நண்பன் நாராயாண ரெட்டியார்



நான் படித்த ஒரு வருட பி.யு.சி தான் கடைசி பி.யு.சி. அதன் பின் அது பி.டி.சி என்று இரெண்டு வருடமாகி விட்டது.இதே போல் நான் படித்த SSLC 11 வருடம். அதன் பின் அது 10 வருடங்களாக மாறி விட்டது. நான் படித்த 'இன்டெர்மீடியட் காலேஜில்' தமிழ் வகுப்புக்கு 40 பேர்கள் இருந்தனர். அதில் முக்கால் வாசி பேர்கள் கிறிஸ்துவிற்கு முன்பிருந்தே எஸ்.எஸ்.எல்.ஸி எழுதி பலவருடம் தோற்றவர்கள். சாதாரணமாக குறைந்த மார்க் எடுத்தவர்களையும், பலமுறை தோற்றவர்களையும் அந்த காலேஜில் சேர்க்க மாட்டார்கள். ஆனால் அது கடைசி கோர்ஸ் ஆனதாலும் இரண்டு வேளையும் காலேஜ் நடந்ததால் அவர்களுக்கும் சீட் கிடைத்தது. 

எங்களுக்கு என்று தமிழ் லெக்சரர் கிடையாது. 3 கிலொமீட்டர் தூரத்தில் இருந்த யூனிவர்சிட்டி காலேஜில் இருந்து ஒருவர் (அவர் பெயர் வினாயகம் என்று நினைக்கிறேன்) வேகாத வெய்யிலில் நடந்து வந்து கிளாஸ் எடுப்பார்.

இவர் கிளாஸில் இந்த ‘பழைய மாணவர்கள் சப்தமிட்டு, பேசி தொந்தரவு செய்ததால் எல்லோரையும் பெயர் வரிசைப்படி அமர சொல்லிவிட்டார்கள். என் பக்கத்தில் ஒரு மாணவன், நாராயண ரெட்டியார், என்ற பெயர் அமர்ந்திருந்தான். இவன் பல நாட்கள் வகுப்புக்கு வரமாட்டான். வந்தாலும் புத்தகம் கொண்டு வரமாட்டான். எப்போதாவது தான் கிளாஸிற்கு வருவான்.

அன்று ஒரு நாள் வகுப்புக்கு வந்தான். இவன் சிகரெட் குடித்துகொண்டிருந்தானோ இல்லை பேசிகொண்டிருந்தானோ தெரியவில்லை, திடீரென லெக்சரர் அவனிடம் பாடத்தை படிக்க சொன்னார்.

அவனிடம் புத்தகம் இல்லை. என்னிடம் புத்தகம் கேட்டான்.நான் என் புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். ஆனாலும் அவன் பாடத்தை கவனிக்காததால் அவனால் படிக்க முடியவில்லை.

"எங்கே உன் புத்தகம்" என்று  லெக்சரர் கேட்க, அவன் புத்தகம் "இல்லை" என்றான்.
"புத்தகம் எங்கே போயிற்று" என்றார் அவர்.

அவன் "கொண்டுவரவில்லை"

அவர் "ஏன் கொண்டு வரவில்லை?"

அவன் "மறந்து போச்சு."

நான்: மெதுவாக "ஏன் மந்து போச்சு?என்றேன். அவர் அவனை விட்டுவிட்டு என்னை படிக்க சொன்னார். நான் படித்து விட்டேன்.

லெக்சரர் நராயண ரெட்டியாரை வெளியே போக சொன்னார்.

அவன் போக மாட்டேன் என்றான்.

ரெண்டு பேரும் இப்படி கொஞ்ச  நேரம் தர்க்கம் பண்ண லெக்சரர்

கடுப்பாகி “ சும்ப ...... மகனே வெளியே போடா  என்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லி கத்திவிட்டார். (அது கெட்ட வார்த்தை என்று எனக்கு பின்னால் தான் தெரியும்.)

நாராயண ரெட்டியாருக்கு ஒரே சந்தோஷம். “சார் என்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டி விட்டீர்கள், ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ( அவர் சொன்ன கெட்ட வார்த்தையை சொல்லி, இப்படி திட்டினால்  நான் போக மாட்டேன் என்று திரும்ப திரும்ப அவர் சொன்ன கெட்ட வார்த்தையை பத்து முறை சொல்லி விட்டான்.

லெக்சரர் என்ன செய்வது என்று புரியாமல் முழித்துகொண்டு நின்றார்.

நல்லவேளை மணி அடித்து அவர் விரைந்து போய் விட்டார். நாரயண ரெட்டியாருக்கு பல கெட்ட சகவாசங்கள் உண்டு.

அவன் அப்புறம் என்ன செய்தான் என்றே தெரியாது. நான் இஞ்சினீரிங்க் முடித்து ஹைதிராபதுக்கு வேலைக்கு போகும் வரை அவனை காணவில்லை.

என் கூட படித்த 80% நண்பர்களும் தோற்று போனார்கள்.

Comments