கட்டபொம்மன் வசனம் பற்றிய விமர்சனம்
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தில் சிவாஜிகணேசன் ரொம்ப பிரமாதமாக ஒரு நீண்ட வசனம் பேசுவார். சக்தி கிருஷ்ணசாமி என்பவர் அந்த வசனங்களை எழுதியதாக ஞாபகம்.B.R.பந்துலு அந்த படத்தை டைரெக்ஷன் செய்தார்.அதன் தயாரிப்பாளரும் அவர் தான்.
நீர் தான் கட்ட பொம்மன் என்பவரோ?
நீர் தான் சாக்சன் துரை என்பவரோ. என்று போகும்.
"வரி, வட்டி, கிஸ்தி...
யாரை கேட்கிறாய் வரி ...
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கட்ட வேண்டும் வரி.
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே ...என்று ரொம்ப நேரம் பேசுவார்.
இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த சாக்சன் துரையும், கட்ட பொம்மு வும் நேரடியாக பேச மாட்டார்கள். துபாஷிகள் என்ற translators தான் இருவரிடமும் பேசி விஷயத்தை முடிப்பார்கள். இதைத் தவிர பிரிட்டீஷ்காரன் பொறுமையாக இருந்து இப்படி வசனம் பேசுவதை அனுமதிக்க மாட்டான்.தவிர பிரிட்டீஷ்காரனுக்கு தமிழ் தெரியாது. ஆகையால் Jaksan "oh you are kattabommu?" என்று கேட்டிருப்பார்.
கட்ட பொம்முவும் அப்போது தான் ஆந்திராவில் இருந்து வந்து குடியேறி இருப்பார். ஆகையால் அவருக்கு சரியாக தமிழ் பேசவே வராது. "மீரு ஜக்சன் துரை காரா?" என்று தான் கேட்டிருக்க வேண்டும்.
படத்திற்காக வசனங்களை எழுதி தள்ளி விட்டார் கிருஷ்ண சாமி. சிவாஜிக்கு மிக நீண்ட வசனங்கள் பேசுவதில் அலாதி ஆனந்தம் ஆகவே எழுதியதை பேசி விட்டார். அதை எல்லோரும் அற்புதம் என்று சொல்லி இன்னமும் பேசி வருகிறார்கள் என் பெண் மூன்று வயது இருக்கும் போது இந்த வசனத்தை மிக சரியாக தவறின்றி பேசுவாள்.
Comments
Post a Comment