சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்,  ஐஞ்சிறு காப்பியங்கள் என பத்து காப்பியங்கள் உள்ளன.

ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
ஜீவக சிந்தாமணி


ஐஞ்சிறுகாப்பியங்கள்

உதயணகுமார காவியம்  ஜைன மத நூல்.
நாககுமார காவியம்
யசோதர காவியம்
 நீலகேசி
சூளாமணி 

இவற்றில் ஐம்பெரும் காப்பியங்கள் நான் படித்துள்ளேன். என் தந்தையார் என் சிறு வயதில் அப்போதய லிஃப்கோ என்ற பதிப்பாளர்கள் இந்த காவியங்களை சிறு புத்தகங்களாக நாலணா என்ற விலையில் பதிப்பித்திருந்தார்கள். இவற்றுடன் பஞ்சதந்திரம் என்ற பெரிய புத்தகத்தையும் எனக்கு வாங்கி தந்திருந்தார் என் தந்தை.

சிலப்பதிகாரம் என்பது கண்ணகி, கோவலன் கதை. கண்ணகி என்ற கருத்த வணிக குலத்து பெண்ணிற்கு கோவலன் என்ற வணிகனை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் இவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும் கொடுக்க இருவரும் இன்பமாக வாழ்கை நடத்தி வந்தனர். இப்படி இருக்கும்போது வணிகத்தில் இனியும் செல்வம் ஈட்ட கோவலன்  முயற்சிக்கும் போது ஒரு சமயம்  மாதவி என்னும் நடன பெண்ணின் நடன நிகழ்ச்சியை காண நேர்கிறது. அப்பெண்ணின் அழகில் மயங்கும் கோவலன் கண்ணகியை மறந்து மாதவியிடமே இருந்து விடுகிறான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு மணிமேகலை என பெயரிடுகிறார்கள் இருவரும்.

பிரிதொரு சமயம் ஏதோ காரணங்களால் கோவலன் மாதவியை விட்டு பிரிகிறான். அவன் செல்வங்கள் எல்லவற்றையும் இழந்து கண்னகியை தேடி வருகிறான்.

வந்த கோவலன் கண்ணகியை பார்க்க தைரியம் இல்லாமல் கீழ் நோக்கி தரையை பார்த்து அமர்ந்திருக்கிறான். அவன் கண்கள் கண்ணகியின் காலை நோக்குகின்றன.

 கண்ணகியிடம் அப்போது கால் சிலம்பைத் தவிர வேறு ஏதும் இல்லை.அப்போது கண்ணகி அவனிடம் "இந்த சிலம்பும் வேண்டுமா" என கேட்கிறாள்.

வெட்கப்படும் கோவலன் அவளிடம் 'நாம் மதுரை நகர் சென்று வேறு  வாணிகம் செய்து பிழைக்கலாம்" என்கிறான்.

இருவரும் மதுரை நோக்கி நடை பயணமாக போகிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்னும் பெண் சாமியாரும் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறாள்.

மதுரையில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கிய கோவலன் கண்ணகியின் கால் சிலம்பை வாங்கிக்கொண்டு அதை விற்க போகிறான.

அதை ஒரு பொற்கொல்லனிடம் காட்ட, அந்த பொற்கொல்லன் அரசியின் கால் சிலம்பை திருடி வைத்துள்ள நிலையில் கோவலனை அந்த சிலம்பை திருடியவன் என்று அரசனிடம் காட்டிக் கொடுக்கிறான். காவலர்கள் வந்து கோவலனை கைது செய்து கொண்டு போகிறார்கள்.

காவலர்கள் அரசன் பாண்டியன் நெடும்செழியனிடம் சென்று அரசியின் சிலம்பை திருடிய  கள்வனை பிடித்து விட்டதாக சொல்ல, அரசனும் "அந்த கள்வனை கொன்று வருக" என்று கட்டளையிட காவலர்களும் சென்று கோவலனை கொன்று விடுகிறார்கள். ( இங்கு சிலர் அவன் கொன்று வருக என்று சொல்லவில்லை கொண்டு வருக என்று சொன்னதாக நினைக்கிறார்கள்.)

இதனை கேள்விப்பட்ட கண்ணகி தலைவிரி கோலத்தில் அரசன் கொலுவீற்றிருக்கும் அரசவைக்கு வந்து அவனிடம் தன் சிலம்பில் மாணிக்க கல் இருக்கும் என்றும் அரசியின் சிலம்பில் முத்து பரல்கள் தான் இருக்கும் என்று கூறி தன் கையில் இருந்த மற்றோரு சிலம்பை தரையில் அடிக்க அதிலிருந்து மாணிக்க கற்கள் சிதறின.

தன் குற்றத்தை உணர்ந்த அரசன் "நானே கள்வன்"  என்று கூறி அப்படியே அரியணையில் மடிந்து விழுந்தான்.  அருகில் அமர்ந்து  இருந்த அரசி கோப்பெருந்தேவியும் அப்படியே அங்கேயே மரணமடைந்தாள்.

கோபமுற்ற கண்ணகி தன் இடது முலையை திருகி எடுத்து அதை மதுரை நகரை நோக்கி எறிந்து "வயோதியர், பார்ப்பனர், பத்தினி பெண்டிர், குழந்தைகள் இவர்களை தவிர அனைவரையும் கொல்க" என்று கூறி தன் முலையை பிய்த்து  எறிய  மதுரை நகர் தீக்கிறையாயிற்று.

கோபம் தீராத கண்ணகி அப்படியே நடந்து ஒரு மலை மேல் போய் நிற்க அவளை நோக்கி ஒரு ஆகாய விமானம் வந்து அவளை சொர்கத்திற்கு அழைத்து சென்றது. கற்புக்கரசி என அவளை புகழ்ந்த தேவர்கள் அவளை அழைக்க விமானத்தை அனுப்ப புஷ்பக விமானம் அவளை சொர்கத்துக்கு அழைத்துப் போயிற்று.

சேர அரசன் செங்குட்டுவன் தன் தம்பி இளங்கோவடிகளுடன் வேட்டைக்கு வந்தபோது காட்டு மனிதர்கள் இந்த சம்பவத்தை அவர்களிடம் சொலல இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரத்தை எழுதினார்.

சேரன் செங்குட்டுவன் பின்னர் இமயமலைக்கு சென்று கண்ணகிக்கு கோவில் அமைக்க கல் கொண்டுவரப்போனான். வழியில் அவனை தடுத்த கனக விஜயர்கள் என்ற அரசர்களை தோற்கடித்து அவர்கள் தலையிலேயே  கண்ணகியின் சிலை செய்யப்போகின்ற கற்களை சுமந்து கொண்டுவந்தானாம். பின் கண்ணகிக்கு கோவில் எழுப்பப் பட்டது




Comments

  1. நன்றாக எழுதி உள்ளீர்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் வாங்க நானும் பல முயற்சி எடுத்து தோல்வியுற்றேன்.

    ReplyDelete
  2. னன்றி அய்யா. சென்னையில் லிஃப்கொ வில் கேட்டீர்களா? எனக்கு த்ரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி அய்யா. எனக்கு தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment