ஜனார்த்தனம் பிள்ளை சார் ( எங்கள் தமிழ் ஆசிரியர்) சொன்ன கதை


.
ஜனார்த்தனம் பிள்ளை சார் திருவனந்தபுரம் மாடல் ஸ்கூளில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்தவர். முதலில் தமிழ் பண்டிட் என்ற பட்டத்துடன் ஆசிரியர் பணிக்கு வந்தவர் பின் தமிழ் MA  வரை தன் சொந்த முயர்ச்சியில் படித்தவர். பிறப்பால் மலையாளியான இவர் தமிழ் மேல் நீங்காத பற்று கொண்டவர்.

ஜனார்த்தனம் பிள்ளை சார்  ( எங்கள் தமிழ் ஆசிரியர்) சொன்ன கதை

ஒருவனுக்கு தீராத வயித்துவலி. அதன் காரணமாக அழுது கொண்டிருந்தான். அப்போது உலக மக்களுக்கு படி அளந்து கொண்டிருந்த பார்வதி, பரமேஸ்வரர் அது கண்டு இரங்கினர். அப்போது பார்வதி "ஸ்வாமி தங்கள் பக்தன் இப்படி கஷ்டப் படுவதை காண வருத்தமாக இருக்கிறது. ஆகையால் அவன் வயிற்று வலியை குணமாக்குங்கள்" என்றாள்.

சிவ பெருமானும் "சரி அப்படியே செய்வோம். அவன் அம்மா என்று அழுதால் நீ உதவி செய், அப்பா என்று அழுதால் நான் உதவி செய்கிறேன்" என்றார்.

ஆனால் அந்த வயித்து வலிக் காரன் "அய்யோ வயித்த வலிக்குது, அய்யோ வயித்த வலிக்குது என்று தான் அலறினான்.

அய்யோ என்பது எமதர்மன் தாயார் பெயர். இப்படி தன் தாயாரை ஒருத்தன் அழைக்கிறான் என்று சந்தோஷப்பட்டு எமதர்மன் வந்து வயிற்று வலிக்காரனை தன்னுடன் எம லோகத்துக்கு அழைத்துப் போனான்.

Comments