முறை தெரியாத விக்கிரமாதித்யன் கதை
விக்கிரமாதித்யன் பராக்கிரமம் நிறந்த
வீரமுள்ள மன்னன். அவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யும் வரம் கிடைத்தது. ஆனால் அவன் தம்பி ஆன பட்டி க்கு இரண்டாயிரம் ஆண்டுகள்
வயது. இதனால் தம்பியை பிரியாத விக்கிரமாதித்யன் காட்டில் ஆறு மாதம் நாட்டில் ஆறு
மாதம் என்று கழித்தான். ஒரு முறை காட்டில்
இருக்கையில் ஒரு மந்திரவாதி அவனைப்பார்த்து இக்காட்டில் ஒரு முருங்கை மரத்தில் ஒரு
வேதாளம் தலை கீழாக தொங்குகிறது. அதனை பிடித்து எனக்கு கொண்டுவந்தால் உனக்கு அளவிலா
இன்பங்களையும் சொத்துக்களையும் தருவாள் காளி மாதா என்று சொன்னான்.
அந்த மந்திரவாதிக்கு உதவ விக்கிரமாதித்யன்
அந்த வேதாளத்தை பிடித்துக் கொண்டுவரும்போது அந்த வேதாளம் அவனுக்கு கதைகள்
சொல்லும். அப்படி கதை சொல்லி அதன் விடையை அவனிடம் கேட்கும். பதில் தெரிந்து
சொல்லாவிடில் அவன் தலை சுக்கு நூறு ஆக உடைந்து போகும் என்றும் கூறும். மௌனம்
காக்கும் விக்கிரமாதித்யன் விடை தெரிந்தால் அதை சொல்ல வேதாளம் திரும்பவும்
மரத்தில் ஏறிக்கொள்ளும். இப்படி 23 தடவை வேதாளத்தை படிப்பதும், கதை சொல்வதும், விக்கிரமாதித்யன்
விடை சொல்வதும் வேதாளம் திரும்பி போவதுமாக நடந்தேரியது.
24 ஆவது கதை சொல்ல தொடங்கியது வேதாளம்.
தெற்கே ஒரு சிறு நாட்டில் தர்மன் என்ற
மன்ன்ன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனவி பெயர் சந்திராவதி. அவளுக்கு லாவண்யவதி
என்ற பெண் குழந்தை பிறந்தது.
அந்த பெண் பருவத்திற்கு
வந்ததும் அரசனின் உறவினர்கள் அவனை விரட்டிவிட்டு நாட்டை பிடித்துகொண்டனர். ஏரளமான
நகை, பணம் இவற்றை எடுத்துக்கொண்டு அரசன் தன் மனைவி, மகளுடன் காட்டிற்கு போய்
விட்டான். போகும் வழியில் சில காட்டு மனிதர்கள் அவனுடன் சண்டை செய்து அவனை கொன்று
விட்டனர். அரசன் இதற்கு முன்பே தன் மனைவியையும், மகளையும் காட்டின் உள்ளே அனுப்பி
விட்டான்.இப்படி தனித்து விடப்பட்ட அந்த பெண்கள் வருந்தி அழுது கொண்டிருந்தனர்.
இந்த சமத்தில் அண்டை நாட்டு
மன்னன் சண்ட சிம்மன் தன் மகனுடன் காட்டிற்கு வேட்டையாட வந்தான். வழியில் இரண்டு
பெண்களின் கால் சுவடை கண்ட அரசன் தன் மகனிடம் “இந்த கால் சுவடுகள் மங்கல குறிகளை
காண்பிக்கின்றன. ஆகையால் இவர்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்களாக தோன்றுகிறது.
ஆகையால் இவர்களில் ஒருவரை உன் மனைவியாக தேர்ந்து எடுத்துக்கொள்” என்றான்.
மகனோ “சிறிய காலடி சுவடுகள்
உடையவள் இள மங்கையாக இருக்கவேண்டும். ஆகையால் அவளை நான் திருமணம் செய்கிறேன்.
பெரிய கால் சுவடுகள் உள்ளவள் வயதான பெண் ஆக இருக்க வேண்டும் ஆகையால் மனைவி இல்லாத
நீங்கள் அந்த பெண்னை திருமணம் செய்து கொள்ளலாம்” என்றான்.
இருவரும் இதற்கு ஏற்ப சபதம்
செய்து கொண்டு அந்த பெண்களை தேடி சென்றனர். காட்டினுள் அழுது கொண்டிருந்த பெண்களை
கண்டு அவர்களை இருவரும் தேற்றி தங்கள் அரண்மனைக்கு அழைத்து சென்றனர். அவர்கள்
இருவரையும் அரசனும் மகனும் திருமணம் செய்து கொண்டனர். பெரிய சுவடுகள் உடைய மகளை
தந்தையும் சிறிய சுவடுகள் உடைய தாயை
மகனும் திருமணம் செய்து கொண்டனர். இதன் படி தாய் மகளின் மருமகள் ஆனாள்.
மகள் தாயின் மாமியார் ஆகிறாள். அப்பா மகனின் மருமகன் ஆகிறார். மகன் தந்தையின்
மாமனார் ஆகிறான். இவர்களின் பிள்ளைகள் எந்த முறையில் தங்களை அழைத்து கொள்வர் என
வேதாளம் கேட்டது.
இதற்கு பதில் சொல்ல
முடியாமல் விக்கிரமாதித்யன் மொனமாக வேதாளத்தை சுமந்து சென்றான்.
இப்போது வேதாளம் தான் ஒரு சாபததால் வேதாளமாக திரிவதாகவும் தன்னை அடைய மந்திரவாதி விக்கிரமாதித்தனை அனுப்பி இருப்பதாகவும் அந்த மந்திரவாதையை கொல்ல வழி சொல்லி கொடுக்க விக்கிரமாதித்தன் அந்த மந்திரவாதையை கொன்று நாட்டிற்கு வேதாளத் உடன் திரும்பினான்.
Comments
Post a Comment