பாண்டியர்களும் தமிழ் சங்கங்களும்



(கீழ்க்கண்டவைகள்  பல புத்தகங்களில் இருந்தும் திரட்டப்பட்டது)

 பாண்டியர்கள் மிக பழையகாலங்களில் இருந்தே தமிழ் மானிலங்களை ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் காலத்தில் தான் தமிழ் வளர்ச்சி அடைந்து பல்கி பெருகி மூன்று தமிழ் சங்களால் வளர்ச்சியுற்றது. ஒவ்வொரு முறை இந்த முதல், இரண்டாம் தமிழ் சங்கங்கள் அழிந்தாலும் மூன்றவது தமிழ் சங்கத்தை நிறுவி தமிழ் வளர்த்தார்கள். மூன்றாவது தமிழ் சங்கம் அவர்களின் கடேசி தலை நகரான மதுரையில் நிறுவப்பட்டது. பின்னர் வந்த களப்பிரர்களால் இந்த தமிழ் சங்கம் அழிக்கப்பட்டு தமிழும் மிகவும் இழிவான நிலைமைக்கு தள்ளப்பட்டது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிமுனைக்கு தெற்கே ஓர் அகன்ற நில பரப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதில் குமரிக்கோடு, பன்மலை முதலிய மலைகளும் பறுளி என்ற ஆறும் இருந்தது. பறுளி ஆற்றுக்கு தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும், பறுலளி-குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ்முன் பலை நாடு, ஏழ்பின் பாலை நாடு,ஏழ்குன்ற  நாடு, ஏழ்குண்காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு முதலான 49 நாடுகளும் குமரி ஆற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்து  குமரிகொல்லம் நாடுகளும் ஆக மொத்தம் ஐம்பத்து ரெண்டு நாடுகள் இருந்தன.

பறுளியாற்றின் கரையில் பாண்டியர்களின் முதல் தலை நகரான  “தென் மதுரை ( மஹா பாரத காவிய தலைவர்களான பாண்டு பரபினர் வடனாட்டில் வடமதுரை அமைத்திருந்ததால், இந்த தென்புல ஆற்றங்கரையில் அமைந்த நகருக்கு இந்த பெயர்.) அமைந்திருந்தது. அங்கு தான் முத்தமிழ்ச் சங்கத்தின் முதல் சங்கமான “தலைச் சங்கம்  தோன்றி தரணியெல்லாம் தமிழ் மணக்க செய்தது.

‘காய்சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ வரை  எண்பத்தொன்பது பாண்டியர்கள்  நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள்  தென் மதுரையில் வீற்றிருந்து தென் தமிழை வளர்த்தனர். அந்த முதல் தமிழ் சங்கத்தில் ஐனூற்றி நாற்பத்தொன்பது அறிஞ்ர் பெருமக்கள் உருப்பினராக இருந்தனர்.

பாடும் பெருமை சான்ற ஏழு பாண்டியர் உட்பட பாடிய புலவர் நாலாயிரத்து நானூறு நான்பத்தொம்பதின்மருள் தலைசிறந்த புலவர்களென “திரிபுரமெரித்த விரிசடை சிவனும், குன்றமெடுத்த குமரவேளும், நிதியின் கிழவன், அகத்தியன், தொல்காப்பியம், முது நாரைமுதுகுருகு, முறுவல், சயந்தம், குணனூல், செயிற்றியம், பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவினயம், நற்றத்தம், வாமனம், புறப்பொருள்,  பன்னிருபடலம், முதலான தமிழ் நூல்கள் உருவாகி என்றுமுள தமிழ்க்கன்னியின் திருமேனியில் சூட்டப்பட்டன.

இந்த பொற்கால தமிழ் நாட்டின் புகழ் வாய்ந்த தமிழ் மன்னன்  ‘நெடியோன் என்பான். இவன் “முன்னீர் விழவின் நெடியோன்  என்றும்  நன்னீர் பறுளியாற்றுக்கு உரியவன் என்றும் புகழ பெற்றான். இயல் தமிழ் இலக்கண நூலான ‘தொல்காப்பியம் இம்மன்னன் ஆட்சியில் அரெங்கேறியது. இவன் சய அல்லது யவ நாடென்னும் ‘சாவகத்தை வென்று. கலட்ல் நீர் அலம்புமிடத்தில் (பாறையொன்றில்)  தன் அடி பொறித்து முன்னீர் விழா ஆற்றின காரணத்தால் “வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற சிறப்பு பெயர் கொண்டான். இவனே பறுளியாற்றை பாசனத்திற்கு வெட்டுவித்தவன்.

தென் மதுரை கடல் கோளுக்கு இறையாகி அழிந்தது. ஆனால் தொல்காப்பியம் பிழைத்தது.

பாண்டிய பேரரசு மீண்டும் கபாடபுரத்தை தலை நகராக கொண்டு  உருவாகியது. பாண்டியர்கள் இடை சங்கத்தை தோற்றுவித்தனர். அச்சங்கம் ‘வெண்தேர்செழியன் முதல் ‘முடதிருமாரன் வரை ஐம்பத்தொன்பது பாண்டிய மன்னரின் ஆட்சியில் மூவாயிரத்து எழுனூறு ஆண்டுகள் சிறப்பாக இயங்கியது. ஐம்பத்தொன்பது அறிஞர் கூட்டம் அதன் உறுப்பினராக இருந்தனர். இவர்களில் ‘இருந்தையூர்க் கரும்கோழி, மோசி, வெள்ளூர் காப்பியன், சிறுபாண்டரங்கண், துவரைக்கோன், கீரந்தை ஆகியர் சிறப்பானவர்கள். இந்த இடை சங்கத்தில் “கலி, குருகு, வெண்டாலி, வியாழ மாலை, அகவல், மாபுராணம், இசை நுணுக்கம், பூத புரானம் ஆகிய நூல்கள் அரங்கேறின.

இக்காலத்தில் பெரும்புகழ் பெற்ற பாண்டிய மன்னன் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்போன். இவன் மிக பெரிய வீரன், பல அரசர்களை வென்றதாலும் ஆயிரம் வேள்விகள் செய்ததாலும் ‘பல்யகசாலை என்ற பட்டம் வென்றவன். இவனை

“பாணர் தாமரை மலயவும்  புலவர்
பூணுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அற்னோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னாவாகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்தினின் ஆர்வலர் முகத்தே

என்றெல்லாம் பின்னால் வந்த ‘நெட்டியார், காரிகிழார், நெடும்பல்லியத்தனார் ஆகிய புலவர்கள் பாடினர்.

காபாடபுரமும் அழிந்தது, கடல் கொண்டு போயிற்று.

இக்காலத்தய பாண்டிய மன்னன் “முட திருமாறன். எஞ்சிய தனது குடிகளை அழைத்துக்கொண்டு  வடக்கே சென்று “மணலூர் என்னும் சிறுனகரத்தை உருவாக்கி அங்கு அரசாண்டான். அங்கும் கடல் வந்து பயமுறுத்தவே அங்கிருந்து கிளம்பி  வகைக் கரையில் ஒரு அழகிய நகரை உருவாக்கினான். அது தான் ‘மதுரை மாநகராக அறியப்படுகிறது. கடை சங்கம் தோன்றியது இங்கு தான். இந்த பாண்டிய பேரரசு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள், நாற்பத்தொம்பது அரசர்களால் ஆளப்பட்டு “உக்கிர பெரு வழுதி என்ற பாண்டிய மன்னனுடன் முடிவுற்றது.

இந்த கடைசங்கத்தில் நானூற்று நற்பத்தொம்பது புலவர்கள் பங்கேற்று தமிழை வளர்த்தனர். இதில் “சிறு மேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், அளந்திருமாரன், மதுரையாசிரியர், நல்லந்துவனார், மருதனிளனாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியோர் இருந்து தமிழ் தொண்டாற்றினர்.

இம்மூன்றாம் தமிழ் சங்கத்தில் “நெடும்தொகை நானூறு, குறும்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறனானூறு, ஐங்குறு நானூறு, பதிற்றுப் பத்து, நூற்றம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிகை முதலிய தமிழ் பொக்கிஷங்கள் அரங்கேறின. திரு குறள் அரெங்கேறியதும் இக்காலத்தில் தான். இது வேறொரு “உக்கிரப் பெருவழுதியின் ஆட்சி காலத்தில் அரெங்கேறியது.

இமயத்தில் கயல்கொடி ஏற்றிய பாண்டியன் ஆரியப்படை கடந்த ‘நெடுஞ்செழியன் (கோவலன் மரணத்திற்கு காரணமானவன்), கண்ணகிக்கு விழா எடுப்பித்த சேரன் செங்குட்டுவனுடனும் இலங்கை கயவாகுவுடனும் கலந்து கொண்ட வெற்றிவேற் செழியனும், சேர சோழ படையெடுப்பை சிறுவயதிலேயே எதிர்த்து முறியடித்த ‘தலையலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் இந்த கடை சங்க காலத்தவரே.

இப்படி புகழோடுவாழ்ந்த வந்த பாண்டிய பேரரசு வடக்கில் இருந்து வந்த பண்படாத ஒரு முரட்டு இனமான களப்பிரர்களால் அடக்கப்பட்டு, அதன் கலை, நாகரீகம், வாணிபம், மொழி என எல்லாவற்றையும் சிதைக்கப்பட்டு விட்டது. இதே சமயம் பல்லவர்கள் தமிழ் நாட்டின் வடபகுதியில் ஆட்சியை பிடித்து வலிமை அடைந்தனர். பாண்டியர்களை போல புகழ் வாய்ந்த சோழர்களையும், சோழ நாட்டையும் அது கவளீகரம் செய்து விட்டது. சோழர்களும் பல்லவர்கள் கீழ் சிற்றரசாக ஒடுங்கி விட்டனர்.

களப்பிரர்கள் பாண்டிய நாட்டை அழித்து தமிழ் மொழியையும் விலக்கி பிராகிருதம், பாளி முதலான மொழிகளை தமிழ் மண்ணில் திணிக்க முயன்றனர். பல்லவர்கள் இந்த களப்பிரரை ஒழிக்க விரும்பினர். பாண்டிய மன்னன் ‘பாண்டியன் கடுங்கோன் என்பவன் ஒரு பெரும்படையுடன் வந்து ‘களப்பிர அரசனை வென்று, கொன்று பாண்டிய ஆரசை பின்னும் நிறுவினான். பாண்டிய அரசன் ‘பாண்டியன் கடுங்கோன் ஆட்சியை திரும்ப அமைத்தாலும் அதை பேரரசாக கொண்டுவர முடியவில்லை. பல்லவர்கள் மிக பலம் பொருந்தியவர்களாக இருந்ததால் பாண்டியர்கள் சிற்றரசாகவே இருக்க நேர்ந்தது.

இந்த சமயத்தில் அட்ங்கி ஒடுங்கி இருந்த சோழர்கள் விஜயாலய சோழன் காலத்தில் வீறுகொண்டு எழுந்து ஒரு சோழ அரசை நிறுவினர். பல்லவர்களின் சிற்றரசாக இருந்தவர்கள் பல்லவர்களுக்கு உதவியாக திருப்பியம்போரில் பாண்டியர்களை வெற்றிகொள்ள சோழ இளவரசன் ஆதித்த சோழன் பெரும் பங்கு ஆற்றினான். இதனால் மகிழ்ந்த பல்லவ அரசன் அபராஜித வர்மன் சோழர்களுக்கு தனித்து ஆள உரிமை கொடுத்தான். பின்னர் ஆதித்த சோழன் அபராஜித வர்மனை போரில் தோற்கடித்து யானை மேல் இருந்த அவனை பாய்ந்து சென்று கத்தியால் குத்தி கொன்று பல்லவர்களை தோற்கடித்து சோழ நாட்டை மிக பெரிய சாம்ராஜியமாக செய்து பல்லவ இளவரசியான ‘நிருபமாவையும் திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு பின் வந்த சோழர்கள் அதனை மிக பெரிய சாம்ராஜ்யமாக கொண்டு சென்றனர்.  இதில் சுந்தர சோழர், அவர் மகன் ராஜ ராஜ சோழர், அவர் மகன் ரஜேந்திர சோழர் ஆகியோர் மிக முக்கிய பங்காற்றினர். ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் மிக பெரிய கப்பல் படையுடன் போய் கடாரம் (இப்பொதய மலேசிய, இந்தோனெசிய) வரை ஆட்சி செய்து வந்தனர். அங்கு இந்திய, ஹிந்து மத கோவில்கள் கட்டுவித்தனர். ராஜ ராஜனுன் , ராஜேந்திரனும் வட நாட்டு படையெடுப்பால் பல வட நாட்டு அரசர்களை வென்று வந்தனர். ஈழ நாடும் அவர்கள் கீழ் வந்தது. சோழர்கள் பாண்டியர்களுக்கு பகைவர்களாகவும், நட்பாகவும் இருந்து வந்தனர். ஆகையால் பாண்டியர்கள் தலை எடுக்க முடியாமல் சிற்றரசாகவும் பல முறை தோற்றோடி மறைந்தும் வாழ்ந்தனர்.

இப்படி வாழ்ந்தவர்கள் கடைசியில் மாற்வர்மன் சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய அரச காலத்தில் தான் மீண்டும் சோழர்களை வெற்றிகொண்டு பாண்டிய பேரரசை நிறுவினான். இவன் 1218 இல் சோழனாட்டின் மீது படை எடுத்து உறையூரையும், தஞ்சையையும் தீக்கிரையாக்கினான், இவன் கண்டியூர் ஆயிரம்தளியில் சோழனின் அரண்மனையில் வீராபிஷேகம் செய்துகொண்டான். இவன் 1244 வரை சிறப்பாக ஆட்சி செய்தான். கி.பி 1190 முதல் 1311 வரையுள்ள 120 அண்டுகளுக்கு தான் பாண்டிய பேரரசுக்கு உரியதாக கொள்ளலாம். கி.பி 1216 இல் சோழரை தோற்கடித்தனர். ‘சோணாடு கொண்டருளிஎன்ற பட்ட பெடரையும் சூடிக்கொண்டனர். கி.பி 1311 இல் மொஹமதியரின் படை எடுப்பால் பாண்டியர் மதுரையை விட்டு விட்டு சென்றனர். கி.பி 1258 இல் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்  தலமையை ஏற்று காடவராயன் கோப்பெருன்சிங்கன், காஞ்சி-நெல்லூர் மன்னன் கண்ட கோபாலன் அவனது திக் விஜயத்தை வெற்றிபெற செய்தனர்.

பாண்டியர்காலம் மெல்ல மெல்ல சோர்வுற்று மற்ற படை எடுப்பாலும் சரியான தலமை இல்லாத்தாலும் பொலிவு இழந்து சுருங்கி இரண்டாம் சடைய வர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் (கி.பி. 1344-1352) முஹமதிய படைகளினாலும் விஜயனகர ஆட்சிளார்களின் படைகளாலும் தோரற்கடிக்கப்பட்டு மெல்ல அழிவுற்றது. விஜய நகர அரசன் கம்பணன் முகலாயர்களின் படைகளை தோர்கடித்து மதுரையை கைப்பற்றினான். இதன் பின் விஜய நகர சாம்ராஜியத்தின் மதுரை ஆட்சி தொடங்கியது.





Comments