கல்கி ரா. கிரிஷ்ணமூர்த்தியும் அவர் எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனும்

தமிழ் கதாசிரியர்களில் தனக்கி என்று தனி சிறப்பு பெற்றவர் கல்கி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். பல சிறு கதை, நெடுங்கதை, கட்டுரைகள் என்று எழுதியும் கல்கி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர்.முதலில் ஆனந்த விகடன் பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்த இவருக்காகவே திரு. சதாசிவம் அவர்கள் கல்கி என்ற பத்திரிகையை ஆரம்பித்தார் என் கேள்வி. கொஞ்சம் ஹாஸ்யம், கொஞ்சம் மர்மம் என்று அவர் கதைகள் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இப்போதய தஞ்சாவூரில் இருக்கும் புட்டமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். திருச்சியில் SSLC படிக்கும் போது மஹாத்மா காந்தியின் அழைப்பை கேட்டு பள்ளி படிப்பை விட்டு விட்டு நாட்டு விடுதலைக்காக போராட வந்து விட்டார். இது நடந்தது 1921 இல். பின்னர் 1923 இல் திரு கல்யாணசுந்தர முதலியார் நடத்தி வந்த 'நவசக்தி' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். சில ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து விலகி ராஜாஜியுடன் சேர்ந்து 'விமோசனம்' என்ற பத்திரிகை நடத்த உதவி வந்தார். பின்னர் நாட்டு விடுதலைக்காக ஆறு மாதம் சிறை சென்றார். 1932 இல் திரு வாசன் அவர்கள் அவரை ஆனந்த விகடனுக்கு அழைத்து வந்து ஆசிரியராக பொறுப்பு அளித்தார்.
பின்னர் கல்கி அவர்கள் ஆனந்த விகடனில் இருந்து தனியாக போய் திரு சதாசிவம் ( எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் கணவர்) அவர்களுடன் சேர்ந்து 'கல்கி' என்ற பத்திரிகை தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். இதில் பணி செய்யும்போது தான் அவர் மரணம் சம்பவித்தது.
அவர் பல சிறு கதைகள், கட்டுரைகள், சரித்திர சமூக நாவல்கள், விமர்சனங்கள், துணுக்குகள் என்று எழுதி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கினார். சிறந்த முற்போக்கு மனப்பான்மையும், சமூக சிந்தனையும் உடையவராக திகழ்ந்தார்.
பொன்னியின் செல்வன்' என்ற கதையை கல்கியில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தார். அற்புதமான நாவல். சோழ அரசன் ராஜ ராஜனை கதானாயகனாக சித்தரித்து எழுதப்பட்ட கதை.
இக்கதை கற்பனையாக எழுதப்பட்டது ஆனாலும் கிட்டதட்ட சரித்திர ஆதாரங்களையும், அந்த காலத்து சரித்திர புருஷர்களையும் இணைத்து எழுதியிருந்தார். இவர் ராஜ ராஜன் என்ற அருள்மொழிதேவன், அவன் தமக்கை குந்தவை, சிறிய தாயார் செம்பியன் மாதேவி, அவள் மகன் மதுராந்தகன், வந்திய தேவன், சுந்தர சோழர், அவர் மனைவி, அக்கால  குறு  நில மன்னர்கள், முத்தரையர்கள், பழுவேட்டரையர்கள், ராஜ ராஜன் தமையன் கரிகாலன், அவன் மரணம் என்று என்று அக்காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக ஒரு அற்புத காவியத்தை புனைந்தவர் அவர்.
அவரது மற்ற சரித்திர நாவல்கள் சிவகாமியின் சபதம், பார்திபன் கனவு முதலானவை.  சிவகாமியின் சபதம் கற்பனையாக பல்லவ சக்ரவர்த்தியான நரசிம்மனையும் சாலுக்கிய மன்னனான புலிகேசியையும் அவர்கள் யுத்தமும் சாளுக்கிய தலை நகர் வாதாபியை பல்லவர்கள் எரித்து அழித்ததையும் பற்றியது.
பாத்திபன் கனவு ஒரு சோழ இளவரசன் தன் நாட்டை பல்லவ சக்ரவர்த்தி நரசிம பல்லவனிடம் இருந்து கைபற்றுவதும், அவன் பெண்ணை காதலிப்பத்தையும்  பற்றியது.
அவர் சமூக நாவல்கள் பல எழுதியுள்ளார். அதில் கள்வனின் காதலி, தியாக பூமி இவை பிரபலமானது. அவருடைய தியாக பூமி, கள்வனின் காதலி, பார்த்திபன் கனவு ஆகியவை சினிமா படமாக்கப்பட்டது.
அவர் கடைசியில் எழுதிக்கொண்டிருந்த நாவல் 'அமரதாரா' கல்கியில் தொடராக வந்துகொண்டிருக்கும் போது அவர் மரணம் நிகழ்ந்தது. அந்த கதையை அவர் மகள் ஆனந்தி அவர்கள் நிறைவு செய்தார். இந்த கதை ஒரு சின்ன கிராமத்து பெண் ஒருவரை காதலித்து  ஒரு நடிகை ஆகி தன்னையும் அறியமல் ஒரு கொலை குற்றம்  சாட்டப்பட்டு பின் எப்படி காதலனுடன் சேர்கிறாள் என்படு தான் கதை.
இப்போது நான் தமிழ் வளர்ச்சி கழகத்தின் 'சோழ பெருவேந்தர் காலம்' என்ற வெளியீட்டின் புத்தகங்களை படிக்கும் போது தான் அவர் எவ்வளவு தூரம் அந்த சரித்திர புத்தகங்களை படித்து கிட்ட தட்ட அந்த சரித்திர பின்னணியலேயே அந்த கதை 'பொன்னியின் செல்வனை' எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த 'சோழ பெருவேந்தர் காலம்' சரித்திர வரலாற்று புத்தகங்கள் படிக்க படிக்க மிகவும் விறு விறுப்பாகவும் அழகாகும் எழுத்தப்பட்டிருக்கிறது. நல்ல bind செய்யப்பட்டு மிக விலை குறைவாக கிடைக்கிறது.

பாண்டியர்கள் சரித்திரமும் 'பாண்டியர் பெருவேந்தர் காலம்' என்ற புத்தகமாக கிடைக்கிறது. தமிழ் வளர்ச்சி கழகம், குறளகம் இதை வெளியிடுகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் படித்த பின் தான் இவ்வளவு அற்புதமான சரித்திர புருஷர்கள் ( தமிழர்கள்) இருந்தார்கள். அவர்கள் இந்தியாவின் மற்ற பல அரசர்களை வென்றார்கள், ஸ்ரீலங்காவை பிடித்து அதன் மன்னனை கைது செய்து தமிழ் நாட்டில் சிறை வைத்தார்கள், மலேசியா/இந்தோனேசிய வரை போய் அங்கு ஹிந்து கொயில்கள்/கலைகளை தோற்றுவித்தார்கள், அற்புதமான சிற்பங்களையும் அழகு கோயிலகளையும் கட்டினார்கள். எப்படி 40 டன் விமானத்தை தஞ்சை பெரிய கோவிலில் மேல் crane இல்லாத காலத்தில் ஏற்றினார்கள்? யாருக்கு தெரியும்? யாருக்கு தெரிந்து கொள்ள விருப்பம். DISCOVERY சானல் ராஜ ராஜனைப் பற்றி ஒரு டாக்குமென்றி காட்டுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அக்கரை கூட தமிழ் மக்களுக்கு இல்லை.

ஆனால் இப்போதய தமிழ் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது. தமிழின் அற்புதமான இலக்கியங்களை தெரியாது. சமஸ்கிருதத்தை போல நல்ல சமய நூல்கள் இங்கிருப்பது தெரியாது. அவர்களுக்கு சினிமா நடிகர்களையும் நடிகர்களயும் பற்றி தெரிந்து கொள்ளவே பொழுது இல்லை. என்ன செய்வது?
திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மக கி.ராஜேந்திரன் கூட ஒரு நல்ல எழுத்தாளர். அவர் கல்கியில் பல கதைகள் எழுதியுள்ளார். அதில் பொங்கி வரும் பெருனிலவு என்ற நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். கல்கியின் மகள் ஆனந்தி கூட அவர் இறந்தபின் அவரால் எழுத்தப்பட்டு வந்த அமரதாரா என்ற கதையை தொடர்ந்து எழுது முடித்து வைத்தார்.

 


Comments