பழைய திருவிதாங்கூர் வாயில் காவலர்களின் தமிழ் அறிவு
கன்யாகுமாரி ஜில்லாவை திருவிதாங்கூர் மன்னர்கள் தான் ஆண்டு வந்தனர். இவர்கள் வேணாடு பரம்பரையை சேர்ந்தவர்கள். . கன்யாகுமாரி ஜில்லா ரொம்ப செழிப்பு வாய்ந்தது
மலைகளும் சிற்றாருகளும் நிரம்பி கேரளா போலவெ காட்ச்சி அளிக்கும். மக்கள் கூட மலயளம் கலந்த தமிழில் பேசுவார்கள்.
அது கேரளாபோலவே இருக்கும். மலைகள்,
நதிகள், அருவிகள், பச்சை பசேரென்று
வயல்களுடன் மிக அழகாக இருக்கும் .
அப்போதய திருவிதாங்கூர் ஸமஸ்தானத்தில் தமிழர்களும் ஒரு பங்கு பதவி வகித்து இருந்தனர். இப்போதும் திருவனந்தபுரத்தில் ஏராளம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
முன்பு திருவிதாங்கூர் ராஜாக்கள் ஆண்டபோது
கன்யாகுமாரி ஜில்லா திருவிதாங்கூர் ராஜியத்தில் உட்பட்டது. . உண்மையாக சொன்னால்
அவர்கள் தலைநகரமாக இருந்தது பத்மனாபபுரம். இப்போதய பத்மனாபபுரம் கன்யாககுமாரி , மாவட்டத்தில் தான் உள்ளது. அங்கு ஒரு பழைய கோட்டை, அரண்மனை உள்ளது.
இப்போதும் அந்த அழகிய அரண்மனை கேரள அரசின் பதுகாப்பில் இருக்கிறது.
மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவனந்தபுரத்தில் பெரிய கோட்டை கட்டி
அதனுள் இருந்த பத்மனாப ஸ்வாமி கோவிலை பெரிது பண்ணி பத்மனாபனுக்கு பெரிய
கோவிலாக கோபுரம் எழுப்பிக்கட்டி திருவனந்தபுரத்தை தலை நகராக்கி கொண்டார்.
இப்போதும் அந்த கோட்டை மிக உயரமான மதில் சுவருடன் பத்மனாப ஸ்வாமி கோவிலை சுற்றி பல
கிலோமீட்டர் தூரம் நீண்டு வியாபித்து இருப்பதை காண முடியும்
.இதை 'கோட்டைக்கு அகம்' என்றும் கூறுவர்
இங்கு தான் பத்மனாபனின் கோவில், அரசரின் அரண்மனை கோவில் குளங்கள், போலீஸ் ஸ்டேஷன் என்று முக்கியமான எல்லா வசதிகளும்
இதன் உள்ளே (அகம்) இருக்கின்றன.
அந்த காலத்தில் பழைய திருநெல்வேலி
ஜில்லாவிலிருந்து திருவிதாங்கூருக்குள் திருடர்கள் வருவதுண்டு. . .
இவர்கள் திருடி விட்டு திரும்ப தங்கள் நாட்டிற்கு போய்விடுவார்கள். இவர்களை கண்டு பிடிக்க திரிவிதாங்கூர் படையாட்கள் ஒரு வழி கண்டு பிடித்தனர்.
இவர்கள் திருடி விட்டு திரும்ப தங்கள் நாட்டிற்கு போய்விடுவார்கள். இவர்களை கண்டு பிடிக்க திரிவிதாங்கூர் படையாட்கள் ஒரு வழி கண்டு பிடித்தனர்.
அதன்படி கோட்டை காவலர்கள் சந்தேகிக்கும்படி தோன்றும் நபர்களை கீழ்கண்ட
வாக்கியத்தை சொல்ல சொல்லுவார்கள்.
'தோவாளை கோட்டையிலே உழக்கு ஆழாக்கு நெல்லுக்கு
எவ்வேழு வாழைப்பழம்'
இதை பலரும் சொல்ல முடியாமல்
"தொவாளைக் கோட்டையிலே
உளக்கு ஆளாக்கு
நெல்லுக்கு எவ்வேளு வாளைப்பளம் " என்று சொல்ல அவர்கள் , திரும்ப தங்கள் ஊருக்கு
அனுப்பபடுவார்கள்
.
இந்த சொற்தொடரில் 'ழ' , 'ல' , 'ள' திரும்பி, திரும்பி வருகிறது.
.
Comments
Post a Comment