அக்ஷ்யதிரிதி மற்றும் சில மூட நம்பிக்கைகள்
கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால்
அட்ஷய திரிதி, அவங்க அம்மா திதி
இதெல்லாம் யாருக்கும்
தெரியாது.
இந்த கேவலம் கெட்ட டிவி
சானல்கள் தங்கள் வருமானத்திற்காக யாரும் கேட்டிராத அட்ஷ்யதிரிதி, அப்பா தினம்,
அம்மா தினம், மாமனார் தினம், மாமியார் தினம், மனைவி தினம், காதலர் தினம், பிறந்த தினம், மரண தினம், என்றெல்லாம் சொல்லி இது போல் தேவையற்ற பல செய்திகளையும், எல்லா பண்டிகை நாட்களையும், அரசாங்க விடுமுறை தினங்களையும், மற்ற எல்லா தினங்களையும் கொண்டாடி வேலை இல்லாமல் வீட்டில் குந்தி
இருக்கும் சினிமாகாரங்களையும், சினிமாகாரிகளையும் கொண்டு வந்து என்ன எழவோ பேச சொல்ல அதை பொறுமையாக இருந்து ரசிக்கும் முட்டாள் மக்கள்
கூட்டம் மிக அதிகமாகி விட்டது.
பணம் பண்ணுவது மீடியாகாரங்கள், டிவி காரங்கள். மக்கள் தங்கள் நேரம் பணம் இவற்றை விரயம் பண்ணுகிறார்கள்.
எப்படியும் பணம் பண்ணவேண்டும்
என்ற எண்ணம் தலை தூக்கி விட்டது. General Knowledge என்பது யாருக்கும் கிடையாது . சினிமாக்காரன், கிரிக்கட் காரன்
பின்னால் போகிறது இந்த முட்டாள்
மக்கள் கூட்டம்.
வேடிக்கை என்ன வென்றால் திராவிடம்,
பொது அறிவு, பழமை அழிப்பு என்றெல்லாம் சொல்லும் சில 'திராவிட பெரிய தலைவர்களின்' டிவி சானல்கள்
தான் இதை ஆரம்பித்தன. அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ஏராளமாக பணம் பண்ணி
மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்.
தங்கம் வாங்கினாலும்
நஷ்டம், விற்றாலும் நஷ்டம். வாங்கும் போது செய் கூலி, சேதாரக்கூலி,அந்த கூலி,
இந்த கூலி என்று இரட்டை விலை வாங்கி விடுவான்.
அதை அந்த கடையில் கூட விற்க முடியாது. எவனுமே வாங்க மாட்டான். மாற்றித்தான்
தருவான். அடிமாட்டு விலைக்கு விக்க மார்வாடி கடைக்கு தான் போகணம்.
இதை வீட்டில் வைத்தால்
திருடு போகும், கழுத்தில் அணிந்தால் திருட்டுபயல்கள் அறுத்து விடுவான்கள்.
பல கடையில் மிகவும் மாற்று குறைந்த தங்கம் தான் விற்கிறார்கள். கடையில் பில்
கொடுக்க மாட்டான். கேட்டால் பில் போட்டால் விலை அதிகம் என்பான். ஒரு பேப்பரில்
எதையோ எழுதி தருவான். எப்படியும் அதை அவனிடம் விற்க முடியாது. எந்த கடைக்கரனும் தங்கத்தை
விலை கொடுத்து வாங்குவதில்லை.
கொஞ்சம் வருடங்களுக்கும் முன் சில காரணங்களால்
கொஞ்சம் நகை விற்க டி நகர் முழுதும் நடந்து பார்த்து கடைசியில் ஒரு சந்தில் இருந்த
ஒரு ஃபைனான்ஸ் கடையில் குறைந்த விலைக்கு விற்றேன். ஆனால் மக்கள் அப்படியும் நகை வாங்கி
குவிக்கிறார்கள்.
பல நகை கடைகளில் பரிசுகள் கொடுக்கிறார்கள், நகை வாங்கினால். இந்த பணம் எங்கே போகும்? இந்த நகை கடை முதலாளிகள் பெரிய ஹோட்டல்கள், மால்கள், ஃபாக்டரிகள்
எப்படி குறுகிய காலத்தில் கட்டுகிறார்கள்?
மக்கள் யோசிக்க வேண்டும்.எங்கள்
அப்பார்ட்மென்ட் காம்ப்லெஃஸ் பக்கம் ஒரு
புது ‘மால்’
திறந்திருக்கிறார்கள். இங்கு ஒரு கேரளா நகை கடையும் திறந்திருக்கிறார்கள். எங்கள்
அபார்ட்மென்ட் காம்ப்லெஃஸில் 200க்கும் மேல் அபார்ட்மென்ட்கள் இருக்கின்றன. பக்கத்தில் இதைப்போல் இன்னம் சில அபார்ட்மென்டுகள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து 1000 க்கு பக்கம் வரும். இந்த நகைக்கடை ஒவ்வொரு வீட்டிற்கும் Times
of India செய்தி தாளும் , ஒரு ஃபெமினா (ரூ.50)
பத்திரிகையும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறது. வீட்டில் வந்து கொடுத்தார்கள். இதன் செலவு யார் தலையில் விழும்?
நிச்சயமாக நகை வாங்குவோர் தானே கொடுக்க போகிறார்கள்? இதைப்போல் நகை கடைகள் புகழ் பெற்ற நடிக நடிகைகளை விளம்பரத்திற்காக உபயோகிக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் பணம் எங்கு போகிறது?
முதலில் நகைகடைகள் மட்டும் அட்ஷயயதிரிதி அன்று பொருள் வாங்கினால் அது இரண்டு மடங்காகும் என்று சொன்னார்கள் இப்போது மளிகை கடைக்காரன் கூட அதை பின்பற்றி விளம்பரம் கொடுக்கிறான். மக்கள் தான் யோசித்து, சிந்தித்து செயல் பட வேண்டும். எத்தனை பேஉக்கு வாங்கிய பொருள் இரெண்டாயிற்று என்று தெரியவில்லை.
Comments
Post a Comment