கருப்பு நிறம்
பலருக்கும் இந்த கருப்பு வண்ணம் பிடிக்காது. அதுவும் இந்த நிறத்தில்
பெண்ணோ அல்லது ஆணோ இருந்தால் நிச்சயமாக பிடிக்காது. அதுவும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல வெள்ளை
அல்லது சிவப்பு பெண்ணை தேடித்தான் மணம் செய்வார்கள். பேப்பரில் வரும் திருமண
விளம்பரங்களைப் பாருங்களேன். சிகப்பு அல்லது வெள்ளைப் பெண்ணைத்தான் எல்லோரும்
தேடுவார்கள்.
முஸ்லீம் பெண்கள் கருப்பு உடை அணிவார்கள். இந்த வழக்கம் அரபு நாட்டில் இருந்து வந்தது. கருப்பு நிறம் சூட்டை உட்கிரகித்து கொள்ளும். வெள்ளை நிறம் சூட்டை வெளி தள்ளிவிடும். REFLECT.
முஸ்லீம் பெண்கள் கருப்பு உடை அணிவார்கள். இந்த வழக்கம் அரபு நாட்டில் இருந்து வந்தது. கருப்பு நிறம் சூட்டை உட்கிரகித்து கொள்ளும். வெள்ளை நிறம் சூட்டை வெளி தள்ளிவிடும். REFLECT.
ஏன் சிலர் கருப்பாக இருக்கிறார்கள். சூரியனின் “அல்டிரா
வயலட்” கதிர்கள் நம் மேல்
விழும்போது, அதன் கதிர்களினால் நமது தோலில் “கான்சர்” வராமல் இருக்க இயற்கையாகவே “மெலனின்” என்ற ஒரு கருப்பு
நிறத்தை நம் உடலின் தோலில் சேர்க்கப்படுகிறது. இதனால்
தான் நமது உடலில் வெயில் படும் இடங்கள் கருத்தும் உடையினால் மூடப்பட்ட இடங்கள்
கொஞ்சம் வெளுத்தும் இருக்கின்றது. ஆகையால் கருப்பு என்பது நமக்கு நன்மை செய்யும்
நிறமாகிறது. தவிர கண்ணில் ‘ரெட்டினா” வின் பின்புறம்
இருக்கும் மெலனின் கண்ணின் பார்வையை கூர்மையாக்கிறது. மெலனின் இல்லாமல் நமக்கு
சரியாக பார்க்க முடியாது.
நமது எல்லோருடைய முன்னோர்கள் (வெள்ளைக்காரர்கள் உட்பட)
எல்லோரும் ஆஃப்ரிகா கண்டத்திலிருந்து தான் வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதலில்
மிகவும் கருப்பாக தான் நாம் எல்லோரும் இருந்தோம். பின்னர் ஒவ்வொருவரும் கூட்டம்
கூட்டமாக மற்ற கண்டங்களுக்கு போய் தங்கி வாழ ஆரம்பித்தார்கள். அந்த அந்த நாடுகளின்
தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அவர்கள் கருப்பாகவும், கோதுமை நிறமாகவும், வெள்ளையாகவும், சிகப்பாகவும் மாறிப்போனார்கள்.
மிகுந்த குளிர் நாடுகளுக்கு போனவர்கள் வெயில் இல்லாததாலும் உடம்பில் துணியால்
அல்லது விலங்குகளின் தோலால் மூடியதால் மிகவும் வெளுத்தும் சிவந்தும் போனார்கள். இப்படி வெளுத்தும் சிவந்தும் இருப்பவர்கள் பலருக்கு வெய்யிலில் அதிக நேரம் இருக்க முடியாது. தவிர இவர்கள் பலருக்கும் தொலில் சுருக்கங்கள், மற்ற தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்புக்கள் அதிகம் ஏனென்றால் வெய்யில் அவர்கள் மேல் படாத நாடுலகளில் வசிப்பதால். இதனாலேயே பலர் வெய்யில் குளியல் நடத்தி கருப்பாக (ஆங்கிலத்தில் TA என்று சொல்வார்கள்) முயற்சிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை கடற் கரைகளில் காணலாம்.
அப்படி இருந்தும் இந்த ‘கலர்’ அல்லது நிறம் நம் எல்லோரையும் பாடாய் படுத்துகிறது.
கருப்பாக இருப்பவர்களை மற்றவர்கள் துச்சமாக பார்க்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால்
கருப்பு மிக நல்ல நிறம். ஆங்கிலத்தில் சொன்னால் நல்ல “டெக்ச்சர்” (texture) உள்ளது. நல்ல மிளிர் (ஷைனிங்) உள்ளது. அழகாக மிளிருகின்றது. அவர்கள்
வயதானாலும் இளமையாக தோன்றுகிறார்கள். இது தான் 'மெலனின்' ரகசியம்.
நம் கடவுள் ஆன கிருஷ்ணன் நல்ல கருப்பு
நிறம் கொண்டவர். கிருஷ்ணன் என்றாலே சமஸ்கிருதத்தில் கருப்பு என்றுபொருள். ராமன் நல்ல கருப்பன். ஆனால் இந்த இருவரும் மிக
அழகு படைத்தவர்கள் என மஹா பாரதம், ராமாயணம் கூறுகிறது. ராமனின் தோளைக்கண்ட சீதை "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று அவன் தோளை க்கண்டு மயங்கி அதனையே பார்த்தாளாம்.
மஹா பாரதத்தில் ‘கிருஷ்ணை’ என்ற பாத்திரம்
வரும். மிக அழகான அந்த பாத்திரம் நல்ல கருப்பு. கிருஷ்ணை தான் பாஞ்சாலி அல்லது
திரவ்பதி, பாண்டவர்கள் மனைவி. உலக அழகி கிளியோபாட்ரா கூட ஒரு கருத்த பெண் தான்.
இப்படி ஒரு காலத்தில் அழகானவர்கள்
கருப்பர்களாக இருந்தது. காலப்போக்கில் மாறி கருப்பர்கள் அழகற்றவர்கள் என்றாகி
விட்டது. இதற்காகவே பல தமிழ் படங்கள் எடுக்கப்பட்டன. ஒரு படத்தில் விஜயகுமாரி பாத்திரம் கருப்பாக இருக்கிறாள் என்று அவள் மாமனார் அவளை வீட்டிலேயே வேலைக்காரி போல் வைத்திருப்பதாக ஒரு காட்சி வரும். அவள் " கண்ணா கருமை நிறக்கண்ணா" என்று பாடுவதாக காட்சி அமைத்திருப்பார்கள். அது ஒரு நல்ல பாட்டு. நானும் ஒரு பெண் என்ற படம் அது. விஜயகுமாரி அற்புதமாக நடித்து இருப்பார்.
எங்கள் வீட்டில் என் பெற்றோர்கள், சகோதரகளும்
சகோதரியும் நல்ல வெண்மையாக இருப்பார்கள். ஆனால் நான் கொஞ்சம் கருப்பு அல்லது
கோதுமை நிறம். இதனால் என்னை வீட்டில் வேலைக்காரியிடம் ‘தவிட்டுக்கு’ வாங்கியதாக கேலி
பேசுவார்கள். இதனாலேயே எனக்கு வெள்ளையாக இருப்பவர்களை கண்டால் பயங்கர கோபம் வரும்
இவ்வளவுக்கும் நான் கருப்பு கிடையாது ஆனால் அவர்களை பார்க்கும் போது நான் கருப்பு. இந்த கிண்டல் கேலி அதிகமாக போக நான் தனிமை படுத்தப்பட்டேன். என் தந்தையார் என்னை 'கருப்பன்', குட்டி சனியன் என்றெல்லாம் அழைப்பார். எனக்கு குறும்பு அதிகம் என்பதால் இந்த பெயர்கள். என் அம்மாவும் இந்த கேலிகளில் சேர்ந்து கொள்வார். இதனால் ஒரு நாள் கடுப்பாகி நான் அந்த வேலைக்காரியுடன் என் துணிமணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். இதன் பின் தான் அந்த கிண்டல் பேச்சுக்கள் நின்றன.
இதனாலேயே நான் ஒரு பயங்கர கருப்பு பெண்னை
மணந்து கொண்டேன். அனால் அவள் எப்போது சண்டை வந்தாலும் “நான் கருப்பாக இருப்பதால் என்னை கண்டால் உனக்கு
பிடிக்க வில்லை” என்று அழுது ஆர்ப்பாடம் பண்ணுவாள். நிலமையை பாருங்களேன். அதைத்தவைர அவளுக்கு தான் மிக கருப்பாக இருப்பதைப் பற்றிய எந்த குற்ற உணர்வும் இல்லை. எனக்குத்தான் இவ்வளவு கருப்பிஉடன் வெளியே போக கூச்சமாக இருந்தது.
Comments
Post a Comment