12000 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட உருகுவே காரர்களின் சாப்பாடு


தேதி 13, அக்டொபர், ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்து இரண்டு அன்று ஒரு 'உருகுவே' விமானம் அண்டிஸ் மலைத் தொடரில் விழுந்து நொருங்கியது. 45 பேர்கள் பயணம் செய்த அந்த விமானத்தில் 25 பேர்கள் அந்த விபத்தில் மரணம் அடைந்தனர். பனி சரிவு, பயங்கர குளிர், உணவின்மை ஆகிய காடரணங்களால் மேலும் சிலர் இறந்தனர். கடைசியில் 16 பேர்களே தப்பினர். தப்பியவர்கள 23, டிசம்பர், 1972 இல் மீட்க்கப்பட்டனர்.

தப்பினவருக்கு பல பிரச்சனைகள். முதலாவது கடும் குளிர். 4000 மீட்டர் 
( 12,000 அடி) உயரத்தில் கடும் குளிரில், சூடு இன்றி, உணவின்றி, மருந்து மாத்திரை இன்றி அவர்கள் வாழ வேண்டி இருந்தது. முதலில் விமானத்தில் இருந்த உணவை பங்கு போட்டு தின்றார்கள். பின் பனியை வெய்யிலில் உருக்கி தண்ணீர் பருகினர். அதற்கு பின் பசி வாட்டி வதைக்க  வேறு வழியின்றி இறந்தவர்களின் பிணங்களை தின்ன ஆரம்பித்தனர். முதலில் அது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. பலரும் வாந்தி எடுத்தனர். பின்னர் அது சகஜமாகி விட்டது. பச்சையாக மனித கறி சாப்பிட முடியாதவர்கள் கறியை விமானத்தின் மேற்கூரையில் வைத்து சூடு பண்ணி தின்றார்கள். இரவு கடும் குளிரை விமானத்தின் உள்ளே கழித்தனர். விமானத்தின் இருக்கைகளை எரித்து குளிர் காய்ந்தனர். இறந்தவர்களின் ஆடைகள் பலருக்கும் குளிரை தணிக்க உதவியது. ஒரு முதியவர் அவர்களிடம் தன் மகளை அவர் இறந்த பின் உண்ணுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் பின்னாளில் இறந்து விட்டார். பிணங்கள் கடும் குளிரில் கெட்டு போகாமல் நன்றாகவே இருந்தது.

இரெண்டு மாதங்கள் வரை பிணங்கள் அவர்களுக்கு உணவானது. அவை தீர்ந்தவுடன் அங்த குழுவிலிருந்து இரெண்டு பேர் மலையில் இருந்து கீழிரங்கி போய் ஏதேனும் வழி தேடலாம் என்று போனார்கள். நல்ல வேளையாக அவர்களுக்க் கீழே வந்த பின் உதவி கிடைத்தது. எல்லோரும் மீட்க்கப்பட்டனர். மீட்ப்புக்குழுவிற்கு இவர்களின் ஆரோக்கிய நிலையை கண்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "எப்படி இந்த் குளிரில், உணவின்றி இத்தனை நாட்கள் இருந்தீர்கள்" என்று கேட்டனர். முதலில் ஒன்றும் கூறாத அவர்கள் முடிவில் தாங்கள் பிணங்களை தின்று உயிர் வாழ்ந்த்ததாக  தயங்கி தயங்கி சொன்னார்கள்.

கேட்டவர்களுக்கு அறுவெறுப்பாக இருந்தது. இதே மிகவும் சர்ச்சைக்கு இடம் வகுத்தது. அதனை எதிர்த்தவர்களும் இருந்தனர். அவர்களுக்கு இறந்தவர்களின்  உறவினர்களின் ஆதரவு இருந்தது.

பின்னர் எல்லோரும் வேறு வழியின்றி அவர்களின் கூற்றை ஏற்றுகொண்டனர்.

இது ஒரு புத்தகமாக 'ALIVE' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பின்னர் படமாகப்பட்டது.


நாம் எல்லாம் சாப்பாட்டில் உப்பு, காரம், நெய், எண்ணை என்று சேர்த்து சமைக்கிறோம். அது கூட நமக்கு பிடிக்கமல் போகிறது. கறி சாப்பிடும் இந்தியர்கள் கூட அதனுடன் பல மசால், காரம, இஞ்சி, பூண்டு, மஞ்சள் என்று ஏராளம் பொருட்கள் சேர்த்து தான் சமைக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இது போல் மாட்டிக்கொண்டால் இப்படி பிணத்தை சாப்பிடுவார்களா? நிச்சயமாக மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

Comments