சிலப்பதிகாரம் வகுப்பில் ஒரு நிகழ்ச்சி.



நான் திருவனந்தபுரம் இன்டெர்மீடியட் காலேஜில்  பி.யு.சி படிக்கும்போது இளங்கோவடிகளின்  சிலப்பதிகாரத்தில் கடேசி   
காதை எங்கள் ‘சிலபசில் (Syllabus) இருந்தது. பெயர் ஞாபகம் இல்லை. அதை எங்கள் லெக்சரர் விநாயகம் என்பவர் எடுத்தார். எங்கள் தமிழ் வகுப்புக்காக தனி லெக்சரர் இல்லாததால்  அவர் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த (கேரளா) யுனிவர்சிட்டி காலேஜில் இருந்து நடந்து வருவார்.

அந்த காலத்தில் வசன நடை கிடையாததால் எல்லா புலவர்களும் செய்யுள் வடிவில் தான் கதைகளை எழுதுவார்கள். கதைப்படி கோவலன் தன் செல்வத்தை எல்லாம் மாதவியிடம் இழந்து விட்டு கண்ணகியை தேடி வருகிறான். கண்ணகி அவனை மன்னித்து ஏற்றுகொள்கிறாள்.கண்ணகி அவனை அமர வைத்து பானகம் கொடுக்கிறாள். வெட்கத்துடனும் குற்ற உணர்வோடும் அமர்ந்திருக்கிற கோவலன் அவள் முகம் பார்க்க முடியாமல் அவள் காலை பார்க்கிறான். கண்ணகியின் எல்லா பொருட்களையும் எடுத்து சென்றபடியால் அவளின் கால் சிலம்பு மட்டும் தான் அணிந்திருக்கிறாள்.

“என்ன இந்த சிலம்பும் வேண்டுமா, அவிழ்த்து தருகிறேன் என்கிறாள் கண்ணகி.

“இல்லை நாம் மதுரை மாநகர் சென்று ஏதேனும் வாணிபம் செய்து பிழைக்கலாம் என்கிறான் கோவலன். சரி என்று கண்ணகியும் புறப்பட இருவரும் மதுரையை நோக்கி நடை பயில்கிறார்கள். வழியில் ‘கௌந்தி அடிகள் என்னும் சாமியாரினியும் அவர்களுடன் சேந்து கொள்கிறாள்.

வழியில் வைகை நதியை கடக்க நேர்கிறது. இரும்ருங்கும் அழகிய மலர்கள் பூத்துகுலுங்குகின்றன. ஒவ்வொரு மலராக இளகோவடிகள் விவரிக்கிறார். மதுரையை வந்து அடைகிறார்கள்.

யாரோ ஒரு வணிகர் வீட்டில் தங்குகிறார்கள். கண்ணகி கோவலனிடம் தன் சிலம்பை கொடுத்து இந்த சிலம்பை விற்று காசு வாங்கி வாணிகம் செய்யுங்கள் என்கிறாள்.

கண்ணகியின் ஒரு கால் சிலம்பை எடுத்துக்கொண்டு ஒரு பொற்கொல்லரிடம் போய் கோவலன் அந்த சிலம்பை கொடுத்து பணம் கேட்கிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பை திருடியவன் ஆகையால் அவன் கோவலனை அமர செய்துவிட்டு அரசினிடம் போய் இந்த சிலம்பை அரசனிடம் காட்டி "அரசே சிலம்பை திருடிய கள்வன் இவனே என்று கோவலனை காட்டிகொடுக்க, அரசன் ‘நெடுஞ்செழியனும் ‘அவனை கொண்டு வா என்று கூற , காவலாட்கள் அதை ‘கொன்று வா என காதால் கேட்டு கோவலனை வெட்டி கொலை களத்தில் கொன்று விடுகின்றனர்.(இது கதைப்படி உள்ளதா என தெரியவில்லை. ஆனால் எங்கள் ஆசிரியர் அவ்வாறு கூறினார்.)

சேதி கேட்டு தலைவிரி கோலமாக கண்ணகி அரசனிடம் போய் ‘உன் சிலம்பில் என்ன இருக்கும் என கேட்க அரசனும் “அதில் முத்து பரல்கள் இருக்கும் என்று கூற கண்ணகி தன்னிடம் மீதம் இருக்கும் சிலம்பை தரையில் அடித்து அதிலிருக்கும் மாணிக்க கற்களை காட்ட , தவறை உணர்ந்த நெடுஞ்செழியன் உடனடியாக தன் அரியணையிலேயே மரணமடைகிறான். அவன் மனைவி கோப்பெரும்தேவியும் கணவனை இழந்த சோகத்தில் உடனடியாக மரணமடைகிறாள்.

கோபம் தீராத கண்ணகி மதுரை நகரை விட்டு வெளியில் வந்து தன் இடது முலையை திருகி எறிந்து “பெண்கள், பார்ப்பனர்கள்,வயோதிகர், குழந்தைகள் தவிர்த்து மற்றவரை எரிக்க என்று சொல்ல மதுரை தீக்கிரையாகிறது.

பின்னர் கோபம் தணியாமல் மலை மேல் ஏறி ஒரு மரத்தின் அடியில் நிற்கும் போது வானில் புஷ்பக விமானம் வந்து அவளை ஏற்றிகொண்டு சொர்க்கத்திற்கு போனதாக கதை முடிகிறது.

வேட்டைக்காக அங்கு வந்த சேரன் செங்குட்டுவனிடம் இதைக் கண்ட காட்டுவாசி  மக்கள் சொல்ல, செங்குட்டுவனும் இப்படிபட்ட கற்புடைய பெண்ணிற்கு ஆலயம் அமைக்க  இமய மலை வரை போய் வட நாட்டு மன்னர்களாகிய கனக விஜயர்களை தோற்கடித்து அவர்கள் தலை மேல் கல் ஏற்றி கொண்டு வந்து கண்ணகிக்கு கோவில் அமைத்ததாக, செங்குட்டுவனின் தம்பியான துறவி இளங்கோவடிகள் கதையை முடித்திருந்தார். இந்த கதை தான் சிலப்பதிகாரம் என்ற அற்புதமான காவியம். கேரளாவை சேரர்கள் ஆண்டதாக வரலாறு.

இப்படி கிளாஸ் நடத்திக் கொண்டிருந்த லெக்சரர் திடீரென கீழே இறங்கி முன்னால் அமர்ந்திருந்த வேலப்பன் என்ற மாணவனை ‘பளார், பளார் என்று அறைந்தார். அவனிடம் இருந்த ஒரு பேப்பரை பிடுங்கி கொண்டார்.அவனை வகுப்புக்கு வேளியே போகவும் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கிளாஸ் விட்டு வெளியே வந்த உடன் அவனை திரும்ப அழைத்து அந்த பேப்பரை காட்டி “இது தான் கண்ணகியும் கோவலனுமா என்று கேட்டார். எட்டி பார்த்தால் அதில் ஒரு பெண் உருவமும் ஆண் ஒருவமும் அசிங்கமாக எழுத்தப்பட்டிருந்தது. வேலப்பன் குள்ளமாக இருப்பான் ஆகையால் முன் டெஸ்க்கில் அம்ர்ந்து பாடம் கேட்பான். எப்படி அங்கு அமர்ந்து இப்படி படம் வரைந்தான் என்று புரியவில்லை. வேலப்பன் பின்னால் டாக்டர்க்கு  படித்தான்.

Comments