குண்டலகேசியும் அதை தழுவிய சினிமா படமாகிய மந்திரி குமாரியும்.
குண்டலகேசி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி மிக
பழம்காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சோழ மன்னன் கரிகால சோழன் காலத்தில்
நடந்ததாக சொல்லபடுகிறது. கரிகால சோழன் தான் கல்லணையை கட்டியவன். இன்றும் கூட அந்த
அணை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
குண்டலம் என்பது காதில் அணியும் ஒரு அணி அல்லது ஆபரணம்.
சாதாரணமாக ஆண்கள் இதை அணிவார்கள். சிவ பெருமான் தன் காதில் குண்டலம்
அணிந்திருந்தார் என் படித்திருக்கிறோம். அப்படிப் பட்ட குண்டலம் சுருண்டு
வளைந்திருக்குமாம். குணடல கேசி அல்லது பத்திரை என்ற வணிகை பெண் அது போன்ற
சுருண்ட வளைந்த தலை முடி கொண்டவள் ஆகையால் அவளை குண்டலகேசி. என்றழைத்தார்கள். கேசம் என்றால் முடி என்று
வடமொழியில் பொருள்.
காவேரி பூம்பட்டினத்தில் வணிகமணி என்ற ஒரு வைர
வணிகரின் ஒரே ஆசை, அன்பு பெண்ணாக பத்திரை பிறந்து நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்து
பொலிவுடன் திகழ்ந்தாள். வணிகமணி அரசருக்கு வைரங்களை விற்பதில் நெருங்கி பழகி
நண்பராகினார். இதனுடன் வணிக நிமித்தம் பல நாடுகளுக்கு மற்ற பல வணிகர்களுடன்
சென்று பொருள் ஈட்டி வந்து சோழ நாட்டின் வருமானத்தை பெருக்குவதில் சமர்த்தராக
இருந்ததால் அரசர் அவருக்கு நல்ல மரியாதை அளித்து நண்பராக வைத்துக்கொண்டார்.
பத்திரை என்ற குண்டலகேசி வளர்ந்து அழகிய பெண்ணாகி
பூப்பெய்து விட்டாள். சரியான கணவர் கிடைக்க கவலை கொண்டார் தந்தையார். இப்படி
நாட்கள் செல்ல ஒரு நாள் தன் மாளிகை மாடத்தில்
தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடி மகிந்த குண்டலகேசி ஏதோ கூக்குரல் கேட்டு
கீழ் வீதியை நோக்க அங்கு ஒரு அழகிய வாலிபனை சேவகர்கள் இழுத்து செல்வதை காண்கிறாள்.
அந்த அழகிய வாலிபனும் அவளை நோக்க குண்டலகேசியின் மனம் அவளரியாமல் அந்த வாலிபனிடம்
போய் சேருகிறது.
ஒற்றர்களை அனுப்பி யார் அந்த வாலிபன் என்றும் எதனால்
அரசு சேவகர்கள் அவனை இழுத்து செல்கிறார்கள் என்றும் கேட்டரிந்து சொல்ல சொல்கிறாள்.
அவர்கள் சென்று அவனைப்பற்றி அறிந்து வருகிறார்கள். அவன் பெயர் காளன் என்றும் ஒரு
வணிகன் என்றும் கொலை கொள்ளைகளில் ஈடுபட்டதால் பிடிபட்டு அரசனால் சிரசேதம் செய்ய
கொண்டுபோகிறார்கள் என அறிகிறாள்.
குண்டலகேசி மனம் உடைந்து தன் தந்தையிடம் போய் அவனை தான்
விரும்புவதாகவும் சொல்லி அவனை விடுவிக்க கோறுகிறாள். தந்தையோ அவன் பெருங்குற்றம்
செய்தவன் என்றும் அவனை கொல்ல அரச சேவர்கள் கொண்டு போவதாகவும் சொல்லி இது தவறு அவன்
வேண்டாம் , மறந்து விடு என்கிறார்.
அவளோ பிடிவாதமாக அவனே தனக்கு வேண்டும் என்றும்
இல்லயென்றால் தானும் மரணமடைவதாகவும் கூறுகிறாள். மனம் கேட்க்காத வணிகமணி அரசனிடம்
போய் இறைஞ்சி அவனுடைய உயிர்பிச்சை கேட்கிறார். உதவி செய்வதாக வாக்கு கொடுத்துவிட்ட
மன்னனும் அவனை விடுதலை செய்கிறான்.
காளனை தன் மகளுக்கு தந்தை வணிகமணி மணம் செய்து கொடுக்கிறார்.
நல்ல மணவாழ்க்கை வாழும் காளன் மீண்டும் கொலை கொள்ளையில் நாட்டமடைந்து பழைய வழிக்கு
போய் விடுகிறான். இது குண்டல கேசிக்கு தெரியாது. ஒரு நாள இருவரும் அமர்ந்து ஊடல்
செய்யும் போது குண்டலகேசி அவனை “நீ களவன் தானே” என்று கூற சினம் கொள்ளும் காளன் சினத்தை வெளிக்கு
காண்பிக்காமல் அவளை ஒரு மலை உச்சிக்கு
உல்லாசமாக கழிக்க அழைத்து செல்கிறான். அங்கு சென்றபோது அவன் அவளிடம் “ நீ என்னை
அவமரியாதை செய்ததால் உன்னை இந்த மலை உச்சியில் இருந்து தள்ளி கொல்லப் போகிறேன்” என்கிறான்.
அதிர்ச்சி அடையும் குண்டலகேசி அவனிடம் தன்னை விடும்படி
இறைஞ்சுகிறாள்.வேடிக்கையாக தான் கூறியதை வினையாக கொள்ளாமல் மன்னிக்க வேண்டுகிறாள்.அவனோ அவளை மன்னிக்க விரும்பவில்லை. ஆகையால் குண்டலகேசி அவனிடம்
தான் இறக்குமுன் அவனை சுற்றி வந்து வணங்க விரும்புவதாக கூறுகிறாள். அதற்கு அவனும்
ஒத்துக்கொள்ள குண்டலகேசி அவனை மூன்று முறை சுற்றி வந்து கடைசி சுற்றில் அவன்
பார்க்காத சமயத்தில் அவனை அந்த மலை உச்சியில் இருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
பின்னர் அவள் ஜைன மதத்தில் சேர்ந்து தலை முடியை
மழித்து துறவரம் புகுந்தாள்.
இது தான் குண்டலகேசிகதை. இதனை கொஞ்சம் மாற்றி மாடர்ன்
தியேட்டர் காரர்கள் ‘மந்திரி குமாரி’ என்ற படம் தயாரித்தார்கள். அதில் M.G.ராமசந்திரன் கதானாயகனாக
நடித்தார். கதை வசனம் மு.கருணாநிதி எழுதினார். ராஜ குருவின் மகனாக கள்ளபார்ட்
நடராஜன் நடித்தார். இவர் தான் காளன். மந்திரி குமாரி தான் குண்டலகேசி பாத்திரம்.
ராஜகுமாரியை இரண்டாவதாக அடைய ராஜகுருவின் மகன் யெத்தனிக்கும்போது அவனை அவன் மனைவியான
மந்திரி குமாரி மலை உச்சியில் இருந்து தள்ளி கொல்கிறாள். அது T.R. ராஜகுமாரி என
நினைக்கிறேன். இந்தப்படம் மிக பெரும் வெற்றி அடைந்தது. இதன் பாடல்கள் மிக பிரசித்தம். "வாராய் நீ வாராய் போகுமிடம் வெஹு தூரமில்லை வாராய் " என்ற பாடல் தான் மிகவும் விரும்பப்பட்டது.
Comments
Post a Comment