சிபி சக்கரவர்த்தி.
சிபிச் சக்கரவர்த்தி
முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டில் சிபி சக்கரவர்த்தி என்ற அரசர்
ஆண்டுவந்தார். (இவர் தான் சோழ மன்னர்களின்
முன்னோடி என்றும் கூறுவர்.) இவர் நீதி, நெறியோடு தவறு இழைக்காமல் நெறிமுறையோடு ஆண்டு வந்தார். மக்களெல்லாம் இவரது
ஆட்சியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். கொடையில் சிறந்த சிபி தன்னை
வந்தடைந்தவர்களுக்கெல்லாம் செல்வங்களையெல்லாம் வாறி வாறி வழங்கினார்.
இவருடைய நேர்மையான, குற்றங்கள் அற்ற
ஆட்சியை கண்ட தர்ம தேவதை அவருடைய இரக்க சிந்தனையும் கொடைத் தன்மையையும்
சோதித்துப் பார்க்க எண்ணியது.
ஒரு நாள் சிபி தன் மாளிகையின் மாடத்தில் அமர்ந்த்திருக்கும் போது ஒரு அழகிய
புறா பறந்து வந்து அவர் மடியில் விழுந்தது. காயம் பட்டு குற்றுயிரும் கொலை
உயிருமாக இருந்த அந்த புறா சிபியைப்பார்த்து பேச தொடங்கியது. (பறவை பேசுமா என்று
கேட்க்கக்கூடாது. அந்த காலங்களில் நீதி வழுவாத அரசர்கள் இருந்த காலங்களில் எல்லா
உயிர்களும் பேசும்.)
“மன்னா என்னை காப்பாற்றுவீர். என்னை ஒரு பருந்து துரத்தி வருகிறது. என்னை
மிகவும் காயப்படுத்திவிட்டது. அது என்னை கொல்லாமல் விடாது. ஆகவே உன்னை சரணடந்தேன்.
என் உயிர் உன்னது,” என்றது.
அப்போது அங்கு பறந்து வந்த பருந்து அரசனின் இருக்கை அருகில்
அமர்ந்து புறாவை கொத்தி இழுத்தது.
புறா ஹீனமான் குரலில் முனகியது. சிபி மெதுவாக பருந்தை தள்ளி
விட்டு விட்டு “பருந்தே இந்த புறா என்னை அடைக்கலம் கேட்டு வந்து விட்டது. இப்போது
இதனை காப்பது என் கடமை. ஆகையால் நீ கேட்கும் உணவினை நான் தருகிறேன் இதனை விட்டு
விடு” என்றார்.
அதற்கு பருந்து “அரசே இது என்ன அனியாயம். புறா என்பது என்
உணவு. நான் அதை வேட்டையாட எண்ணி துரத்தினேன். அது சட்ட பூர்வமாக என் உணவு.
ஆகையால் அதனை என்னிடம் ஒப்படைப்பது உமது கடமை” என்றது.
“வேறு உணவு நான் உனக்கு தருகிறேன் தஞ்சமடைந்த புறாவை நான்
தர மாட்டேன்” என்றார் அரசர்.
“சரி அப்படியானால் புறாவின் எடைக்கு சம்மான உன் சதையை நீ
எனக்கு தர வேண்டும்” என்றது பருந்து.
சிபியும் அதனை ஒத்துக் கொண்டு தன் சேவகர்களை அழைத்து ஒரு தராசு
கொண்டு வர செய்தார். பின் தன் தொடையில் இருந்து கொஞ்சம் சதையை வெட்டி தராசின் ஒரு
பக்கத்து தட்டில் வைத்து புறாவை மறு பக்க
தட்டில் வைத்தார். என்ன அதிசயம் தராசின்
தட்டு புறா இருந்த பக்கமே சாய்ந்து இருந்தது. இன்னும் கொஞ்சம் சதையை அறிந்து
தட்டில் வைத்தார். தட்டுக்கள் அப்படியே இருந்தன.
சிபியும் தன் உடலில் இருந்து சதையை அறுத்து அறுத்து போட
தட்டுக்களெல்லாம் அப்படியே இருந்தன. கடைசியில் சிபி தானே ஒரு பக்கத்தட்டில் ஏறி
அமர தட்டுக்கள் சம நிலைக்கு வந்தன.
சிபி மகிழ்ச்சியுடன் பருந்தைப்பார்த்து “இப்போது நீ என்னை
தின்று உன் பசி ஆற்றிக்கொள்ளலாம்” என்றார்.
பருந்து தன் உருவத்தை களைந்து தர்மதேவதையாக நின்றது. அது சிபியைப் பார்த்து “அரசே நான்
தான் தர்ம தேவதை. உன் இரக்க சிந்தனையும் கொடைத்தன்மையையும் சோதிக்கத் தான் இப்படி
வந்தோம்” என்றது.
புறாவும் தன் உண்மையான் உருவத்தை அடைந்தது. சிபி
அவர்களைப் பார்த்து வணங்கி நின்றார். தர்ம தேவதை அவருக்கு நீண்ட ஆயிளை அளித்து
விட்டு மறைந்த்து.
Comments
Post a Comment