பழம் பொரி அல்லது ஏத்தம் பழ அப்பம் (கேரளா ஸ்பெஷல்)
நேந்தரன் பழம் ( ஏத்தன் பழம்)
நேந்திரன் பழத்தை எங்கள்
திருவனந்தபுரத்தில் ஏத்தன் பழம் என்று சொல்வார்கள். இந்த பழம் ரொம்ப கட்டியாக
இருக்கும். ரொம்ப பழுத்தால் தான் தோல் கருத்து அழுகியது போல் இருக்கும். அப்போது
தான் உள்ளே கனிந்து இருக்கும்.
இதை வேகவைத்து (புழுங்கி) அல்லது சுட்டு
சாப்பிடலாம். ரொம்ப அருமையாக இருக்கும். புட்டு சாப்பிடும்போது சர்க்கரை போட்டு
பிசைந்தும் சாப்பிடலாம்.
ஏத்தன் பழம் அப்பம் அங்கு மிகவும்
ஃபேமஸ். இதை வட கேரளத்தில் “பழம் பொரி” என்பார்கள்.
ஏத்தன் பழ அப்பம் செய்முறை.
ஒரு பெரிய பழுத்த ஏத்தன் பழம்
நீளவாட்டில் நறுக்கியது. வேண்டுமான அளவில், thickness இல் நீள வாக்கில் அல்லது குறுக்கு வாக்கில் நறுக்கிக் கொள்ளலாம்.
ஒரு கப் மைதா மாவு தண்ணீரில் பஜ்ஜி பதத்தில் கலக்கி கொள்ளவும்.
சோடா உப்பு அல்லது பேக்கிங் பவுடர் ஒரு
சிட்டிகை சேர்க்கவும்.
சர்க்கரை (sugar).ஒரு கப் இந்த மாவில் சேர்த்து கலக்கவும். அவர் அவருக்கு
வேண்டிய அளவில் சர்க்கரை சேர்க்கலாம். ஆனால் பழத்தின் இனிப்பு இருப்பதால் மாவில்
அதிகம் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ( அங்கு
தேங்காய் எண்ணை உபயோகிப்பார்கள். எந்த எண்னையானாலும் உபயோகிக்கலாம்) ஊற்றி சூடான உடன் அறிந்து வைத்திருக்கும் பழத்தின் துண்டுகளை
ஒவொன்றாக மாவில் முக்கி பஜ்ஜி போடுவதைப் போல் சுட்டு எடுக்க வேண்டும். அற்புதமான ஏத்தன் வாழக்கா அப்பம் தயார்.
Comments
Post a Comment