தமிழர்களுக்கு ஹிந்தி படிப்பது கொஞ்சம் கடினம் தான்
நான் கேரளாவில் படித்ததால் ஹிந்தி
கட்டாயமாக படிக்கவேண்டும். 7ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக
படித்தோம். இந்த தமிழனுக்குத்தான்
ஹிந்தி கடினம். ஏனென்றால் தமிழில் தான் எழுத்துக்கள் மிக குறைவு. (அப்படியும் பெரும்பால தமிழ்
நாட்டு மக்கள், ழ, ள,ல,ங,ஞ,ண,ன இவற்றை தவறாக
உச்சரிக்கிறார்கள். அதுவும் 'ழ'
நிச்சயமாக 'ள' தான்).
தமிழில் க,த,ப,ட,ச எழுத்துக்கள் ஒவ்வோன்று தான் ஆனால் சமஸ்கிருதம்/ ஹிந்தியில் ஒவ்வொன்றும் நான்கு எழுத்துக்கள். நான்கு 'க', நான்கு 'ச',
நான்கு 'ட', நான்கு
'ப', நான்கு 'த'
ஆகையால் நமக்கு எதை எங்கு எழுத வேண்டும்
என்று தெரியாது. இப்போது
இவற்றை உதாரணமாக க, கா, கி, கீ,கெ,கே,கை, கொ, கோ என்று பார்த்தால்"க, த,
ப, ட, ச "என்று
எழுத்துக்களுக்கு எவ்வளவு எழுத்துக்கள் வரும்? இந்த பிரச்சனை தமிழனுக்கு தான் வரும். "ஷ, ஸ" இவையும் ஹிந்தியில் உள்ளது.
இதனால் தான் தமிழ் தனி மொழி என்றும் சமஸ்கிருதத்தில் இருந்து வரவில்லை என்றும் மக்களுக்கு புரிய வேண்டும். ஏனென்றால் நம்மை விட அவர்கள் மொழியில் எழுத்துக்கள் மிக அதிகம். அதிலிருந்து தமிழ் வந்திருந்தால் அத்தனை எழுத்துக்களும் தமிழில் இருக்குமல்லவா?
மலயாளிகளுக்கும், தெலுங்கு, கன்னடா
, ஹிந்தி மொழிக்காரனுக்கும் இந்த
பிரச்சனை கிடையாது. சமஸ்கிரதம் படித்தவர்களுக்கும் இது பிரச்சனை கிடையாது.அதில் எல்லாம் நிறைய எழுத்துக்கள் உண்டு. தமிழனாக
இருப்பவனுக்கு தான் இந்த பிரச்சனை.
இதனால் நான் எல்லா ஹிந்தி பாடங்களையும் எழுதி எழுதி
கஷ்டப்பட்டு படித்துவிடுவேன்.
கஷ்டம் தான், என்ன செய்வது?
ஆனால் இந்த Non detail என்னும் கதைகள் தான் மிக கடினம். நான் SSLC
படிக்கும் போது final
examination இல் எங்களுக்கு ஆறு கதைகள் படிக்க
வேண்டும். சாதாரணமாக இரண்டு கதைகள் கொடுத்து
ஒன்றை எழுத சொல்வார்கள். இதனால் ரொம்ப நீளமான 'அபூ கான் கி பக்ரி' ( அபூ கானின் ஆடு) என்ற கதையை விட்டு விட்டு
மற்ற ஐந்து கதைகளையும்
மனனம் செய்து காணாப்பாடம் பண்ணி பரீட்சை எழுத போனேன்.
கேள்வி பேப்பரை பார்த்தால் 'இதயம்' அடிப்பதே
நின்று விட்டது. அதில் 'அபு கான் கி பக்ரி' யை மட்டும் எழுத சொல்லி கேட்டிருந்தது.
ஏதோ தெரிஞ்ச ஹிந்தியில்
காமா சோமா என்று ஏதோ எழுதிவிட்டு வந்தேன். கடைசியில் 42 மார்க் தான் SSLC இல் கிடைத்தது. அன்று
முதல் ஹிந்தி என்றாலே அந்த வெறுப்பு. அப்போதிருந்து ஹிந்தி படங்களை காசு கொடுத்து
பார்ப்பதில்லை என்ற
சபதம் மேற்கொண்டேன். இன்று வரை நான் காசு கொடுத்து பார்த்த ஹிந்தி படங்கள் 4 தான். அதுவும் வேறு வழியின்றி
மற்றவர்கள் வறுப்புருத்தலில் பார்த்தது.
இந்த பிரச்சனை மற்ற மொழிக்காரனுக்கு கிடையாது. அவர்களுக்கு எழுத்துக்கள் அதிகம் ஆகையால் எளிதாக கற்றுகொள்வார்கள். நமக்கு தான் இந்த பிரச்சனை. பேசுவது கூட கஷ்டம் தான். பலர் தவறாக ஹிந்தி பேசுவதைகேட்டிருக்கிறேன்.
ஆனால் மற்ற எந்த மொழியிலும் இல்லாத 'ழ' தமிழில் உள்ளது. அனால் பல தமிழர்களுக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை. ஆனால் மலயாளிகள் அதை கடன் வாங்கி அழகாக சொல்கிறார்கள். என்னிடம் பல மலயாளிகள் 'தமிழில் ழ இல்லையா என் கேட்டிருக்கிறார்கள்?
Comments
Post a Comment