எங்கள் தமிழ் வாத்தியார் ஜனார்த்தனம் பிள்ளை சார்.
ஜனார்த்தனம் பிள்ளை சார்.
நான் திருவனந்தபுரத்தில் மாடல் ஸ்கூளில் படிக்கும்போது எங்களுக்கு 10, 11 ஆம் வகுப்புகளில் தமிழ்
சொல்லித்தந்தது ஜனார்தனன் பிள்ளை என்ற தமிழ் பண்டிட். (நான் கேரளாவிலே தமிழ்
படித்தேன் ரெண்டாவது மொழியாக.) பல இடங்களில் கம்ப ராமாயண சொற்பொழிவுகள்
நிகழ்த்துவார். அவர் ஹிந்தியும் படித்திருந்தார்.
எங்கள் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் குறைவு. ஆகையால் ஒரு தமிழ் வகுப்பு தான்
எங்கள் மாடல் ஸ்கூளில் இருந்தது. ஐந்து மலயாளம் வகுப்புகளும் ஒரு இங்கிலீஷ்
வகுப்பும் இருந்தது. தமிழ் வகுப்புகள் நடத்தும் வாத்தியார்கள் பொதுவாக கன்யாகுமாரி
காரர்களாகவோ திருவனந்தபுரம் தமிழ் பிராமணர்களாகவோ தான் இருப்பார்கள். தமிழ்
பிராமணர்களாக திருவனன்ந்தபுரத்தை சேந்தவர்களாகவோ இல்லை இவர்கள் பொதுவாக திருநெல்வேலியை
சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஜனார்த்தனம் பிள்ளை சார் தமிழ் பண்டிட். தமிழ் புலமை பெற்றவர்.
அத்துடன் கம்ப ராமாயண சொற்பொழிவுகள் ஆற்றுவார். திருவனந்தபுரத்தில் இருந்து மத
தொண்டாற்றிய அபேதானந்த சாமியிடன் பக்தி கொண்டு அவரின் சீடராக பல இடங்களுக்கு
சொற்பொழிவிற்காக போவதுண்டு. இத்துடன் அவர் தமிழ் M.A , M.Ed படித்து ஹெட் மாஸ்டராகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.
எங்களுக்கு 10ஆம் வகுப்பிற்கு அவர் தான் கிளாஸ் டீச்சர். நன்றாக
தெளிவாக தமிழ், ஹிந்தி, சோஷியல் ஸ்டடீஸ் கிளாஸ்களை அவர் தான் நடத்துவார்.
இவர் தன் வகுப்பில் தன்னிடம் படிக்கும் பையன்களை டிவிஷனுக்கு அழைப்பார். என்னையும் அழைத்தார். எனக்கு
போக விருப்பம் இல்லை. ஆனால் அழைத்து பின் போகாவிடில் ரொம்ப தர்ம சங்கடமாக இருக்கும்.
ஆகையால் நான் சரி என்று அவர் வீட்டிற்கு டிவிஷன் படிக்க போனேன். அங்கு கிட்டதட்ட
வகுப்புக்கள் போலவே 10, 15 பேர் படிப்போம். கூட ஆங்கில, மாத்ஸ், சயன்ஸ் சொல்லித்தர
வேறொரு வாத்தியாரையும் சேர்த்துக்கொள்வார்.
இந்த டிவிஷன் 11ஆம் வகுப்பிலும் தொடர்ந்தது.
ஒரு நாள் எங்களுக்கு வகுப்பு நடத்தும்போது திடீரென்று 'தோசைக்கு எப்படி தோசை என்று பெயர்
வந்தது என்று கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
தோசைக்கு இரெண்டு பக்கம் உள்ளது. முதலில் வார்க்கும் போது
"ஸ்ஸ்ஸ்ஸ்" என்ற ஓசை. திருப்பிப் போடும்போது 'இன்னொரு "ஸ்ஸ்ஸ்ஸ்" ஓசை.
ஆக மொத்தம் இரெண்டு ஓசை. ஹிந்தியில் "தோ" (ரெண்டு) ஓசை. ஆகையால் தோசை
என்றார்.
ரொம்ப கஷ்டப்பட்டு சிரித்தோம்.
இன்னொருமுறை அவர்
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உவப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து
புறம் புறம் திரிந்த சிவ பெருமானே
யான் உனை தொடர்ந்து சிக்கன பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே?”
என்னும் தேவாரப்பாடலை விவரித்துக்கொண்டிருந்தார்.
அப்பாடலில் கடைசி அடிகளில் "சிக்கென பிடித்தேன் எங்கு
எழுந்தருளுவது இனியே" என்று முடியும்.
சார் எங்களிடம் "பாருங்கடா 'அப்பர் பெருமான் சிக்கனை
பிடித்தார்" என்றார்.
ஜனார்த்தனன் பிள்ளை தமிழர் அல்ல. நாகர்கோவில் நாயர், மலயாளத்தை தாய் மொழியாக கொண்ட மலையாளி. வீட்டில் மலயாளம் தான் பேசுவார்கள். ஆனாலும்
தமிழ் மேல் பயங்கர பற்று,பாசம் உள்ளவர்.
எல்லோரையும் தமிழ் BA படிக்க சொல்வார். நான்
இஞ்சினீரிங் படிக்க போனதால் என்னிடம் ரொம்ப நாள் பேசவே இல்லை.
Comments
Post a Comment