மாம்பலத்தில் போலீஸ்காரரும் நானும்
சில வருடங்களுக்கு
முன் மோட்டார் பைக்கில் மேற்கு (வெஸ்ட்)
மாம்பலத்தில் ஒரு தெருவில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன். அங்கு ஒருவரிடம் “பனகல்
பார்க்’ எப்படி போவது என்று கேட்க” அவர் கையை நன்றாக நீட்டி ‘இதே ரோடில் நேராக போங்கள்’ என்றார்.
நானும் அவர் சொற் படியே அதே ரோடில் நேராக
வந்துகொண்டிருக்க , பிருந்தாவன் ஸ்டிரீட்டில் ஒரு போலீஸ்காரர் கை காட்டி என்னை
நிறுத்தினார்.
போலீஸ் : "என்ன
சார், நோ என்டிரியில் போரீங்க?"
நான் : "எனக்கு நோ என்டிரீ என்று தெரியாது."
போலீஸ் : "தப்பு சார்."
நான் : "எனக்கு தெரியாது. ஒருத்தர் இப்படி நேராக
போங்க என்றார். நானும் வண்டியை
ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன். ஆகையால் நீங்கள் வேண்டுமானால் கேஸ்
போட்டுகொள்ளுங்கள். வண்டி நம்பர் உள்ளது. பார்த்துகொள்ளுங்கள்."
போலீஸ் : ( என்னை
மேலும் கீழும் பார்த்து விட்டு) "எங்கே வேலை பண்ணூரீங்க?"
நான் : "நான் ஹைதிரபாதில் டிஃபன்ஸ் ஆஃபீசர்."
போலீஸ் : "என்ன சார்
டிஃபன்ஸில் இருந்துகிட்டு தப்பு பண்ணுரீங்க?"
நான் : "இதிலே என்ன தப்பு? தெரியாமல் வந்துட்டேன்.
நீங்க கேஸ் புக் பண்ணுங்க"
போலீஸ் : "நான் ரொம்ப
நேரமாக வெய்யிலே நிக்கிறேன், கொஞ்சம் பாத்து ஏதாவது கொடுத்துட்டு போங்க."
நான் : "எங்கிட்ட சில்லரை காசு ஏதும் இல்லே. இதே
வழியில் தான் கொஞ்சம் கழிந்து திரும்பி வருவேன் அப்போ ஏதேனும் காசு இருந்தா தரேன்"
இதை சொல்லிவிட்டு
நான் போய் விட்டேன். திரும்பி வரும்போது அங்கே அந்த போலீஸ்காரர் இருக்கிறாரா என்று
பார்த்தால், காணவில்லை.
(அந்த சமயத்தில்
நான் கல்பாக்கத்தில் DAE வேலையில் இருந்தேன். ஹைதிராபாதில் இருந்து வந்து 3 வருடங்கள்
ஆயிருந்தது).
இதே போல் ஒருமுறை கிண்டி அருகில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு போலீஸ்காரர் என்னை கை காட்டி நிறுத்தி என்னைக்கேட்க்காமல் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு 'அந்த வண்டி பின்னாலே போ சீக்கிரம்" என்றார்.
எனக்கோ தாங்கமுடியாத எரிச்சல். என்னை கேட்க்காமல் என் வண்டியில் அமர்ந்தது, என்னை "நீ, போ" என்றது கேட்டதும். நான் திரும்பி அவரை "வண்டியை விட்டு இறங்கு, யாரை நீ, போ என்று சொல்கிறாய்" என்று உரத்த குரலில் கேட்டேன். அந்த ஆள் அப்படியே இறங்கி போய் விட்டார்.
Comments
Post a Comment