மை செய்ய வந்தேன் என்னை நன்குணறாமல்
வன்மை போரினிலே என்னை மாட்டி விட்டாரய்யா.

பசு.

தோட்டத்தில் மேயுது வெள்ளைபசு
அங்கு துள்ளிகுதிக்குது கன்றுகுட்டி.
நாவால் நக்குது வெள்ளைபசு
பாலை நன்றாய்குடிக்குது கன்னுக்குட்டி
அம்மா எங்குது வெள்ளை பசு அதன்
அண்டையில் ஓடுது கண்ணுக்குட்டி.



எந்த பாட்டுமே இப்போது முழுமையாக ஞாபகமில்லை. ரொம்ப எளிமையாக பாடல் எழுதினவர் கவிமணி அவர்கள். முன்பு கன்யாகுமாரி திருவிதாங்கூரோடு இணந்து இருந்ததால் அவரைப்பற்றி பல தமிழர்களுக்கு தெரியாது. இதனால் தான் அவரின் பெருமைகள், பாடல்கள் இங்குள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. கேரள அரசு அவருக்கு பரிசளித்து கௌரவித்தது. எளிமையான பள்ளி ஆசிரியரான அவர் வாழ்ந்து மறைந்தது அந்த கன்யாகுமாரி மாவட்டத்தில் தான்.

Comments