பொன்னியின் செல்வன் கதையும் சரித்திரமும்.
பொன்னியின் செல்வன் நான் சிறு
பிராயத்திலேயே படித்து அனுபவித்த கதை. எங்கள் வீட்டில் ஆனந்த விகடன், கல்கி இவற்றை ரொம்ப
வருடங்களாக வாங்கி வந்தனர். நான் சிறு வயதிலேயே கதைகள் படிப்பதை பழக்கமாக
கொண்டவன்.
கல்கியில் சுமார் 50 வருடங்களுக்கு
முன்னால் தொடராக வந்த கதை “பொன்னியின் செல்வன்”. கல்கியின் சிவகாமியின் சபதம், அமர தாரா,
கள்வனின் காதலி, பார்திபன் கனவு இவற்றை விட இந்த பொன்னியின் செல்வன் மிக அதிகமாக
பாராட்டப்பட்டது, வாசிக்கப்பட்டது, இதனாலேயே கல்கி அதிகம் வாங்கப்பட்டது.
கல்கி அற்புதமாக கதை எழுதுவார். “பொன்னியின் செல்வன்”. அதை சோழ சாம்ராஜியத்தை எப்படி ராஜ ராஜன் பெரிதாக்கினான் என்றில்லாமல் அந்தகாலத்தின் அரசு நடப்பு, கொடை, கலைகள், அப்போது இருந்த பாத்திரங்கள் இவற்றை கற்பனை கலந்து சிறிது மர்மத்துடன் எழுதினார் கல்கி.
அவருடைய பல கதைகள் நான் படித்திருக்கிறேன். அவர் எழுதிய கடைசி கதை அமரதாரா. இது ஒரு கிராமத்து பெண் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ஆனதும் அவள் ஒரு கொலைக்கேசில் மாட்டிக்கொள்வதும் என்று போகும். இந்த கதை எழுதும்போது கல்கி இறந்து விட்டார். ஆகையால் பாதி எழுதி இருந்த இந்த கதையை அவர் மகள் ஆனந்தி தொடர்ந்து எழுதி நிறவு செய்தார். கல்கியின் மகன் திரு. ராஜேந்திரன் கூட ஒரு நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய பொங்கி வரும் பெரு நிலவு என்ற கதை இன்னமும் நினைவில் நிற்கிறது.
கல்கி அற்புதமாக கதை எழுதுவார். “பொன்னியின் செல்வன்”. அதை சோழ சாம்ராஜியத்தை எப்படி ராஜ ராஜன் பெரிதாக்கினான் என்றில்லாமல் அந்தகாலத்தின் அரசு நடப்பு, கொடை, கலைகள், அப்போது இருந்த பாத்திரங்கள் இவற்றை கற்பனை கலந்து சிறிது மர்மத்துடன் எழுதினார் கல்கி.
அவருடைய பல கதைகள் நான் படித்திருக்கிறேன். அவர் எழுதிய கடைசி கதை அமரதாரா. இது ஒரு கிராமத்து பெண் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ஆனதும் அவள் ஒரு கொலைக்கேசில் மாட்டிக்கொள்வதும் என்று போகும். இந்த கதை எழுதும்போது கல்கி இறந்து விட்டார். ஆகையால் பாதி எழுதி இருந்த இந்த கதையை அவர் மகள் ஆனந்தி தொடர்ந்து எழுதி நிறவு செய்தார். கல்கியின் மகன் திரு. ராஜேந்திரன் கூட ஒரு நல்ல எழுத்தாளர். அவர் எழுதிய பொங்கி வரும் பெரு நிலவு என்ற கதை இன்னமும் நினைவில் நிற்கிறது.
எங்கள் வீட்டில் இந்த “பொன்னியின் செல்வன்”.கதையை
ஒவ்வொரு வாரமும் படித்து விட்டு அதனை பற்றிய விமர்சனங்கள், அடுத்த வாரம் என்ன
வரும் என்ற சர்ச்சைகள் எழும்.
சோழ வம்சம் மூன்று தலை முறை அரசாண்டதாக
சரித்திரம் சொல்கிறது. மூன்றவதாக விஜயாலய சோழன் காலத்திலும் அவன் மகன் ஆதித்ய
சோழன் காலத்திலும் சோழ வம்சம் வீரு கொண்டு எழுந்தது. ஆதித்ய சோழன் பல்லவ அரசனாகிய
அபராஜிதனுக்கு உதவ போக அந்த வெற்றியினால் அபராஜிதன்
ஆதித்யனுக்கு முழு அரச பதவியும் கப்பம்
கட்ட தேவை இல்லை என்ற பல்லவ மன்னன் அபராஜிதன் பிரகடனம் செய்ததால் சோழர்கள்
நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தனர். ஆதித்யன் பல்லவ அரச குமாரி நிருபமாவை திருமணம்
செய்ததால் பல்லவருக்கும் சோழர்களுக்கும் போர் மூள பல்லவ சேனையை ஆதித்யன் தலமையில்
சோழ படைகள் தோற்கடித்தன. யானை மேல் இருந்த அபராஜிதனை குதிரை மேல் இருந்த ஆதித்யன்
யானைமேல் தாவி ஏறி வாளால் குத்திக்கொன்றான். இத்துடன் பல்லவர்கள் சாம்ராஜியம்
வீழ்ந்து சோழர்கள் சாம்ராஜியம் உயிர் பெற்றது. சுமார் 300 வருடங்கள் ஆண்ட சோழர்கள்
பின் பாண்டியர்களால் தொற்கடிக்கப் பட்டு பின் காலத்தின் கட்டாயத்தல் அழிந்து
போனார்கள்.
இது வரை எழுதியது சரித்திரம்.
இதற்கு பின் பொன்னியின்
செல்வன் கதை. இது வரை எழுதியது நான் சரித்திரத்தில் படித்தது.
இக்கதை “பொன்னியின் செல்வன்”. சரித்திரத்தை பின் துணையாக
கொண்டு கற்பனையாக எழுத்தப்பட்டது. இதில் பல சரித்திர பாத்திரங்கள் உண்டு. சரித்திர
சம்பவங்கள் உண்டு. ஆகையால் இந்த கதையை உண்மை என் பலரும் நினப்பதுண்டு. மிக நீண்ட
கதை என்பதால் அதை சுருக்க முடியாமையால் சில பகுதிகளாக கொடுத்துள்ளேன். மக்கள்
புத்தகம் வாங்கி படித்துக்கொள்ளலாம். உண்மையான சுவாரஸ்யம் படிக்கும் போது தான்
தெரியும்.
சுந்திர சோழர் ஆட்சி
நட்த்துகிறார்.சுந்தரர் என்று பெயர் வரக்காரணம் அவர் மேனி அழகில் சிறந்தவர். அவருக்கு
மூன்று குழந்தைகள். மூத்தவன் கரிகாலன் (இவன் முதல் கரிகாலன் அல்ல, அவன் பெயர்
சுமந்தவன்), இரண்டவது குந்தவை பெண், மூன்றாவது அருள்மொழி. அருள்மொழி குழ்ந்தையாக
இருக்கும்போது படகில் செல்லும் போது காவேரியில் (பொன்னி நதி) தவறி விழுந்தமையால்
( அப்படி விழுந்த போது ஒரு அழகிய பெண் அவனை கையில் ஏந்தி காப்பாற்றி சுந்தரர்
கையில் கொடுத்ததால் அது காவேரி அல்லது பொன்னி நதி காப்பாறியதால்
அதை தாய் என்று நினைத்து) அவனை பொன்னியின் செல்வன் என்ற அடை மொழி வந்து சேர்ந்தது.
சுந்தர சோழரின் மனைவி மலையமான் அரச
குடும்பத்தை சேர்ந்தவள். சுந்தரர் நோய்வாய்பட்டு படுக்கையில் இருக்கிறார்.
கரிகாலன் வடக்கே காஞ்சியில் படையுடன் இருக்கிறான். அவனுக்கு துணையாக வல்லவராயன்
வந்திய தேவன் என்ற அரசகுமாரனும் பல்லவ குடும்பத்தை சேர்ந்த பார்த்திபேந்திரனும் இருக்கிறார்கள். இருவரும்
கரிகாலனின் படை தலைவர்களாக இருக்கிறார்கள்.
தன் தந்தை சுந்திரர் பழுவேட்டரையர்களால்
சிறை வைக்கப் பட்டிருப்பதாக வதந்திகள் வந்ததால் கரிகாலன் வந்திய தேவனை அதைப்பற்றி
கண்டு வருமாறும் தன் தங்கை குந்தவையை கண்டு ஒரு கடிதம் கொடுத்து வருமாறு
அனுப்புகிறான்.
வந்திய தேவன் என்று சரித்திரத்தில் யாரும் இருந்ததாக தெரியவில்லை. குந்தவை, மதுராந்தகன், ராஜ ராஜன், அவன் மகன் ராஜேந்திரன், முதல் மந்திரி அன்பில் அனிருத்தர், செம்பியன் மாதேவி இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் இருந்தார்கள்.
வந்திய தேவன் என்று சரித்திரத்தில் யாரும் இருந்ததாக தெரியவில்லை. குந்தவை, மதுராந்தகன், ராஜ ராஜன், அவன் மகன் ராஜேந்திரன், முதல் மந்திரி அன்பில் அனிருத்தர், செம்பியன் மாதேவி இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் இருந்தார்கள்.
வந்திய தேவன் ஸ்ரீ நாராயண ஏரியை
அடைவதில் இருந்து கதை துவங்குகிறது. இங்கு தான் அவன் ஆழ்வார்கடியானை கண்டு நட்புக்கொள்கிறான்.
ஆழ்வார்க்கடியான் முதல் மந்திரி அன்பில் அனிருத்தரின் சீடன். ஒற்று செய்வது அவன் தொழில்.
பின் தஞ்சாவூர் கோட்டைக்குள் செல்ல முற்சிக்கிறான. அது மிகவும் கடினமாக தெரிகிறது.
அப்போது அங்கு வரும் நந்தினியின் பல்லக்கில் தன் குதிரையை முட்டவைத்து அவள் நட்பை
பெருகிறான். அவள் அவனிடம் தம் முத்திரை மோதிரத்தை கொடுக்கிறாள். அதை
வைத்துக்கொண்டு அவன் சுந்திர சோழரை பார்த்து ‘அபாயம்’ என கூறுகிறான் இதைக்கேட்டுக்கொண்டு வந்த சின்ன
பழுவட்டரையர் அவனை கண்காணிக்கிறார். அங்கிருந்து தப்பி அவன் குந்தவையை
சந்திக்கிறான். அவளை கண்டவுடன் காதல் கொள்கிறான்.
அங்கிருந்து போய் தன் எஜமானரான
கரிகாலனிடம் குந்தவை கொடுத்த கடிதத்தை கொடுக்கிறான். குந்தவை அவனை அங்கேயே இருக்க
சொல்கிறாள். திரும்பி போகும் வந்திய தேவன்
கரிகாலனிடம் இங்கு நடக்கும் விஷயங்களை
சொல்ல அவனும் வந்திய தேவனை இல்ங்கைக்கு அனுப்பி தன் தம்பியை வர சொல்லி கடிதம்
கொடுக்கிறான்.
இதற்கிடையில் வந்திய தேவனை குந்தவை
தன் தம்பியான அருள்மொழித்தேவனை காண இலங்கைக்கு அனுப்புகிறாள். அவனுடன்
ஆழ்வார்க்கடியானும் சேர்ந்து கொள்கிறான். அவர்கள் அருள்மொழியை அங்கு கண்டு நட்பு
கொள்கிறார்கள். அங்கு தான் கவந்திய தேவன் ஒரு அழகான ஊமை பெண்ணை காண்கிறான். அந்த
பெண் நந்தினியைப்போல் இருக்கிறாள். அவள் அவர்களை பல ஆபத்துக்களில் இருந்து காத்து
அனுப்பி வைக்கிறள். அவள் சுந்தர சோழரின் காதலி என்று அருள்மொழிக்கு படங்கள் மூலம்
தெரிவிக்கிறாள்.
இலங்கையில் இருந்து வந்திய தேவன்,
அருள்மொழி தமிழகத்துக்கு கப்பலில் வருகிறார்கள். முன்னால் வந்திய தேவனுக்கு உதவிய
பூங்குழலி என்ற ஓடக்கார பெண் உடல் சரியில்லாத அருள்மொழி புத்த விகாரம் செல்ல
வந்திய தேவனுக்கு உதவுகிறாள்.
அவர்களை விட்டு பிரிந்த வந்திய
தேவன் கரிகாலனிடம் போய் சேர்கிறான். குந்தவி கூறியபடி காஞ்சியில் இருக்காமல் அவள்
சொல்லை மீறி அவன் சம்புவரையர் மாளிகைக்கு வந்து.சேர்கிறான். அவனுடன் வந்திய
தேவனும் பார்த்திபேந்திர பல்லவனும் கந்த மாறனும் வருகிறாகள். பெரிய
பழுவேட்டரையரின் மனைவியான நந்தினியும்
அங்கு அவரோடு வருகிறாள். பல சிற்றரசர்கள் அங்கு சேர்ந்து மதுராந்தகனுக்கு முடி
சூட்ட நினைக்கிறார்கள். மதுராந்தகன் முன்னாள் அரசராகிய கண்டராதித்தரின் மகன். அவன்
அரசனாக கூடாது என்று அவன் தாய்
சொல்கிறாள். பழுவேட்டரையர் நந்தினி சொல்படி மற்ற சிற்றரசர்களை கூட்டி
அவனுக்கு பட்டம் சூட்ட திட்டமிடுகிறார். அங்கு வைத்து பாண்டிய ஆபத்துதவிகளால்
கரிகாலன் கொல்லப்படுகிறான். அந்த கொலை வந்திய தேவன் தலையில் விழுகிறது. வந்திய
தேவன் கைது செய்யப்பட்டு பாதாள சிறையில் அடைக்கப்படுகிறான்.
அங்கிருந்து அவன்
தப்பி ஒரு பைத்தியக்காரனுடன் போகிறான். இதற்கிடையில் பழுவேட்டரையர் சில பாண்டிய
சதிகாரர்கள் பேசுவதை கேட்டு நந்தினி பாண்டிய நாட்டு சதிகாரி என அறிந்து
கொள்கிறார். நந்தினியின் ஆட்கள் அவரை அடித்து போட்டுவிட்டு போய் விடுகிறார்கள்.
நந்தினி ஒரு குதிரை மேல் ஏறி தப்பி விடுகிறாள்.
நந்தினி என்ற பாத்திரம் படைக்கப்பட்டது ஒருவித துப்பறியும் கதை போல் ஆகி விட்டது. உண்மையில் நந்தினி யார் மகள் என்று கடைசி வரை சரியாக சொல்லப்படவில்லை. கரிகாலனால் கழுத்தை வெட்டப்பட்டு இறந்த பாண்டிய அரசன் வீரபாண்டியனின் மகள் என்று சூசகமாக சொல்லப்படுகிறது.போலி மதுராந்தகன் அவள் தம்பி என்றும் ஊமை பெண் அவர்கள் தாய் என்றும் ஆனால் அவளுக்கு புத்தி பேதலித்தபோது அந்த இரெண்டு குழந்தைகளும் பிறந்ததால் அவளுக்கும் அவர்களின் தந்தை யார் என்று தெரியாது என்கிறார் ஆசிரியர்.
நந்தினி வீரபாண்டியனின் ஆவி தன்னிடம் கரிகாலன் உயிரை கேட்கிறது என்று சொல்லி ஒரு மீன் பிடி கொண்ட வாளை வைத்துக்கொண்டிருக்கிறாள். அனால் அவள் கரிகாலனை கொல்லவில்லை.
பழுவேட்டரையர் தான் கரிகாலனி கொன்றதாக சொன்னாலும் வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் தான் அவனைக் கொன்றார்கள் என்று பழுவேட்டரையர் தன் மரணப்படுக்கையில் சொல்கிறார்.
இதற்கிடையில் மதுராந்தகன் என்ற
பெயரில் இருந்த போலி மதுராந்தகன் ஓடி
போய்விட்டதால் உண்மையான மதுராந்தகன், சேந்தன் அமுதன் என்ற பெயரில் இருந்ததை கண்டு
பிடித்து அந்த மதுராந்தகன் அரசராக முடிசூட்டப்பட்டான்.
பைத்தியக்காரன் வழியில் வந்திய
தேவனை விட்டுவிட்டு மதுராந்தகனுடன் அங்கிருந்து போகிறான். வந்திய தேவன் ஒரு நாள்
ஒரு பெண்ணை காப்பாற்ற நதியில் குதித்து வரும்போது அவனறியாமல் அரச சபைக்கு வந்து
சேர்கிறான். அவனை கந்தமாறன், பார்த்திபேந்திரன் முதலியோர் பிடித்து குற்றம்
சாட்டுகிறார்கள். அப்போது பழுவேட்டரையர், தான் தான் கரிகாலனை கொன்றதாக சொல்லி தன் வாளால் தன்னையே குத்திக்கொண்டு தன்
உயிரை மாய்த்துக்கொள்கிறார்.
வந்திய தேவன் குந்தவியிடம் தன்
காதலை தெரிவிக்கிறான் அவளும் அதை ஏற்றுக்கொள்கிறாள்.
வந்தியதேவனுக்கு அவன் முன்னோர் ஆட்சி
செய்த வாணர்குல நாடு வல்லம் கிடைக்கிறது. அவனை காதலித்த கந்தமாறனின் தங்கை மணிமேகலை அவன் கைகளிலே பைத்தியமாகி மரணமடைகிறாள்.
அகிலன் இதைப்போல் ஒரு சோழர்களைப்பற்றிய கதை "வேங்கையின் மைந்தன்", கல்கியில் எழுதினார். ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் இலங்கை படை எடுப்பும் , சிங்கள் அரசன் மகிந்தனை கைது செய்து தமிழகத்துக்கு கொண்டு வருவதும் அந்த கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தது.
Comments
Post a Comment