வளையாபதி.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி

வளையாபாதி ஒரு முற்றுபெறாத கதை. இதை யார் எழுதியது என்று தெரியவில்லை. இதற்கு ஏன் காப்பியங்களில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்தது என்று தெரியவில்லை. மிக சாதாரண கதையான இது கவிதை நடையில் எழுத்தப்பட்டதால் இந்த அங்கீகாரம் கிடத்ததா என தெரியவில்லை.

ஒரு வணிகனான நவகோடி நாராயணன் என்பவன் மிக்க செல்வம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். தன் செல்வத்தால் மக்களுக்கும் பல நன்மைகள் செய்து வந்தான். நல்ல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து நல் வாழ்க்கை வாழும் நாராயணன் ஒரு அழகிய பெண்ணை ஒரு நாள் சந்திக்கிறான். அவள் அழகில் மயங்கி அவள் வேறு ஜாதியில் பிறந்திருந்தாலும் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான்.

இந்த திருமணத்தை அவன் உற்றார் உறவினர்கள் கடும் எதிர்ப்பு கொடுப்பதால் முதலில் அதை எதிர்த்து வந்த நாராயணன் பின்னர் அவர்களின் எதிர்ப்பை தாங்க முடியாமல் அந்த பெண்ணை தள்ளி வைத்துவிடுகிறான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஜாதியை சுட்டிக்காட்டி தன்னை  விலக்கி வைத்த கணவனை பழி வாங்க நினைக்கிறாள்.

ஒரு நாள் அவள் தங்கிய காளிகோவிலில் படுத்து இருக்கும்போது அவளுக்கு திடீரென காளி நேரில் வருகிறாள். காளியை வணங்கி காளியை வேண்டி தனக்கு வாழ்வளித்து தன் கணவனுடன் சேர்த்து வைக்க வேண்டுகிறாள். காளியும் அப்படியே வரம் தந்து மறைகிறாள்.

சில காலத்தில் சூலுற்றிருக்கும் அவள் ஒரு அழகிய மகனை பெற்றெடுக்கிறாள். அவனை நன்கு கல்வி கற்றுதேர்ச்சிபெற் வைக்கிறாள். வளர்ந்த மகன் தன் தந்தையை பற்றி கேட்க அவளும் தன் முழுக்கதையை சொல்லி அவனிடம் தன் உரிமையை நிலை நாட்ட கோறிக்கை வைக்கிறாள்.

வளர்ந்த மகன் தன் உரிமை நிலை நாட்ட எல்ல வணிகர்களையும் அழைத்து அவர்கள் முன் தன் வழக்கை வைத்து வாதாடுகிறான். காளி கூட அந்த கூட்டத்தில் வந்து அவன் கூற்றை அங்கீகரித்து தீர்ப்பு கூறுகிறாள். அவன் கூறும் வாதங்களை ஏற்றுக்கொண்ட வணிகர் கூட்டம் அவன் வழக்கின் சாராமசத்தை உண்மையையும் புரிந்து கொண்டு அவனை  நவகோடி நாராயணன் தன் மகனாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று நீதிவழங்குகிறார்கள்.

நாவகோடி நாராயணனும் அந்த பெண்னை தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தனை நாள் வறுமையிலும் தனிமையிலும் வாடி வந்த அந்த பெண்ணும் தன் கணவனுடன், மகனுடனும் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறாள் என்று கதை முடிவடைகிறது.

Comments