நம் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட கேரள தமிழர் செண்பக ராமன் பிள்ளை

 நான் திருவனந்தபுரத்தில்  இருந்து வந்த தமிழன். நானும் மாடல் ஸ்கூளில் தான் படித்தேன். ஆகையால் திரு செண்பகராமன் பிள்ளை படித்த் ஸ்கூளில் படித்ததற்கும் அவர் வாழ்ந்த ஊரில் வாழ்ந்ததற்கும் பெருமை படுகிறேன்.

திருவனந்தபுரத்தில் பல தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. அவற்றில் திரு. சின்ன சாமி  பிள்ளை குடும்பமும் ஒன்று. அவர் திருவிதாங்கூர் ஸ்டேட் போலீசில் ஹெட் கான்ஸ்டபிலாக திருவனந்தபுரத்தில் வேலை செய்து வந்தார். அவர் மனைவியின் பெயர் நாகம்மை. இவர்களின் மகன் தான் செண்பகராமன். 

செண்பகராமன் மாடல் ஸ்கூளில் படித்து வந்தார். அப்படி அவர் அங்கு படித்து வருகையில் சர் வால்டர் ஸ்டிர்க்லண்ட் என்ற பிரிட்டீஷ் “பையாலிஸ்ட் இடம் அறிமுகம் ஆனார். சர் வால்டர் ஸ்டிர்க்லண்ட் எங்கு போனாலும் அங்குள்ள மரம், செடி, கொடிகள்,அவ்ற்றின் வேர், இலை என பல பாகங்களையும் சேகரிப்பது வழக்கம். செண்பகராமன் பிள்ளை  சர் வால்டர் ஸ்டிர்க்லண்ட் இடம் அறிமுகம் ஆனதால் அவருக்கு இந்த இலை, தழை, செடி, வேர் இவற்றை தேடி சேகரிக்க தன் அத்தை மகன் பத்மநாபனுடன் சேர்ந்து உதவினார். 

சர் வால்டர் ஸ்டிர்க்லண்டுக்கு இந்த இரண்டு பையன்களையும் மிகவும் பிடித்துபோனதால் அவர்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேர உதவ நினைத்தார். ஆகையால் அவ்ர் திரும்ப தன் நாட்டிற்கு போகையில் இந்த இரண்டு பையன் களையும் தன்னுடன் கப்பலில் அழைத்து சென்றார். கொழும்பு துறைமுகத்தில் பத்மநாபன் பயந்து திரும்பி வந்து விட்டார்.

செண்மகராமன் சர் வால்டர் ஸ்டிர்க்லண்ட் உடன் ஆஸ்டிரியாவிற்கு வந்து சேந்தார். அங்கு சர் வால்டர் ஸ்டிர்க்லண்ட் செண்பகராமனை ஒரு பள்ளியில் சேர்த்தார். இப்படிப்பை முடித்த செண்பகராமன் ஒரு “டெக்னிகல் இன்ஸ்டிடுடில் சேர்ந்து இஞ்சினீரிங் “டிப்லொமா பட்டம் பெற்றார்.

இரெண்டாம் உலக போர் சமயத்தில் செண்மகராமன் பிள்ளை ஜூரிச்சில் செப்டெம்பர் 1914 இல் “ அகில உலக இந்திய ஆதரவு கம்மிடீ (IInternationalternational Pro India Committee) ஆரம்பித்து அதன் தலைவரானார். இதே சமயத்தில்  பெர்லினில் இந்தியன் விடுதலை கம்மிட்டீ ஒரு சில இந்தியர்களால் தோற்றுவிக்கப்பட்டு வீரேந்திர நாத் சட்டோப்பாத்தியாய அதன் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் சரோஜினி நாயுடுவின் அண்ணன் ஆவார். இவர்களில் பூபேந்திர நாத் தத்தா (ஸ்வாமி விவேகானந்தாவின் சகோதரர்),கேரளத்தை சேர்ந்த மலயாளம் பேசும் raka புன்னக்கல் A. ராமன் பிள்ளை என்னும் மாணவர், தாரகனாத் தாஸ், பர்க்கத்துல்லா, சந்திர காந்த் சக்கரவர்த்தி, M.பிரபாகர், பிரேந்திர சர்கார், ஹெரம்பலால் குப்தா என்பவர்கள் கூட அதன் உறுப்பினர்கள் ஆக இருந்தனர்.

செப்டெம்பர் 1914 இல் செண்மகராமன் பிள்ளை பெர்லின் வந்து தன்னுடைய உலக இந்திய ஆதரவு கம்மிட்டீயை இந்த இந்த 'கம்மிட்டீ' இல் சேர்த்து அதன் அங்கத்தினர் ஆனார். இந்த கம்மிட்டீ பெர்லினில் இருந்து கொண்டு இந்திய விடுதலை புரட்சிக்கு ஐரோப்பாவில் ஆதரவு திரட்டினர். இந்த கம்மிட்டீயின் கிளைகள் 'ஆம்ஸ்டர்டாம்', 'ஸ்டாக்கோம்', 'வாஷிங்டன்' போன்ற் நகரங்களில் தோன்றின. செண்மகராமன் பிள்ளையும் ராமன் பிள்ளையும் நண்பர்கள் ஆயினர். இருவருமே திருவிதாங்கூரை சேர்ந்தவர்கள் என்பதால் இது இன்னமும் நெருக்கமானது.

செண்மகராமன் பிள்ளை பெர்லினில் இருந்து கொண்டு பிரிட்டீஷ் ராணுவத்தில் பணி புரிந்த இந்திய ராணுவ வீரர்களை பிரிட்டனுக்கு எதிராக புரட்சி செய்யுமாறு அறைகூவல் விடுத்தார். ஒன்றாம் உலக மஹா யுத்தத்தில் ஜெர்மனி தோற்றவுடன் செண்மகராமன் பிள்ளை பெர்லினில் தங்கி ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தார். அந்த சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ‘வியன்னா விற்கு வந்தார். செண்மகராமன் பிள்ளை அவரை சந்தித்து தன் விடுதலை திட்டங்களை அவருக்கு சொன்னார்.

ஜெர்மானியர்கள்  இந்திய விருதலைக்காக அங்கிருந்த இந்திய புரட்சிக்காரர்களுக்கு உதவினாலும் அதில் அவர்களின் சுய நலம் ஒளிந்திருந்தது. பிரிட்டீஷ் காரர்களை எதிர்க்கவும், விளம்பரத்திற்காகவும் தான் தங்களை ஜெர்மன் காரர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று இந்தியர்களுக்கு தெரிந்தே இருந்தது.

இரெண்டாம் உலக போரில் ஜெர்மானியர்கள் தோற்க தொடங்கியதும் இந்த உதவி செய்யும் போக்கு குறைந்தது. இதனால் இரெண்டு பக்கமும் பிரச்கனைகள் தொடங்கியது. செண்மகராமன் பிள்ளை தன் பக்க நியாங்களை உறக்க கூறினார்.ஹிட்லரை மன்னிப்பு கோர கூறினார்.  இதனால் அவருக்கும் ஜெர்மானியருக்கும் விரோதம் ஏற்பட்டது. ஜெர்மன் நாசிக்கள் ஹிட்லர் ஆர்டர் செய்தபடி அவருக்கு உணவில் விஷம் கொடுத்து 26 மே மாதம், 1934 இல் கொலை செய்தனர்.

1932 இல் செண்மகராமன் பிள்ளை மணிப்பூரை சேர்ந்த லக்ஷ்மி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மி பாய் பல இன்னல்கிடையில் பெர்லினில் வசித்து வந்தார். செண்மகராமன் பிள்ளையின் கடைசி விருப்பமாகிய “தன் உடலின் சாம்பலை இந்திய மண்ணில் தான் இட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் இறந்த 33 வருடங்களுக்குபின் தான் அவர் மனைவியால் செய்ய முடிந்தது.இதற்காக அவர் 'பெர்லின்', 'இட்டலி','ஸ்பெயின்' என்று வசிக்க வேண்டி இருந்தது. இறுதியில் அவர் பம்பாய் வந்து சேந்தார். இந்திய போர் கப்பல் I.N.S DELHI அவரது சாம்பலை கொச்சிக்கு ஸெப்டெம்பெர் 16ஆம் நாள் 1966 இல் கொண்டு வந்தது.

அவருக்கு கேரள அரசு சகல மரியாதையும் செய்தது.

இப்படி நாட்டிற்க்காக உயிர் விட்ட ஒரு தமிழனை எத்தினை தமிழருக்கு தெரியும்?


Comments