அணு மின்சார நிலயங்களும் அவற்றின் நன்மைகளும்


ஏராளமான கடிதங்களும் , சத்யாக்கரஹங்களும், கூட்டங்களும் கூடங்களம் அணு மின் ஆலைக்கு எதிராக நடக்கின்றன. மக்கள் இதை பற்றி தெரிந்து தான் செய்கிறார்களா இல்லை மற்றவர்களால் வழி நடத்தப்படுகிறார்களா என தெரியவில்லை.பல மத தலைவர்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.

அணு மின் நிலயங்கள் மிக மிக பாதுகாப்பாக திட்டமிட்டு கட்டப்படுகின்றன. மக்களுக்கு மட்டுமின்றி இதை இயக்குபவற்களுக்கும் எந்த ஆபத்தில்லாமல் இருக்கவேண்டி design செய்யப்படுகின்றன. இல்லாவிடில் இதை இயக்க யாரும் முன் வரமாட்டார்கள். இதை இயக்குபவற்கள் தான் எந்த கதிர் வீச்சையும் முதலில் அனுபவிப்பவர்கள். ஏனென்றால் அவர்கள் தான் அவற்றின் மிக அருகில் இருக்கிறார்கள். இவர்களும் கதிர்வீச்சு அளவு 5mR மேல் ஒரு வருடத்தில் வாங்கி விட்டால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பின்னால் வேலைக்கு வருவார்கள்.

நான் கல்பாக்கம் IGCAR  இல் வேலை செய்தவன் தான். என்னுடைய இரண்டாவது குழந்தை கூட அங்கு தான் பிறந்தது. நாங்கள் கல்பாக்கம் DAE Township இல் தான் தங்கி இருந்தோம். எங்களுக்கோ மற்ற வேலை செய்பவர்களுக்கோ எந்த பதிப்பும் இருந்ததில்லை. இதை தவிர கல்பாக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் மீன் பிடித்துக் கொண்டும் அதை கல்பாக்கத்து மக்களும் மற்றவரும் தின்றுகொண்டும் தான் இருக்கிறார்கள். அங்கு இருக்கும் வயல்களில் இருந்து தான் எங்களுக்கு அரிசி, காய்கறிகள் வந்தன. 

பல அசைவ பிரியர்களுக்கு அங்குள்ள ஆட்டு கறியும் அங்கு பிடிக்கப்படுகிற  மீன்களும் உணவாயின. MAPP மின்னிலையம் 1980 இல் தொடக்கப்பட்டதாக நினைவு. இப்போதும் அது ஒடிக் கொண்டிருக்கிறது, எந்த வித பழுதும் இன்றி. இது தான் இந்தியாவின் முதல் indegenous அணு மின் நிலையம். இந்தியர்களால் கட்டப்பட்ட இந்த மின்னிலையம் இப்பொதும் தங்கு தடை இன்றி பணிபுரிவது இந்தியர்களின் திறமைக்கு ஒரு சான்று.

இந்தியாவில் இப்போது 20க்கும் மேலே வேலை செய்யும் அணுமின் நிலயங்கள் உள்ளன. தாரப்பூர் அணுமின் நிலையம் அமெரிக்க GE நிறுவனம் கட்டி தந்தது. அது 50 வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கின்றது. ராஜஸ்தானில் இருக்கும் RAPP கானடா அரசாங்க உதவியுடன் கட்டபட்டது. அதுவும் 40 ஆண்டுகளாக வேலை செய்கிறது. இது வரை எநத இந்திய அணுமின் நிலையமும் விபத்தில் சிக்கவில்லை. நன்றாகவே வேலை செய்கின்றன.

கழிந்த முறை வந்த சுனாமி கலபாக்கம் குடியிருப்பில் ஏகப்பட்ட நாசத்தை உண்டுபண்ணினாலும் அணுமின் நிலயத்தில் எந்த பாதிப்பையும் உண்டு பண்ணவில்லை.பல விஞ்ஞானிகளும் ஊழியர்களும் அதில் மரணம் அடைந்தனர்.

அனல்மின் நிலயங்கள் நிலக்கரி, பெட்ரோலியம் காஸ்,petroleum products, fuel oil, diesel இவற்றில் ஒன்றால் இயக்கப்படுகின்றன. இவற்றால் ஏரளமான மாசு ( ash, gases, powdered coal, CO2, carbon monoxide, carbon dioxide  and some obnoxious gases etc) சுற்றுபுற சூழலில் வெளியிடபடுகின்றன. இதை தவிர இந்தியாவில் பெட்ரோலியம் , நிலக்கரி இவற்றின் deposits மிக குறைவு. இவற்றை வைத்து மக்களுக்கு மின்சாரம் அதிக நாட்களுக்கு தயார் செய்ய முடியாது.வெளி நாட்டில் இருந்து தான் வாங்க வேண்டிய சூழ் நிலை. இது ஏராளம் அன்னிய செல்வை ஏற்படுத்தும். தவிர இதன் விலை, கிடைக்கும் அளவு நிச்சயமற்ற தன்மை உடையது.

சூரிய சக்தி பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். சூரிய சக்தி வெறும் 8 மணி நேரம் கூட கிடைக்காது. இரவு, மழை, மேக மூட்டம், தூசு, புயல் இவற்றால் பாதிக்கபடும். கரண்ட் தயாரிக்கும் Photovoltaic cells மிகவும் விலை அதிகம். தவிர அதன் efficiency 10 இல் இருந்து 15 வரைதான். அது DC கரண்டு தான் கொடுக்கும். அதை AC ஆக்க Inverters or DC/AC generators தேவைப்படும். ஏரளாமாக electronics, batteries தேவைப்படும். ரொம்ப பொருள்செலவு ஆகும். தவிர பாட்டிறிகள் ரொம்ப acid fumes வெளிப்படுத்தும். பாட்டிறியில் உள்ள காரீயம் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. பாட்டறிகள் 2/3 வருடங்களில் மற்றப்பட வேண்டியவை. இந்த பாட்டரிகளை மறு சுழர்ச்சி செய்வது மிக கடினம்.

காற்று ஆலைகள் காற்று வந்தால் மட்டுமே வேலை செய்யும்.

அணு மின்னிலயங்கள் மிக பாதுகாப்பாக கட்டப்படுகின்றன. Fuel மிக குறைந்த அளவே தேவைப்படுகிற்து. இயக்கும் செலவு (operational cost) கூட மிக குறைவு.

ஃபிரான்சிில் 75 சத விகிதம் மின்சாரம் அணு மின் நிலயங்களில் இருந்து தான் பெற படுகிரது. அணுமின் நிலயங்களை எதிர்க்கும் ஜெர்மனி ஃபிரான்சில் இருந்து தான் மின்சாரம் வாங்குகிறது. ஜெர்மனியில் 50 சதவிகிதம் மின்சாரம் அணுமின் நிலயங்களில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றது.


அபாயம் இன்றி எந்த தொழிலும் செய்யமுடியாது. இந்தியாவின் பல பாகங்களில் CHEMICAL FACTORIES உள்ளன. இவற்றில் இருந்து ஏராளமான ரசாயன கழிவுகள், புகை, மாசுபட்ட தண்ணீர் வருகின்றன. நீர் நிலம் மாசுபடுகின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வரும் கழிவு நீர் நிலங்களையும் குடி தண்ணீரையும் கெடுத்து பாழ் பண்ணுகிறது. போபாலில் இருந்த யூனியன் கார்பைட் ஃபாக்டரியில் இருந்து வந்த சையனைட் வாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பல ஆயிர்ம பேர்களுக்கு இன்னமும் அதன் பீடிப்பு உள்ளது.



கேரளா, தென் தமிழ் நாட்டின் கடல் கரைகளில் தோரியம், மோனோசைட், இல்மனைட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் RARE EARTH கனிமங்கள் இயற்கையாகவே உள்ளன. இவற்றால் கேரளாவில் சவரை என்ற இடத்தில் இருக்கும் பலருக்கும் ரேடியோ ஆக்டிவிட்டியினால் பல நோய்கள் வந்துள்ளன. ஆண்டாண்டு காலமாக அவர்கள் அங்கு வாழ்வதால் வந்தது இது. இயற்கையாகவே பல பொருட்கள் அணு கதிர்களை வெளி விடுகின்றன. இது பலருக்கும்தெரியாது.


இவற்றை எல்லாம் பார்க்கையில் அணுமின் நிலயங்களை எதிர்ப்பது அவ்வளவு புத்திசாலித்தனமாக தெரியவில்லை. இது அரசியலும் சில தனிபட்ட பேர்களின் விருப்பு வெறுப்புக்காக நடத்தப்படுவதாக தெரிகிறது.

Comments