சாந்தி நிலையம் + சவுண்ட் ஆஃப் மியூசிக் +ஃப்ரென்ச் கதை தமிழ் படமாகியது
நாங்கள் பத்தாவது படிக்கும்போது
எங்களுக்கு Non Detailed Story அதாவது கதை ஒன்று தமிழ் முக்கிய பாடத்தோடு படிக்க வேண்டும்.
எங்களுக்கு என்று வந்தது ஒரு “ஃப்ரென்ச்” இல் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட காதல் கதை. அதன்
ஹீரோ பெயர் ராச்செஸ்டர் என்று ஞாபகம். ராச்செஸ்டர் ஒரு பெரிய மாளிகையில் ஏழு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த
குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேடி வருகிறார். ஒரு ஏழைப்பெண் அந்த
வேலைக்கு தேடி வருகிறாள். ரொம்ப சீரியசான ராச்செஸ்டர் அந்தப்பெண்ணை வேலைக்கு
வைத்துக்க்கொள்கிறார். பெண்ணை ஜான்சி என்றழைப்போம்.
மிகவும் குறும்பும் சொன்னால் கேட்காத அந்த குழந்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு,
பொறுமையுடன் அந்த பெண் ஜான்சி திருத்திக்கொண்டு வருகிறாள். இத்துடன் அந்த வீட்டின்
வேலைகளையும் செய்து வருகிறாள். இப்படி இருக்கும்போது அவளுக்கும் ரொம்ப
இருக்கமாகவும் சோகமாகவும் இருக்கும்
ராச்செஸ்டருக்கும் மெல்லிதான காதல் அரும்புகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகிறது. கல்யாணத்தன்று
காலையில் கண்யமாக உடை அணிந்த இருவர் வந்து
கல்யாணத்தை நிருத்துகின்றனர். அவர்களில் ஒருவர் ராச்செஸ்டர் ஏற்கனவே திருமணமானவர்
என்றும் அவருடைய சகோதரியைத்தான் ராச்செஸ்டர் மணந்திருக்கிறார் என்றும் அந்த ஏழு
குழந்தைகளும் ராச்செஸ்டரின் குழந்தைகள் தான் என்றும் கூறுகிறார். அவரின் மனைவி
அந்த மாளிகையிலே அடைத்து வைக்கபட்டிருப்பதாகவும்
கூறுகிறார்.
ராச்செஸ்டர் அதை மறுக்கவில்லை ஆனால் ‘உன் சகோதரிக்கு மன நோய் அவளுடன் நான் மண
வாழ்க்கை பல வருடங்களாக வாழ வில்லை. அவள் மன நோய் குணப்படுத்த முடியாது” என்கிறார். ஆனால் “ஃபிரான்ஸ் வழக்கப்படி அவர் விவாக ரத்து
பெற முடியாது” என்கிறார் கூட
வந்த போலீஸ்காரர். தலையைப் பிடித்துக்கொண்டு ராச்செஸ்டர் அமர்ந்து விடுகிறார்.
கோபமுற்ற ஜான்சி அங்கிருந்து ஓடிப்போகிறாள். பல வருடங்கள் கழிகின்றன. ஒரு நாள்
ஒரு செமினாரியில் வேலை செய்கின்ற ஜான்சி செய்தி தாள் படிக்கும்போது ஒரு தீ
விபத்தில் ஒரு பெரிய மாளிகை எரிந்து அழிந்து போனதாகவும் அதனுடன் மாளிகையில் இருந்த
குழந்தைகள், ஒரு பெண் ஆகியோரும் இறந்ததாகவும் காப்பாற்ற போனவர் காயம்பட்டு
மருத்துவ மனையில் இருப்பதாகவும் அவர் பெயர் ராச்செஸ்டர் என்றும் படிக்கிறாள். பதைபதைப்புடன்
அந்த மருத்துவ மனைக்கு செல்கிறாள். அங்கு ராச்செஸ்டரை பார்க்கிறாள். காயம்பட்டு கண்ணை
இழந்த நிலயில் பரிதாபமாக அவர் இருக்கிறார். தன் வாழ்க்கையில் தன் மனைவியால் பட்ட
துன்பங்களையும், அவற்றைபற்றி கூறினால் ஜன்சி அவரை ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்றும் அதனால்
தான் அதைப்பற்றி ஏதும் அவளிடம் சொல்லவில்லை என்றும் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும்
வேண்டுகிறார்.
மனம் இளகிப்போன ஜான்சி அவரை ஆரத்தழுவி முத்தமிடுகிறாள். அவர்கள் வாழ்க்கை
ஆரம்பிக்கிறதாக கதை முடிகிறது.
என்னடா கதை “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்” போலவும் தமிழ்
படம் சாந்தி நிலயம் போலவும் இருக்கிறது என்று தோன்றுகிறதா? அது தான் தமிழ் படம்.
எல்லா இடத்திலும் இருந்து நோண்டி, திருடி, புடுங்கி படம் பண்ணுவது. பல கதைகளில்
படம் பண்ணினால் யாரும் கேட்க முடியாது அல்லவா?
Comments
Post a Comment